அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வின் 80-வது பொதுச்சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் காஸாவில் இன அழிப்பை மேற்கொண்டுவருவதாக சர்வதேச நாடுகளால் குற்றம்சாட்டப்படும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு செப்டம்பர் 26-ஆம் தேதி உரையாற்றினார். அவர் உரையாற்றத்தொடங்கியதும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், பாலஸ்தீன மக்களை பட்டினிபோட்டும், ஏவுகணை வீச்சுக்கள் மூலமும் நிர்மூலமாக்கிவரும் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுபோக இஸ்ர

இதுபோக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நெதன்யாகு மீது வழக்கு நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தவிரவும், இத்தனை நாட்களாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காத பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தற்சமயம் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துவருகின்றனர். பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவைத் தவிர்த்து வெகுசில நாடுகளே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.
இந்நிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசத் தொடங்கிய நெதன்யாகு, சாரைசாரையாக எழுந்துசென்ற சர்வதேச பிரதிநிதிகளின் செயல்பாட்டால் அதிர்ச்சியடைந்தார். இருந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளாது, "கடந்த 2023, அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர் ஹமாஸ் அமைப்பினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
போரை நாங்கள் ஆரம்பிக்கவில்லை. அவர்கள் தான் ஆரம்பித்தார்கள். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் குழந்தைகளிடம் யூதர்களை வெறுக்கவேண்டும் என்றும், இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றனர். கிறிஸ்துவின் பிறப்பிடமான ஜெருசலேமிலுள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 80% ஆக இருந்தது. தேசிய ஆணையம் கட்டுப் பாட்டை எடுத்துக்கொண்ட பிறகு, ஜெருசலேமிலுள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 20% க்கு கீழ் குறைந்துபோனது. அங்கு குடியிருந்த கிறிஸ்தவர்கள் என்ன ஆனார்கள்? யாரிடமாவது பதில் இருக்கிறதா? இப்படிப்பட்டவர்களுக்கு தனி நாடு அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம்''’என பாலஸ்தீன வெறுப்பைக் கக்கினார்.
நெதன்யாகு பேசியபோது, அங்கிருந்த நாற்காலிகளில் 70% காலியானது இஸ்ரேலைக் கவலையடையச் செய்துள்ளது.
மற்றொருபுறம் பாலஸ்தீன ஆதரவாளர்கள், "ஹமா ஸின் நடவடிக்கைக்காக கிட்டத்தட்ட 600 நாட்களாக அப்பாவி மக்கள் மீதுதான் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இந்தத் தாக்குதலில் 60,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதில் பெரும்பகுதி பெண்களும் குழந்தைகளும்தான். தனது செயலை நியாயப்படுத்திக்கொள்ள இஸ்ரேலுக்கும் நெதன்யாகுவுக் கும் அருகதை இல்லை'' என விமர்சித்துள்ளனர்.