Advertisment

ஈஷாவின் சிவராத்திரியில் இந்தியக் குடியரசுத் தலைவர்?ஜக்கி மீது கொலைவழக்கு! -சுப.வீ.

ff

தேசிய கவனம்பெறும் விழாவாக ஈஷாவின் சிவராத்திரி விழாவை மாற்றிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை வந்துகுவியும் ஈஷா மையத்தின் அத்துமீறல்களுக்கு இந்த தேசிய கவனம் கிடைக்காதது குறித்து தன் கூர்மைமிகும் சொற்களால் கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழுத் தலைவரான சுப.வீரபாண்டியன்

Advertisment

இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகிறார். மகிழ்ச்சிதானே?

ஆம் மகிழ்ச்சிதான். ஆனால் அவர் அரசுப் பணிகளுக்காகவோ, வேறு எதற்காகவோ வரவில்லை. கோயில் வழிபாடுகளுக்காக, சிவராத்திரியில் கலந்துகொள்வதற்காக வருகிறார். அதனால் என்ன? அது அவர் விருப்பம். ஆனால் அவர் கலந்துகொள்ள வரவிருக்கிற இடம், கோவைக்கு அருகில் இருக்கிற ஈஷா மையம்.

ஈஷா மையத்திற்கு வருவதனால் மட்டும் என்ன பிரச்சினை?

அங்கே பிரச்சினை இருக்கிறது. அதனால் என்ன என்று சொல்லி நாம் கடந்து போய்விட முடியாது. ஈஷா மையத்தின்மீது ஏற்கனவே ஆண்டுக்கணக்கில் பல குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டு கள் எல்லாம் பொய் என்று மெய்ப்பிக்கப்படுகிற வரையில் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ அவர்களின் நிகழ்ச்சிக்கு வருவதன்மூலம் இந்த விசாரணை நேர்மையாக நடப்பதற்கு வாய்

தேசிய கவனம்பெறும் விழாவாக ஈஷாவின் சிவராத்திரி விழாவை மாற்றிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை வந்துகுவியும் ஈஷா மையத்தின் அத்துமீறல்களுக்கு இந்த தேசிய கவனம் கிடைக்காதது குறித்து தன் கூர்மைமிகும் சொற்களால் கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழுத் தலைவரான சுப.வீரபாண்டியன்

Advertisment

இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகிறார். மகிழ்ச்சிதானே?

ஆம் மகிழ்ச்சிதான். ஆனால் அவர் அரசுப் பணிகளுக்காகவோ, வேறு எதற்காகவோ வரவில்லை. கோயில் வழிபாடுகளுக்காக, சிவராத்திரியில் கலந்துகொள்வதற்காக வருகிறார். அதனால் என்ன? அது அவர் விருப்பம். ஆனால் அவர் கலந்துகொள்ள வரவிருக்கிற இடம், கோவைக்கு அருகில் இருக்கிற ஈஷா மையம்.

ஈஷா மையத்திற்கு வருவதனால் மட்டும் என்ன பிரச்சினை?

அங்கே பிரச்சினை இருக்கிறது. அதனால் என்ன என்று சொல்லி நாம் கடந்து போய்விட முடியாது. ஈஷா மையத்தின்மீது ஏற்கனவே ஆண்டுக்கணக்கில் பல குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டு கள் எல்லாம் பொய் என்று மெய்ப்பிக்கப்படுகிற வரையில் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ அவர்களின் நிகழ்ச்சிக்கு வருவதன்மூலம் இந்த விசாரணை நேர்மையாக நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிடாதா?

Advertisment

இன்றைக்கு அவர்மீது வைக்கப்பட்டிருக்கிற குற்றச்சாட்டு, 45 ஏக்கர் நிலத்தை... பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இடத்தை அவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யாக இருக்கலாம், அவர் பொய் என்று மெய்ப்பித்துவிடட்டும், ஆனால் அப்படி மெய்ப்பிக்கிற வரையில் இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற மிகப்பெரும் பொறுப்புகளில் இருக்கிறவர்கள் இங்கே வந்துபோவது என்ன நியாயம்?

subavee

வெறும் ஒரு குற்றச்சாட்டு அல்ல. வரிசை யாக அந்த ஈஷா மையத்தைப் பற்றிய குற்றச்சாட்டு களை "ஓசை', "பூவுலகின் நண்பர்கள்' போன்ற சூழலியல் பிரிவைச் சார்ந்த நண்பர்கள் வைக்கி றார்கள். அதுமட்டுமல்லாமல் நேற்றைக்குக்கூட "குடியரசுத் தலைவர் வரக்கூடாது' என்று இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் எல்லோரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக வனத்திற்கும், கட்டடப் பகுதிக்கும் இடையில் 500 மீட்டர்... அதாவது 1500 அடி இடைவெளி இருக்கவேண்டும். அந்த இடைவெளிப் பகுதிக்கு "பஃபர் ஸோன்' என்று பெயர். ஆனால் இங்கே, அந்த ஈஷா மையத்தில் எந்த இடத்திலும் அப்படிப்பட்ட ஒரு இடைத்தாங்கு நிலம் இல்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

யானைகளினுடைய வலசைப் பகுதி, யானை கள் இயல்பாக வலம் வரும் அந்தப் பகுதிகளை மறித்து, கட்டிடங்களை அவர்கள் கட்டியிருக்கிறார் கள். அப்படிக் கட்டிடம் கட்டுவதற்கு அங்கு "மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையம்' ஹெச்.ஏ.டி.ஏ. என்கிற அந்த ஆணையத்திலிருந்து இவர்கள் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அப்படி அனுமதி எதுவும் வாங்கவில்லை என்று சொல்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் தவறானவை யென மெய்ப்பிக்க வேண்டுமா, வேண்டாமா?

அதுமட்டுமல்லாமல், ஒரு நீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது. "காடுகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டமான, அதிர்வூட்டுகிற ஒலிகளை எழுப்பக்கூடாது' என்று. ஆனால் ஒவ்வொரு சிவராத்திரியிலும் அதைத்தானே அவர் செய்துகொண்டிருக்கிறார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அதுதான் நடக்கப்போகிறது. அதிர்வேட்டுகள், முழக்கம், களியாட்டம், ஆட்டம், பாட்டு... இவையனைத்தும் அங்கே இருக்கிற சின்னச் சின்ன மான் குட்டிகளை, பறவைகளை கலவரப் படுத்திவிடாதா? அந்த காடுகளுக்குள்ளே இருக்கிற விலங்குகள் அதிர்ந்துபோகாதா? இது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதில்லையா? இதற்கு எப்படி உடந்தையாக குடியரசுத் தலைவர் ஒரு பார்வை யாளராக இருக்கலாம்?

பிரதமரும், குடியரசுத் தலைவரும் வந்துபோகி றார்கள் என்று சொன்னால்... அதற்குப் பிறகு அங்கே நடக்கிற ஊழல்கள் அல்லது முறைகேடுகளைப் பற்றி விசாரிப்பதற்கு எப்படி ஒரு காவல்துறை அதிகாரி தைரியமாக உள்ளே நுழைய முடியும்? எப்படி அங்கே விசாரணைகள் நியாமாக நடக்கும்?

யாராவது, விசாரணைக்காக ஒரு காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தால்... என்ன ஆகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவர் முக்தி அடைந்துவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்... அவ்வளவுதான்! உள்ளே போன வனச்சரகர் எஸ்.எம்.பார்த்திபனுக்கு என்ன நடந்தது என்ற எல்லா கதைகளும் நமக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு ஒன்றிய அரசு துணைபோகிறது. அன்றைக்கு ஆதிசிவன் சிலை திறக்கிறேன் என்று திறந்தபோது, பிரதமராக மோடி வந்தார். இன்றைக்கு குடியரசுத் தலைவரே வரு கிறார். இப்படி பெரும் பதவிகளில் இருக்கிறவர்கள் வருவது, அவருக்கு மறைமுகமான பாதுகாப்பாகத் தானே ஆகும்? விசாரணை நியாயமாக நடக்காது என்பதைத்தானே உறுதிப்படுத்தும்?

subavee

எத்தனை சிக்கல்கள்? "காவிரியின் கூக்குரல்' என்று சொல்லி, "காவிரி ஆற்றங்கரை முழுவதும் நான் மரம் நடுகிறேன்' என்றார். உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால், கர்நாடகத்தில் பிறந்த ஜக்கி வாசுதேவ், அங்கிருந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யட்டும்.

இப்போது "மண்ணைக் காப்போம். ஸேவ் த சாயில்' என்று "உலகப் பயணம் நடத்துகிறேன்' என்கிறார். சொந்த மண்ணைச் சுரண்டிக்கொண்டு உலகம் முழுவதும் இருக்கிற மண்ணைக் காப்பாற்றுவோம் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஆன்மிகத்தின் பெயரால் ஒரு மிகப்பெரிய வணிகம் அங்கே நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்டம், பாட்டுகளுக்கெல்லாம் என்ன பொருள்?

ஜக்கி வாசுதேவ் மீது இன்னொரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஒரு புகாரை, அவரின் மனைவியின் பெற்றோர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஜக்கி வாசு தேவின் மனைவி இறந்துபோகவில்லை. இவர்தான் கொலை செய்துவிட்டார் என்று மிக நேரடியாக.

இவ்வளவும் இருக்கிறபோது... எது பற்றியும் கவலைகொள்ளாமல் ஒன்றிய அரசு இப்படி ஜக்கி வாசுதேவ் போன்றவர்களை ஊக்குவிப்பதும், அவர்கள் நடத்துகின்ற விழாக்களுக்கு விருந்தினர்களாக வந்துபோவதும்... இந்த நாட்டில் மேலும், மேலும் அநீதிகள் பெருகுவதற்குத்தான் வழிவகுக்கும் என்பதை ஊருக்கும் உலகுக்கும் உரத்துச் சொல்லவேண்டும்.

"பழங்குடியிலே இருந்து ஒருவரை நாங்கள் குடியரசுத் தலைவராக்கிவிட்டோம்' என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் பழங்குடி மக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டவருக்கு ஆதரவாக அவர் வருகிறார் என்கிற செய்தியை, இன்றைக்கு அங்கே ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து அமைப்புகளும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை ஒன்றிய அரசின் கவனத்திற்கு நம்மால் கொண்டு போகமுடியாது. மக்களின் கவனத் திற்காவது கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான் இத்தனை போராடுகிறோம்.

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe