Advertisment

மோடி அரசை சீண்டும் ஈஷா! வனப் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள்!

isha

மிழக அரசுக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் இடையே பெரிய போராட்டம் ஆரம்பமாகிறது. ஜக்கி வாசுதேவ், உரிய அனுமதி பெறாமல் ஏராளமான நிலங்களை போளுவாம் பட்டி வனப்பகுதியில் கட்டியிருக்கிறார். இது விதிமீறல் என மத்திய அரசின் (CAG) அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள் ளது.

Advertisment

எடப்பாடி ஆட்சிக்காலத்தில் அரசின் பரிசீலனைக்கு அந்த அறிக்கை வந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு அந்த அறிக்கை வைக்கப்பட்டது. அதைப் பற்றி விவாதம் நடத்தப்பட்டது. அவையெல் லாம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று நிலையான அறிக்கையாக உள்ளது என தி.மு.க. அரசின் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கொடுத்த அறிக்கைகள் அப்பட்டமான உண்மை என ஒரு நோட்டீஸை தி.மு.க. அரசு ஜக்கி வாசுதேவுக்கு அனுப்பியுள்ளது.

isha

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கோவை மாவட்டம் என்பவர் பெயரில்தான் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 22-12-2014க்கு மேல் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் கட்டிடம் கட்டக்கூடாது' என சட்டம் இயற்றியுள்ளது.

ஜக்கி வாசுதேவ் 1994 முதல் 48.3 ஹெக்டேர் பரப்பளவில் 1,25,849 சதுர மீட்டர்களில் ஆசிரமம், தங்கும் விடுதி, பள்ளி ஆகியவற்றை போளுவாம்பட்டி வனப்பகுதிக்கு ஒட்டியுள்ள நிலங்களில் கட்டியுள்ளார். அதில், 2006ஆம் ஆண்டு 28,779 சதுர மீட்டர் கட்டப்பட்டது. 2012க்கு பிறகு 91,519 சதுர மீட்டர் கட்டப்பட்டுள்ளது.

2014ல் மத்திய அரசு வன விலங்குகளின் வசிப்பிடங்களுக்கு

2014ல் மத்திய அரசு வன விலங்குகளின் வசிப்பிடங்களுக்கு பக்கத்தில் கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த பிறகு 6,051 சதுர மீட்டர் கட்டிடங்களை கட்டியுள்ளார்.

Advertisment

isha

கணக்குப்படி பார்த்தால், மத்திய அரசு சட்டம் இயற்றிய 22-12-2014க்கு பிறகு 25 கிரவுண்ட் பரப்பளவில் கட்டிடங்களை கட்டியுள்ளார். இது மத்திய அரசின் உத்தரவை மீறிய செயல். ஆகவே, அனுமதியின்றி கட்டப்பட்ட 25 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டிடங்களை அப்புறப் படுத்த வேண்டும். "அவை சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள்' என ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்திற்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஈஷா யோக மையம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த பி.ஆர்.தினேஷ் ராஜா என்பவர் ஈஷாவின் கோவை முகவரியை வைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதே தினேஷ் ராஜாதான் தமிழகத்தில் உள்ள கோயில்களை அற நிலையத்துறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் ராஜபாளையம் பகுதி முகவரியை வைத்து வழக்கு போட்டிருந்தார். ஒரே ஆள் இரண்டு முகவரியில் இரண்டு நீதிமன்றங்களில் வழக்கு போடும் வினோதத்தை ஜக்கி அரங்கேற்றியுள்ளார்.

அந்த வழக்கில், 22-12-2014 என ஒரு தேதியை மாநில அரசு தனது சுய விருப்பத்தின் அடிப் படையில் நிர்ணயித்துள் ளது. அந்த தேதிக்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் சட்ட விரோதமானவை என ஈஷா யோக மையத்தை பழிவாங்கும் நோக்குடன் குற்ற எண்ணத்துடன் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாங்கள் கோவில், மடம் எதையும் அந்த இடத்தில் நடத்தவில்லை. ஒரு பள்ளியைத்தான் நடத்து கிறோம். அந்த பள்ளியில் யோகக் கலை, இந்திய கலாச்சாரம், ஆன்மிகம் ஆகியவற்றை போதிக்கிறோம். அது ஒரு உறைவிடப்பள்ளி. இதுபோல, பல பள்ளிகள் இயங்குகின்றன.

isha

ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து, அதில் அதற்குப் பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் சுற்றுச்சூழல் துறையின் விதிகள் 3(2)(ய)ன் படி செல்லாது எனச் சொல்வது தவறானது. எனவே, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசின் பதிலைத் தாக்கல் செய்யக் கோரிய உயர்நீதிமன்றம், அதுவரை கட்டங்களை அகற்றத் தடை விதித்துள்ளது.

இதுபற்றி சட்ட வல்லுநர்களிடம் நாம் கேட்டபோது, "சுற்றுச்சூழல் என்பது ஒரு பெரிய சப்ஜெக்ட். சுற்றுச்சூழலை காக்க வேண்டுமென போராட்டங்கள் உலகம் முழுக்க நடந்து வருகிறது. 1972-ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்டோக்ஹோம் நகரில் ஒரு சூழலியல் மாநாடு. அந்த சூழலியல் மாநாட்டில் மனிதன், விலங்குகள், சிறு உயிரினங்கள் மற்றும் சொத்துக்கள் இவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி இந்திய அரசு 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியது.

அதுபற்றி 14-09-2006ஆம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கருத்துகளில் ஏராளமான எதிர் கருத்துகள் இடம் பெற்றிருந்தது. அந்த எதிர் கருத்துகளை உள்ளடக்கி 22-12-2014ல் ஒரு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அந்த தேதியில் அரசின் கெஸட்டில் அந்த சட்டம் பற்றிய விதிகள் குறிப்பிடப்பட்டன. ஒரு சட்டம் அரசு கெஸட்டில் வெளியிடப்பட்டால், அது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

isha

காஷ்மீரில் இருக்கும் ஒரு நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 22-12-2014க்குப் பிறகு ஒரு சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியில் கட்டிடம் கட்டினால் அது சட்ட விரோதமான கட்டிடம் என இடிக்கப்படுகிறது. 1972ல் ஆரம்பித்த இந்த முயற்சி கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சட்ட மானது. இந்த சட்டத்தை எதிர்த்து இதுவரை யாரும் வழக்கு போட்ட தில்லை. சுப்ரீம் கோர்ட் இந்த சட்டத்தை பலமுறை தனது தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது'' என்றனர்.

மாநில அரசு கொடுத்த நோட்டீஸ் சட்டப்படியான நோட்டீஸ் தான். அதை எதிர்த்து ஜக்கி வாசுதேவ் வழக்கு போட்டுள்ளார். இதுபற்றி நம்மிடம் கருத்து கூறிய பிரபல வழக் கறிஞர் நடராஜன், "மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அதை எப்படி அமல்படுத்துவது என்பதற்கான விதிகளையும் வழிமுறைகளையும் மாநில அரசுகள் வகுத்துக் கொள்ளும். இது ஒரு இயல்பான நடைமுறை.

மாநில அரசு கொடுத்த ஒரு நோட்டீஸுக்கு எதிராக வழக்கு போடுகிறேன் என ஜக்கி வாசுதேவ் மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டம் என ஒன்றை தனது கெஸட் அறிவிப்பாக அறிவித்த 22-12-2014 என்கிற தேதியை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார். அவர் மாநில அரசை எதிர்த்து வழக்கு போடவில்லை. உண்மையில் மத்திய அரசை எதிர்த்துதான் வழக்கு போட்டுள்ளார்.

1972ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழலுக்காக உலகளவில் எடுத்த முயற்சிகளின் பலனாக இருந்த இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசு அறிவித்த தேதிக்குப் பிறகு ஜக்கி வாசுதேவ் ஏகப்பட்ட கட்டிடங்களை கட்டியுள்ளார். அதை அவர் கல்வி நிறுவனம் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த கட்டிடங்கள் அமைந்துள்ள ஜக்கியின் இடத்தை ஆசிரமம் என்றே குறிப்பிடுகிறார். அதில் கோவில், மத தொடர்பான நடவடிக்கைகள், ஆசிரமம் ஆகியவை இருக்கின்றன.

கல்வி நிறுவனம் என குறிப்பிட்டால் கோர்ட் சலுகை காட்டும் என நினைத்து வழக்கு போட்ட ஜக்கி, மத்திய அரசின் சட்டத்தை குற்றம் என குறிப்பிடுகிறார். இந்த தேதி என்பது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். ஜக்கி மட்டுமல்ல பலர் இதுபோன்ற வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களை 22-12-2014க்கு பிறகு கட்டியுள்ளனர். சமீபத் தில் நீலகிரியில் யானைகளின் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை தமிழக அரசு அப்புறப்படுத்தி யுள்ளது. அதுவும் இந்த சட் டத்தின் அடிப்படையில்தான்.

ஒருவேளை ஜக்கிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் செல்லாத தாகிவிடும். எனவே, ஜக்கியின் இந்த வழக்கு கோர்ட்டில் நிற்காது'' என்கிறார்.

ஜக்கிக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான போராட்டம் தீவிரமாகியுள்ளது. ஜக்கி இந்து அறநிலையத் துறையை கலைக்கச் சொல்லி ஒரு வழக்கு போடுகிறார். தமிழக அரசு ஜக்கி அனுமதி யில்லாமல் கட்டிடம் கட்டியிருக்கிறார் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை எதிர்த்து ஜக்கி வழக்கு போட்டிருக்கிறார். இந்த மோதல் ஒரு பெரிய சட்டப் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

nkn150122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe