"எனக்கு மயக்க திரவத்தை குடிக்கக் கொடுத்து, மயங்கிய நிலையிலிருந்த என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டான் ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ்'' என அமெரிக்க வாரன் கவுண்டி ஷெரீப் அலு வலகத்தில் புகார் ஒன்றுவர, ஜக்கி வாசு தேவ் மீது ரேப் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இலக்கம் 561, கௌரி வழி, MCMINNIVILLE, TN 37110-H சேர்ந்த நீத்தா ஜெயகாந்தன் என்பவர், டென்னஸி மாகாணத்திலுள்ள வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தை அணுகி, "எனக்கும், என்னுடைய கணவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்தன. அதுபோக, நிலையில்லாத வேலை, பொரு ளாதாரப்பிரச்சனைகள் அதிகம் இருந்தது. இது குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரிய வில்லை. எந்த கடவுள் என்னுடைய பிரச்சனை யெல்லாம் சரி செய்வார்? எனக் காத்திருந்த நிலையில் தான் டென்னஸி எம்சிமின்னிவில்லி, டிஎன் 37110-லுள்ள ஈஷா யோகா மையம் பற்றி தெரியவந்தது. அந்த யோகா மையத்தின் மின்னஞ்சல் முகவரியை வாங்கி, என்னுடைய பிரச்சனையெல்லாம் அதில் பதிவிட்டேன். சில நாட்களில் ஈஷா யோகா மையத்தின் நிறு வனரும், வாழும் கடவுளுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் என்னை நேரில் பார்க்க அனுமதித்திருப்பதாகக் கூறினார்கள். மனித வடிவில் உள்ள கடவுளே என்னை அழைக்கிறாரா? ஆச்சரியம்தான்! பலரும் ஒரு முறையாவது அவரைப் பார்க்கக் காத்துக் கிடக்கின்றார்கள். நமக்கு அந்த வாய்ப்பு எளிதாக வந்துள்ளதே என நினைத்தேன். அவர்கள் கூறியபடி, அவரை சந்திப்பதற்கான நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன்.
சரியாக 06-01-2012 மாலை மூன்று மணி இருக்கும், சுவாமி தங்களை வரச்சொன்னார் எனக்கூற, மிகுந்த மன மகிழ்ச்சியுடன் நடந்து சென்றேன் என்பதை விட, அவரைக் காண ஓடினேன் என்று தான் கூறவேண்டும். ஏனெனில், அவர் என்னுடைய அனைத்து பிரச்சனைகளை யும் தீர்த்து விடுவார் அல்லவா? அந்த நம்பிக்கையுடன் சந்திக்கச் சென்றேன். அங்கு, தனியறையில் அவர் அமைதி யாக தியானத்தில் இருப்பது போல் உட்கார்ந்து இருந்தார். நானும் அவர் கண் திறந்து என்னைப் பார்ப்பாரா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் பக்கம் பார்வை யை திருப்பிய ஜக்கி வாசுதேவ், "உன்னுடைய கணவனை சூழ்ந்த கெட்ட ஆத்மா உன்னையும் சூழ்ந்து கொண்டிருக் கின்றது. அதனை சரி செய்தால் மட்டுமே உன்னுடைய பிரச்சனை தீரும். இது ஆன்மிகத்தின் உயர்ந்த நிலை. அதற்கு ஒரு சடங்கு செய்ய வேண்டும்" என்று பேசிக் கொண்டே, அங்கு ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த செம்பு டம்ளரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி என்னிடம் குடிக்கக் கொடுத்தார். நமக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என ஜக்கி வாசுதேவ் கொடுத்த அந்த திரவத்தை குடித்து விட்டேன். அவர் அதற்கடுத்து பேசப் பேச அரைகுறை மயக்கத்தில் கேட்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் ஆடைகள் களையப்பட்டதை அறிந்தேன். ஆனால், போராட முடியவில்லை. வலுக்கட்டாயமாக என்னை அவனுடைய பாலியல் இச்சைக்கு பலியாக்கினான்' எனப் புகார் கொடுத்துள்ளார். ஸ்பென்சர் பிரையர் என்ற புலனாய்வாளரைக் கொண்ட வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகம் புகாரை தரவாக விசாரித்து, அதற்குண்டான ஆவணங்களைக் கைப்பற்றி, ஜக்கி வாசுதேவ் மீது "ரேப்' வழக்கினை பதிவு செய்தது. (வழக்கு எண்: 2025-01374). இந்த விஷயம் டென்னஸி மாகாணத்திலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு தகவல் கசிய, உள்ளூர் பத்திரிகை களிலும், தொலைக்காட்சிகளிலும் ஜக்கி வாசுதேவ் ரேப் புகாரில் வறுத்தெடுக்கப்பட்டது தனிக்கதை.
இது இப்படியிருக்க, "என்னை பாலியல் வன்புணர்வு செய்த ஜக்கி வாசுதேவ் மீது "ரேப்' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்னும் அவனால் "ரேப்' செய்யப்பட்ட பெண்கள் புகாரளிக்க வருவார்கள்'' என சமூக வலைத் தளத்தில் நீத்தா ஜெயகாந்தன் பதிவிட, அவருக்கு எதிராக "டென்னஸி மாகாண ஈஷா யோகா மைய பொறுப்பாளர் செந்தில் கன்னியப்பன் அவதூறு பரப்பு கின்றார்' என ஷெரீப் அலுவலகத்தில் புகாரளிக்க... "வழக்கு முடியும்வரை இது குறித்து இரு தரப்பும் பேசக்கூடாது' என் றது வாரன் கவுண்டி ஷெரீப் அலுவலகம். இதே வேளையில், அமெரிக்காவின் "க்ரீன் கார்டு' வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவின் க்ரீன் கார்டை ரத்து செய்ய வேண்டும். குடியுரிமை கொடுக்கக்கூடாது' என அமெரிக்க அரசிற்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர் ஜக்கி வாசுதேவால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆன்மிகச் சடங்கு எனும் பெயரில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த ஜக்கி வாசுதேவ் மீது அமெரிக்காவில் "ரேப்' வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எப்பொழுது?