பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் கோவை - ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும், அங்கு அமைந்துள்ள தியான லிங்கம் மற்றும் சுடுகாடு பற்றியும் ஆன்மிகவாதிகள் வெளிப்படுத்திவரும் ஆதங்கத்தை, கடந்த இதழில் "நெறிமுறை களை மீறிய ஈஷா லிங்கம் - சுடுகாடு! ஆன்மிகவாதிகள் அதிருப்தி!'’என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூடத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
"ஜக்கி வாசுதேவ் ஆன்மிகவாதியா? யோகா மாஸ்டரா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த இரண்டிலுமே அவர் சேர்த்தி இல்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்தான் ஜக்கி. இவரை மட்டுமல்ல, ஒரு டீமையே இந்துத் துவ சக்திகள் உருவாக்கினார்கள். அதாவது, 1992 - 1994 காலக்கட்டத்தில் அயோத்தி பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பார்வையை உலகம் முழுவதும் கொண்டுவரவேண்டும் என்று திட்டமிட்டு ஜக்கி போன்றவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இந்துத்துவ சக்திகளின் செயல்பாட்டுக்கு தகுந்தாற்போல் யார் வளர்கிறார்களோ, அத்தகையவர்களை நீரும் உரமும் அளித்து ஊக்கப்படுத்தி வளர்த்தார்கள். அப்படி வளர்ந்தவர்கள்தான் நித்தியானந்தாவும், ஜக்கி வாசுதேவும். இந்த இருவரைப் போலவே, வடநாட்டில் யோகா குரு என்பவரை வளர்த்தனர். இவர்கள் அனைவருமே கமர்சியல் அடிப்படையில் இருக்கவேண்டும் எனப் பக்காவாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப் பட்டவர்கள். இவர்களுடைய குற்றப் பின்னணியும், பின்புலமும் அவர்களுக்குத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவில் இவர்களுடைய செயல்பாடுகளும், பாடி லாங்குவேஜும் ஆன்மிகம் சார்ந்ததாக இல்லை. ஏனென்றால், அதற்காக இவர்கள் வளர்க்கப்படவில்லை. நாங்களும் ஆன்மிகப் பணி செய்கிறோம் என்று சில வீடியோக்களை வெளியிட்டு, அத
பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் கோவை - ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும், அங்கு அமைந்துள்ள தியான லிங்கம் மற்றும் சுடுகாடு பற்றியும் ஆன்மிகவாதிகள் வெளிப்படுத்திவரும் ஆதங்கத்தை, கடந்த இதழில் "நெறிமுறை களை மீறிய ஈஷா லிங்கம் - சுடுகாடு! ஆன்மிகவாதிகள் அதிருப்தி!'’என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூடத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
"ஜக்கி வாசுதேவ் ஆன்மிகவாதியா? யோகா மாஸ்டரா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த இரண்டிலுமே அவர் சேர்த்தி இல்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்தான் ஜக்கி. இவரை மட்டுமல்ல, ஒரு டீமையே இந்துத் துவ சக்திகள் உருவாக்கினார்கள். அதாவது, 1992 - 1994 காலக்கட்டத்தில் அயோத்தி பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பார்வையை உலகம் முழுவதும் கொண்டுவரவேண்டும் என்று திட்டமிட்டு ஜக்கி போன்றவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இந்துத்துவ சக்திகளின் செயல்பாட்டுக்கு தகுந்தாற்போல் யார் வளர்கிறார்களோ, அத்தகையவர்களை நீரும் உரமும் அளித்து ஊக்கப்படுத்தி வளர்த்தார்கள். அப்படி வளர்ந்தவர்கள்தான் நித்தியானந்தாவும், ஜக்கி வாசுதேவும். இந்த இருவரைப் போலவே, வடநாட்டில் யோகா குரு என்பவரை வளர்த்தனர். இவர்கள் அனைவருமே கமர்சியல் அடிப்படையில் இருக்கவேண்டும் எனப் பக்காவாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப் பட்டவர்கள். இவர்களுடைய குற்றப் பின்னணியும், பின்புலமும் அவர்களுக்குத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவில் இவர்களுடைய செயல்பாடுகளும், பாடி லாங்குவேஜும் ஆன்மிகம் சார்ந்ததாக இல்லை. ஏனென்றால், அதற்காக இவர்கள் வளர்க்கப்படவில்லை. நாங்களும் ஆன்மிகப் பணி செய்கிறோம் என்று சில வீடியோக்களை வெளியிட்டு, அதற்கான செயல் திட்டங்களாக, மரம் வளர்க்கிறோம், உணவளிக்கிறோம், இயற்கையைப் பாதுகாக்கிறோம், ஏழைகளுக்கு உதவுகிறோம், கல்வி வளர்ச்சி மற்றும் மருத்துவம் போன்றவற்றில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் மக்களிடம் எளிதாகப் போய்ச் சேர்ந்துவிட்டனர். ஜக்கி போன்றவர்களின் பின்னால் செல்பவர்கள், ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேடக்கூடி யவர்கள். ‘ஒரு பேனருக் குள் நானும் இருக் கிறேன், பார்த்தாயா?’ என்ற மனோபாவம் கொண்டவர்கள். இத்தகையவர்களைச் சரியாகப் புரிந்துகொண்டுதான், ஜக்கி இத்தனை பெரிதாக வளர்ந்துவிட்டார். இதைச் செய்வதற்கான சுதந்திரமும், செலவு பண்ணுவதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது.
சிதிலமடைந்து கிடக்கும் கோவில் களைக் காட்டி, அதைச் சுத்தம் செய்து, இந்தக் கோவிலைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்டு, கார்ப்பரேட் சிந்தனையோடு அதை வீடியோ கவரேஜ் செய்து பரவலாக்கி, ‘"பாருங்க.. நம்முடைய பண்பாடு எப்படி சிதைந்து போகிறது?'’எனச் சொல்லி, மக்களிடமும் அதிகார மட்டத்தில் உள்ளவர் களிடமும் அதைப் பேசுபொருள் ஆக்கினார்கள். இதுதான் அவர்களின் யுக்தி, வெற்றி.
அங்கங்கே சின்னச் சின்ன வகையில் ஆன்மிகப் பணி செய்துகொண்டிருந்தவர் களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். அவர்களில் ஜக்கியின் சுயரூபம் தெரிந்து தப்பியவர்களும் ஏராளம், சிக்கியவர்களும் ஏராளம். ஆறுகளைப் பாதுகாக்கிறேன் என்று அடுத்த திட்டமிடலைக் கையில் எடுத்தார் ஜக்கி. அந்த நேரத்தில், சிறுசிறு ஆன்மிகப் பணி செய்பவர்கள், ஆதீனங் கள் மற்றும் இறைப்பணி செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒருசிலர் போனார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆதீனங்கள் செய்ய மறந்த பணிகளைச் செய்யாமல், கடமையிலிருந்து விலகினார்கள். ஆத்மார்த்த மாக ஆதீனங்கள் இந்தப் பணிகளைச் சரிவர செய்திருந்தால், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட்டுகள், தமிழ்நாட்டில் கால் பதித்திருக்க முடியாது. ஆதீனங்களே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். இதையெல்லாம் ஜக்கி டீம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.
இங்கு என்னென்ன தேவைகள் இருக் கின்றன? என்னென்ன பிரச்சனைகள் இருக் கின்றன? இவற்றை எப்படி கொண்டு சென்றால் மக்கள் மத்தியில் பேசப்படும்? இதை எப்படி உலக வர்த்தக ரீதியாக மாற்றிக்கொள்ள முடியும்? இந்த திட்டமிடலோடுதான், ஜக்கி அனைத்தையும் செய்தார். இது இங்குள்ள ஆதீனங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர்கள் கண்டுகொள்ளாமல் போனதன் விளைவுதான், மின் மயானம் அமைக்கும் அளவிற்கு ஈஷா போனது.
கார்ப்பரேட் சிந்த னையுடன் ஜக்கி கையிலெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உலக அளவில் செல்வதைப் பார்த்து இளைஞர்களும் இளம்பெண்களும் ஈர்க்கப்பட்டனர். முழு ஈடுபாட்டுடன் அப்படி ஈஷாவுக்குச் சென்ற வர்கள் பாதியிலேயே வெளியேறவும் செய்தனர். காரணம், அங்கே முழுக்க முழுக்க கார்ப்பரேட் பார்வை மட்டுமே இருந்திருக்கிறது. அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அங்கே மனிதகுலத்துக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான செயல்கள் நடக்கிறதென்று வெளியே வந்துவிட்டார்கள். ஈஷாவில் நடப்பது ஒன்றிரண்டு தவறல்ல. ஒட்டுமொத்தமும் தவறாகவே இருக்கிறது. இதை எப்படி சரி செய்யவேண்டும் என்றால், இங்கே உள்ள பணிகள் சரியாக நடக்கவேண்டும். இங்குள்ள ஆதீனங்கள், தங்களுடைய கடமைகளைச் சரிவர செய்யவேண்டும். அவர்கள் செய்யத் தவறிய தால்தானே, ஆன்மிகத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்கின்றன.
அதேநேரம், இந்துத்துவ சக்திகளுக்கு மிகப்பெரிய பேக்ரவுண்ட் இருப்பதால், வழக்குகள், பிரச்சனைகள் எது வந்தாலும் தூசு தட்டுவதுபோல் தட்டித் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். ஜக்கியின் முகத்தைப் பார்த்தாலே தெரியும். ‘நம்மள யாரும் எதுவும் பண்ணிட முடியாது’ என்கிற திமிர் தெரியும். யார் அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களை அழைத்துக்கொண்டு வரமுடியும் என்ற அரசியல் பலமும், மறுபுறம் சினிமா பிரபலங்களின் பலமும் அவருக்கு இருக்கிறது. இந்த மக்களுக்கு இது போதும் என்பதை நன்கு தெரிந்துகொண்டு வளர்ந்துவிட்டார் ஜக்கி.
ஒரு புத்தகத்தை வெளியிடுவதையே கிளாசிக்கலாகச் செய்ய நினைக்கிறார் ஜக்கி. அதையே திருவாவடுதுறை ஆதீனமாகட்டும், திருப்பனந்தாள் ஆதீனமாகட்டும், தருமபுரம் ஆதீனமாகட்டும், இவர்கள் வெளியிடும் புத்தகங்களையும், ஈஷா வெளியீடு புத்தகங்களையும் நிறுத்துப் பார்த்தாலே, ஈஷா ஏன் வளர்கிறது என்பது தெரிந்துவிடும்.
மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களுக்கு ஏதாவது உதவுவதுபோல் உதவி செய்துவிட்டு, அதை அம்மக்களின் ஆதரவைப் பெறுவதுபோல் வீடியோக்கள் எடுத்துப் பதிவு பண்ணிவிடுவார்கள். அவர் களின் ஏழ்மையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துவிட்டார் ஜக்கி. அதை வெட்டவெளிச்சமாக்கும் வகையில், ‘எங்களைப் பாதுகாக்கிறார்; மருத்துவ உதவி செய்கிறார்; கல்வி உதவி செய்கிறார்..’ என்று கூறும் அளவுக்கு அம்மக்களை மடைமாற்றி வைத்துக்கொண்டு, ‘நாங்கள் இறை பணி தான் செய்கிறோம். அதோடு மக்கள் சேவையும் செய்துவருகிறோம்.’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்.
ஜக்கியை இந்துத்துவ சக்திகள் பக்காவாக கையில் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரை இப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் தடுத்து நிறுத்திவிட முடியாதபடி ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். ஆரம்பித்தபோதே, இவரது பின்னணி குறித்து விசாரித்து களை எடுத்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டதால், அபாய கூடாரமாக மாறி நிற்கிறது ஈஷா. பெண்களை ஆன்மிகம் என்ற போர்வையில் இழிவுபடுத்தும் நிலைக்கு போயிருக்கிறது.
கோயம்புத்தூரில் எத்தனையோ பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஆனால், ரயில்வே லோகோவாக ஈஷா யோகா மையத்தின் தியான லிங்கம் போடப்படுகிறது. மருதமலை போன்ற எத்தனையோ ஆலயங்கள் இருந்தும், தியான லிங்கம்தான் ரயில்வே லோகாவாக வர வேண்டும் என்ற கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜக்கி. மக்களிடம் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டால், எவ்வளவு பெரிய தவறு ஈஷா மையத்தில் நடந்தாலும், செய்தாலும், அதை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற யுக்தியைத்தான் ஜக்கி கையாள்கிறார். இதனை முறியடிக்க வேண்டுமென்றால், பாரம்பரிய ஆதீனங்கள் முன்வர வேண்டும்; தொண்டு செய்யவேண்டும். அவர்கள் முடங்கியதால்தான் ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வளர்கின்றனர்.
ஜக்கியின் யோகா மையத்தில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. சிவராத்திரியின்போது போனால், யார் வேண்டுமானாலும் சிவலிங்கத்தைத் தொட்டு, பாலாபிஷேகம் நடத்தி, பூஜை செய்யலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார். இங்கே கோவில் கருவறைக்குள் போகக்கூடாது, சாமியைத் தொட்டுப் பார்க்கமுடியாது என்ற கட்டமைப்பு இருக்கிறது. ஈஷா விலோ, பாரம்பரிய சிவலிங்கமாக இல்லையென்றாலும் கூட, தொட்டுப் பார்க்க முடிகிறதே என்ற மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட்டனர். இந்த எண்ணத்தோடுதான் ஒரு பெரிய கூட்டம் ஈஷாவுக்குப் போகிறது. சிறுகச் சிறுகப் போன கூட்டம் பெரிதாகிவிட்டது. சிவலிங்கத்தை எப்படி வச்சிருக்காங்க? கட்டடக் கலைகள் எப்படி இருக்கின்றன? எவ்வளவு அமைதியாக இருக்கிறது?’ என்ற செய்திகள் பரவலாக்கப்பட்டு, அதைப் பார்ப்பதற்கென்றே கூட்டத்தை வரச்செய்து, அந்தக் கூட்டத்தைக் காட்டியே வளர்ந்துவிட்டார் ஜக்கி.
யோகா கற்றுக்கொள்ளவும், ஆன்மிக நாட்டத்தில் போனவர்களும், அங்கு நடக்கின்ற அக்கிரமங்களைக் கண்டு நொந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கிவிட்டார்கள். விரைவில் இதற்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆன்மிகப் போர்வையில் புற்றீசல் போல் வளர்ந்து வருபவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் செய்யும் தவறுகளால், அவர்களாகவே அழிந்துவிடுவார்கள். பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற உதாரணங்கள் உண்டு. விரைவில் ஜக்கிக்கும் ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. மக்கள் மத்தியில் அங்கு நடக்கின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கிவிட்டன.
தமிழக அரசு, ஈஷா யோகா மைய விவகாரத்தில் முழு கவனத்துடன் செயல்பட்டு, அங்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு உரிய முறையில் முழுப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்''’என்றார் சமூக அக்கறையுடன்.
நெறிமுறைகளை மீறும் ஜக்கி குறித்த ஆன்மிக வாதிகளின் ஆதங்கம் தொடரும்...…
-ராம்கி, செல்வகுமார்