தமிழகத்தில் உள்ள கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து கைப்பற்றி அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் எழுப்பிய கோரிக்கை அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா பவுண் டேஷனை கைப்பற்றி அதை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வேறு வழிகளில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் குவிந்து வருகிறது.
ஈஷா பவுண்டேஷன் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. போளுவாம்பட்டி வனப்பகுதிக்குப் பக்கத்தில் ஆசிரமம், கோவில் என 48.3 ஹெக்டேர் பரப்பள வில் அமைந்துள்ளது. இந்த அமைப் பிற்குள் யோகேஸ்வர லிங்கா என்ற சிவலிங்கம் இருக்கிறது. பாதரசம் கலந்து அமைக்கப்பட்ட இந்த யோகேஸ்வர லிங்கத்துடன் ஆதி யோகி ஆலயம் என்ற ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் களுடன் ஒரு பிரமாண்டமான சிவனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளத
தமிழகத்தில் உள்ள கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து கைப்பற்றி அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் எழுப்பிய கோரிக்கை அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா பவுண் டேஷனை கைப்பற்றி அதை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வேறு வழிகளில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் குவிந்து வருகிறது.
ஈஷா பவுண்டேஷன் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. போளுவாம்பட்டி வனப்பகுதிக்குப் பக்கத்தில் ஆசிரமம், கோவில் என 48.3 ஹெக்டேர் பரப்பள வில் அமைந்துள்ளது. இந்த அமைப் பிற்குள் யோகேஸ்வர லிங்கா என்ற சிவலிங்கம் இருக்கிறது. பாதரசம் கலந்து அமைக்கப்பட்ட இந்த யோகேஸ்வர லிங்கத்துடன் ஆதி யோகி ஆலயம் என்ற ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் களுடன் ஒரு பிரமாண்டமான சிவனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிரதிஷ்டை என்கிற வேத மந்திரங்களால் உபதேசிக்கப்பட்டு அமைக்கப்பட்ட அமைப்பு. எல்லோரும் இதை சிவன் என்ற சொல்கிறார்கள். நான் இதை ஆதி யோகி என்று சொல்கிறேன் என ஜக்கி அறிவிக்கிறார். இங்கே 21 வாரம் நடக்கும் சடங்குகளால், யோகக் கலைகள் மூலம் சிவனை அடையும் வழிகள் என அவர் குறிப்பிடுகிறார்.
யோகக் கலை என்பது ஒரு உடற்பயிற்சி. ஆனால் அதில் மதத்தை கலந்து வழிபாட்டை ஊக்குவித்து அந்த இடத்தை இந்துக்கள் வழிபடும் கோவிலாக மாற்றி இருக்கிறார். இந்து அறநிலையத்துறை சட்டம் செக்ஷன் 6 (2) அடிப்படையில் இந்துக்கள் வழிபடும் எந்த இடமும் ஆலயமே. 1957ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் வழிபாடு மட்டும் செய்வதில்லை. தங்க பைரவி எந்திரம், வேதி எந்திரம் என இரண்டு எந்திரங்களை பக்தர்களுக்கு தருகிறார். இந்த 2 எந்திரங்கள் வீட்டில் இருந்தால் வாழ்க்கை வளமாகும் என குறிப்பிடுகிறார்.
அத்துடன் சிவனின் கண்ணீர் எனப்படும் ருத்ராட்சத்தை பக்தர்களுக்கு தருகிறார். அந்த ருத்ராட்சம் மூலம் தீட்சை பெற்றால் வாழ்க்கை வளமுறும் என கூறுகிறார். அத்துடன் இந்த அமைப்புக்கு அளவின்றி நன்கொடை தரலாம் என அறிவிக்கிறார்.
இந்து அறநிலையத்துறை சட்டப்படி ரூ.10,000க்கு குறையாமல் வருமானம் வரும் வழிபாட்டுத் தலங்களை இந்து அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். தேவையென்றால் அதைக் கைப்பற்ற வேண்டும் என தெளிவாகக் கூறுகிறது.
அத்துடன் மகா சிவராத்திரி என ஒரு விழாவை நடத்துகிறார். ஏகப்பட்ட நன்கொடைகள் பெறுகிறார். அந்த மகா சிவராத்திரிக்கு வரமுடியாதவர்கள் வீட்டிலேயே தியான லிங்க ஜோதி என்கிற விளக்கை ஏற்றி இவருடைய படத்தை வைத்து ஓம் நமசிவாயா என உச்சரிக்க வேண்டும் என கட்டளையிடுகிறார்.
இவரே சிவனாக உருவெடுக்கிறார். இவரது உருவ அமைப்பைக் கொண்ட ஆதி யோகி சிலையையும் நிறுவியிருக்கிறார். இந்துஅறநிலையத்துறை சட்டம் செக்ஷன் 6 (13)-ன்படி, ஒரு கோவில் அதற்குரிய சொத்துக்களுடன் ஒருவர் உருவாக இருந்தால் அது மடம் என தெளிவாக சொல்கிறது. அத்துடன் இவர் வெளிநாடுகளில் பணம் வசூல் செய்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு தொண்டு நிறுவனங்களுக்கு வரும் கமிஷனில் தன்னை ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்து வெளிநாட்டிலிருந்து நிதி பெறுகிறார்.
அத்துடன் வியாபாரமும் செய்கிறார். ஈஷா பவுண்டேஷனுக்கு பாரத ஸ்டேட் வங்கி 1 கோடியே 15 லட்ச ரூபாய் நிதியாகக் கொடுத்தது. அதை ரவி என்பவர் கேள்வி கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு போட்டார். அதற்கு பதிலளித்த பாரத ஸ்டேட் வங்கி, "இந்த தகவல்களை உங்களுக்கு தரமுடியாது. இதில் ஈஷா பவுண்டேஷனின் வியாபார விஷயங்கள் நிதி விவகாரங்கள் வெளியே வரும்' என பதிலளித்தது.
இப்படி கோவில், மடம், அறக்கட்டளை என அனைத்து விதத்திலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டங் களில் இடம் பெறும் அனைத்து விஷயங்களையும், ஈஷா யோக மையத்தில் ஜக்கி செய்து கொண்டிருக்கிறார். அதனால் ஈஷா மையத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என பாய்ந்து வந்த கோரிக்கைகளைப் பார்த்து இந்து அறநிலை யத்துறை மிரண்டுபோனது.
முதலில் வந்த கோரிக்கை களை கோவையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெனாவெட் டாக பதில் சொல்லியிருக் கிறார்கள். ஆனால் தொடர்ந்து வந்த மனுக்கள் இந்து அற நிலையத்துறை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பிரபல வழக்கறிஞர் நடராஜன், "இந்து அறநிலையத்துறை இந்த கோரிக்கை மனுக்களை புறந்தள்ளிவிட முடியாது. அதற்கு உரிய பதிலை கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஈஷா மையத்தை அறநிலையத்துறை சட்டத்தின்படி கைப்பற்ற வேண்டும் என்பது கோர்ட்டில் வழக்காகவும், மக்கள் இயக்கமாகவும் மாறும்'' என்றார்.