"ஈஷா மீது அடுத்தடுத்து வழக்கு வரு கின்றது. ஈஷா சேர்த்துவைத்துள்ள சொத்திற்கும் வராமலிருக்கப் போவதில்லை. யோகா பயிற்சி மையம் என்பது கல்வி என்ற வகைப்பாட்டில் வருவதால் கல்வி நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட கட்டடங்கள் என்பதால், கட்டும்போது முன்னதாக தடையின்மை சான்று தேவையில்லை என்கின்ற அடிப்படை வாதத்தினைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் முத்திரை வாங்கிவிட்டால் போதும், கட்டடத்தைக் காப்பாற்றி விடலாம்'' என்கின்ற கிரிமினல் சிந்தனையுடன் உச்சநீதிமன்றத்தில் கோக்கு மாக்கு செய்து வருகின்றது ஈஷா தரப்பு.
கடந்த பிப்ரவரி 14 அன்று, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக, ஈஷாவிற்கு எதிரான தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. 2006 முதல் 2014 வரை கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் அனுமதியில்லாமல் சில கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்காக ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக, 2021ஆம் ஆண்டு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. ஈஷா அறக்கட்டளை குழு, மேம்பாட்டு நடவடிக் கைகளை மேற்கொண்டு யோகா மையத்தை நடத்துவதால், அது ஒரு கல்வி நிறுவனமாகக் கருதப்படும் என்றும், எனவே கட்டுமான நடவடிக்கைகளுக்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து மத்திய அரசு வழங்கிய விலக்குக்கு உரிமை உண்டு என்றும் கூறி, டிசம்பர் 2022-ல், சென்னை உயர் நீதிமன்றம் அந்த ஷோகேஸ் அறிவிப்பை ரத்து செய்தது.
இதையடுத்து சில கால தாமதத்துக்குப்பின் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தை அணு கியது. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், "உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக கடந்த 2 ஆண்டு களாக தமிழக அதிகாரிகளைத் தடை செய்தது எது? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? தமிழக அரசு இந்த விவகாரத்தினை திடீரெனக் கொண்டு வந்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுபோன்ற வழக்கு களுக்கு முன்னுரிமை அளித்து விசா ரணை நடத்தினால் சாதாரண மனி தர்கள் எங்கே போவார்கள்?'' எனக் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். "உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் தாமதம் வேண்டுமென்றே செய்யப் படவில்லை. இந்த விவகாரம் சில துறைகளுக்கு இடையே தொடர்ந்து நடந்து கொண்டி ருந்தது. இது மாநில அரசுக்கு வந்தபோது, உடனடியாக அதை நீக்கியது. அனுமதிக்காக அவர்கள் விண்ணப்பம் செய்தபோது அங்கு கட்டடம் கட்டப்படுவதாக இருந்தது. எனினும் 2012ஆம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் தடையின்மை சான்றுக்கு உட்பட்டது என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது.
ஆனால், அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என்றனர்'' என வாதத்தை துவக்கினார் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். அதற்கு பதிலாக, "அந்த பயிற்சி மையமானது கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தின் வகைப்பாட்டில் வருவதால் மத்திய அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் தடையின்மை சான்று தேவையில்லை என்று அதிகாரிகள் ஈஷா பவுண்டேஷனிடம் கூறியிருக்கின்றனர்'' என்றனர் நீதிபதிகள். இதனிடையே ஈஷா தரப்பில் ஆஜரான முகுல் ரோஹத், "ஈஷா மையத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் இரண்டு வாரம் கழித்து விசாரிக்கலாம். எங்களிடம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகள் உள்ளன. இதர அனுமதிகளும் உள்ளன. அந்த இடத்தில் 20 சதவிகிதம் மட்டுமே கட்டுமானம் கட்டப்பட்டுள் ளது. 80 சதவிகிதம் பசுமைப் பரப்பாகவே விடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறந்த யோகா மற்றும் தியான மையமாக ஈஷா உள்ளது. நான் அதற்கான புகைப்படங்களை சமர்ப்பிக்கின்றேன்'' என்றார். இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை இரண்டு வாரம் கழித்து விசாரிப்பதாக நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.
"தனக்கு இருக்கும் அனைத்துப் பிரச்சனை களுக்கும் தீர்வு உச்ச நீதிமன்றம் தான் என நினைக்கின்றார் ஜக்கி வாசுதேவ். ஒன்றிய அரசு நெருக்கம் காட்டுவ தால்தான் இந்த முடிவு. வருகின்ற சிவராத்திரி விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையே இதற்கு சாட்சி. இந்த வழக்கு ஜக்கிக்கு ஆதரவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு சாட்சியையும் தெளிவுப்படுத்து கின்றேன். அதாவது, என்னுடைய மகள்களை மீட்க நான் வழக்காடு மன்றம் சென்றபோது உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி, ஈஷா அறக்கட்டளையின் சார்பாக நகட (ஈழ்ப்) எண்.13992/2024-இல் ஆஜரானார், அவருடைய பெயர் 18-10-2024 தேதியிட்ட உத்தரவில் பிரதிபலிக்கிறது. கூடுதலாக இந்த வழக்கில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத் மற்றும் வி.கிரி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இப்பொழுது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் டைரி எண்.57906/2024ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த நகட (சிவில்) வழக்கில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரியும், ஈஷா அறக்கட்டளை சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் ஆஜராகி வருகின்றனர். (14-2-25 எண்.57906/24). ஈஷாவிற்காக ஒன்றாக களமாடியவர்கள், இப்பொழுது தனித்தனியாக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இது ஜக்கியின் கிரிமினல்தனம்'' என்கின்றார் ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ்.
சுற்றுச்சூழல் பாதிப்பு, மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை கருவி. சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சமூகங்களில் குறைந்தபட்ச தாக்கத்துடன் இயற்கை வளங்களின் உகந்த பயன் பாட்டை ஒழுங்குபடுத்தவும், பரிந்துரைக்கவும் நிர்வகிக்கப்படுவதுதான் இ.ஐ.ஏ. (ஊ.ஒ.ஆ.) எனப்படும் என்விரோன்மென்ட் இம்பேக்ட் அஸ்ஸஸ்மென்ட். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்கள் என இரண்டு வகைப் பிரிவில் செயல்படும் இ.ஐ.ஏ.வின் முக்கிய பணி, திட்டங்களை பரிசீலனை செய்வதே. இதில் சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும் என்கிற நிலைப்பாடு பலருக்கு. அந்த வகையில் 2 லட்சம் சதுர மீட்டருக்குள் தான் ஈஷாவின் கல்விக் கட்டடங்கள் வருகின்றன என இ.ஐ.ஏ.வினை தவிர்த்து வருகின்றது ஈஷா நிறுவனம்.
இதுகுறித்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புருஷோத்தமனோ, "என்விரோன்மென்ட் இம்பேக்ட் அஸ்ஸஸ்மென்ட் (இ.ஐ.ஏ.) என்பது நல்ல விஷயம் தானே? எல்லாம் சரியாக இருந்தால் அதை எதிர்த்து ஈஷா இவ்வ ளவு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தினை எதற்காக செய்ய வேண்டும்? மேலும் இந்த ஈஷா யோகா மைய கட்டடங்கள், மலை பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றது. அந்த கிராமத்தில் யானை இருப்பிடம் இல்லையென்றால் அங்கு போடப்படிருக்கும் உயரமான மின்கம்பி வேலிகள் எதற்கு? இ.ஐ.ஏ. என்பது ஒரு பெரிய கட்டுமானத்துக்கு அல்லது ப்ராஜெக்ட்டுக்கு இருக்கும் விரிவான ஆய்வு முறை. இ.ஐ.ஏ.ன் கீழ் வரவில்லை என்றால் எந்த அனுமதியும் குறிப்பாக டி.டி.சி.பி. அப்ரூவலும் வேண்டாம் என்று அர்த்தமா? உபஈட டப்ஹய்ய்ண்ய்ஞ் ஆஸ்ரீற் 1971 ள்ங்ஸ்ரீ 49(2) (க்ஷ) சட்டப் பிரிவின்படி அந்த இடம் அந்த கட்டுமானத்துக்கு பொருத்தமானதா? அதாவது, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும், குறிப்பாக யானைகளின் நடமாட்டம் உள்ள இடமா என்று ஆய்வு செய்ய வேண்டாமா?" என கேள்வி எழுப்புகின்றார் அவர்.
இதே வேளையில், தனது மகள்களை மீட்க சட்டப்போராட்டம் நடத்திவரும் ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் வழக்கில், "இந்த ஈஷா யோகா மையம் இந்து சனாதானத்தைக் காக்கப் போராடி வருகின்றது'' என அன்றையநாளில் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. ஆனால் தற்பொழு தைய வழக்கில் இந்து சனா தானம் என்பதை விட்டுவிட்டு, இந்த ஈஷா யோகா மையம் கல்வி நிறுவனங்களே என்கின்றது ஈஷா தரப்பு. உச்ச நீதிமன்றத்திற்கும் சுண்ணாம்பு பூசிவருகின்றார் ஜக்கி.
இது இப்படியிருக்க, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தியான் ஹெல்த் எஜுகேஷன் நிறுவனம் ஒன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிக்கியுள்ளது ஜக்கியை பீதியடையச் செய்துள்ளது. தியான் ஹெல்த் எஜுகேஷன் நிறுவனத்தில் செவிலிக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இதில், இரு மாணவி களுக்கு இடையே எழுந்த பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்தபோது, பட்டியலின சமூகத் தைச் சேர்ந்த மாணவி மாலா வினோதினியை சக மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் கன்னத்தில் அடித்து காலில் விழச் செய்து கல்விச் சான்றிதழை திரும்ப ஒப்படைப்ப தற்கு ரூபாய் 1 லட்சம் கேட்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், மாணவி மாலா வினோதினியின் புகாரின் பேரில் விசாரணை நடத்தி தியான் ஹெல்த் எஜுகேஷன் கண்காணிப் பாளர் கிருஷ்ண பிரியா மீது பி.என்.எஸ். ஆக்ட் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தார். இதில் டுவிஸ்ட் என்னவென்றால், அந்த நிறுவனத்தின் நிறுவனர் மருத்துவர் சிவக் குமார், ஈஷா மையத்தின் கோவில்பட்டி நகரின் பிரதான ஏஜெண்ட். மருத்துவர் சிவக்குமாரும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை வன்கொடுமை வழக்கிலிருந்து தவிர்த்த போலீ ஸார், மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டது குறித்து மருத்துவர் மீதான குற்றச் சாட்டை விசாரித்து வருகின்றது. தற்போது முதன் முறையாக பாதிக்கப்பட்ட ஒரு பட்டியலின சமூ கத்தை சேர்ந்த மாணவியின் புகாரில் விசாரணை நடத்தி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தொடக்கம் தான். இனி ஈஷா ஏஜெண்டான மருத்துவர் சிவக்குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்கின்றன கோவில்பட்டி மருத்துவத்துறை வட்டாரங்கள்.
-நாகேந்திரன்
படங்கள்: மூர்த்தி, விவேக்