Advertisment

இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!

ss

2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண் கள் உள்ளிட்ட பொதுமக்க ளைக் கொன்று குவித்த நிலை யில், இஸ்ரேலை லெபனான் கண்டிக்க, இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போராக மாற்றமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும், லெபனா னுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதித்தது. தொலை தூரத்திலிருந்தபடியே இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலில் ஈ

2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண் கள் உள்ளிட்ட பொதுமக்க ளைக் கொன்று குவித்த நிலை யில், இஸ்ரேலை லெபனான் கண்டிக்க, இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போராக மாற்றமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும், லெபனா னுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதித்தது. தொலை தூரத்திலிருந்தபடியே இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. பதிலுக்கு இஸ்ரே லும் ஈரான் மீது தாக்குதல் நடத்த, இந்த போரில் இஸ்ரே லுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ஆயுதங்களை அடுத் தடுத்து இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.

Advertisment

s

தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் பெட்ரோலியப் பொருட்களை சப்ளை செய்வ தில் ஈரான் முக்கிய பங்கு வகிப்பதால், இந்தியா உள் ளிட்ட பல நாடுகளிலும் இதன் பாதிப்பு இருக்குமென்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் அடுத்தகட்டமாக, ஈரானின் பெட்ரோல் கிணறுகள் மீதும், அணு உலைகள் மீதும் தாக்குதல் நடத்துமோ என்ற பதட்டம் நிலவிவந்த சூழலில்... கார்க் தீவிலுள்ள ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையத்திலுள்ள கச்சா எண்ணெயை முழுமையாக காலி செய்து, அவற்றை மிகப்பிரமாண்டமான எண்ணெய் கொள்கலன் கப்பலில் ஏற்றி வேறிடத்துக்கு ஈரான் கொண்டுசென்றுள்ள தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனோடு போனில் பேசிய இஸ்ரேலிய பிரதமர் நெதன் யாகு, ஈரானின் பெட்ரோல் கிணறுகள் மீதும், அணு உலைகளின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோமென்று உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. எனினும் போர் வலுக்கும் சூழலில், ஈரான் மீதான கோபத்தில் இஸ்ரேல் எந்த எல்லைக்கும் செல்லக்கூடுமென்று எதிர் பார்க்கப்படுவதால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 75 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிவரு கிறது. இது மேலும் உயர்ந்து, 85 டாலர்களையும் தாண்டக் கூடுமென்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவிலும் அதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை மளமளவென அதிகரிக்கும். உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிக மிருப்பதால், இதன் விளைவாக உணவுப்பொருட்களின் விலையும் உயரத்தொடங் கும்.

Advertisment

எனவே இஸ்ரேல் -ஈரான் இடையிலான போர்ப் பதட்டத்தைத் தணிப்பதுதான் உலக நாடுகளுக்கு பயனுள்ள தாக இருக்கும்!

nkn261024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe