"அமலாக்கத்துறையை வைத்து அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க.வை தனது கூட்டணி வலைக்குள் சிக்கவைத்த பா.ஜ.க., சி.பி.ஐ. பயத்தைக் காட்டி த.வெ.க.வுடன் தனது அரசியல் டீலிங்கை கச்சிதமாக முடித்துவிட்டது. இனி, பா.ஜ.க.வின் வெற்றிக்காக தமிழகத்தின் ஒவைசியாகவே செயல்படுவார் விஜய்'”என அடித்துக் கூறுகிறது பா.ஜ.க. தலைமையகத்திற்கு நெருக்க மான நமது டெல்லி சோர்ஸ்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங் கிணைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறது ஆளுங்கட்சியான தி.மு.க. அதேபோல, தமிழகத்தில் என்.டி.ஏ.விற்கு தலைமை தாங்குவது அ.தி.மு.க.தான் எனக் கூறப் பட்டாலும், தங்களுடைய கூட்டணியில் பிற கட்சிகளை இணைக்க பெரும்பாடுபட்டு வருகிறது பா.ஜ.க. ஒன்றிய அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய ஊழல் வழக்கு, பா.ம.க.வின் உரிமை பிரச்சனை உட்பட பல்வேறு சிக்கல்களில் இருக்கும் அன்புமணி, இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு, பரப்பன அக்ரஹாரா சிறை வழக்கு என பா.ஜ.க.வின் உடும்புப் பிடியிலிருக்கும் டி.டி.வி. தினகரன் உட்பட சில சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணி கனவில் வலம் வருகிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்த தே.ம

கடந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்த தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகள் இம்முறை அக்கூட்டணியில் இணையுமா என்பதே மோடியின் மதுராந்தக பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு பின்னரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில்தான், கரூர் நெரிசல்
மரணம் தொடர்பாக நடந்துவரும் சி.பி.ஐ. விசாரணையைக் காட்டி தமிழக வெற்றிக் கழகத்தை பா.ஜ.க. மேலிடம் தங்களுக்கு சாதகமாக வளைத்துள்ளதாகவும், நடிகர் விஜய்யும் அதற்கு ‘ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் கசியும் தகவல்கள்தான் கமலாலய வட்டாரத்தில் தற்போதைய "ஹாட் டாபிக்'.
"என்ன நடந்தது டெல்லியில்?' என்பதை அறிவதற்காக, பா.ஜ.க.வின் நிழலில் இருக்கும் நமக்கு நெருக்கமான பொலிட்டிகல் சோர்ஸிடம் பேசினோம்...
தற்போதைய நிலவரப்படி டெல்லி, புதுச்சேரி என 2 யூனியன் பிரதேசங்கள், 19 மாநிலங்கள் என இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் இருந்தாலும், தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் தனது ஆட்சியை அமைக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நூற்றாண்டுக் கனவு. அதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது
திராவிட இயக்கங்கள்தான். தற்போதைக்கு, அ.தி.மு.க. என்ற திராவிட இயக்கத்தை பிளவுபடுத்தி அதன் 90 சதவீத கட்டுப்பாட்டை பா.ஜ.க. எடுத்துவிட்டது என்பது அரசியல் புரிந்த அனைவருக்குமே தெரியும். அதனால்தான், "தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சிதான் அமையும்' என பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல் கூறும்போது, எதிர்பேச்சு பேசாமல் மௌனம் காத்தார் எடப்பாடியார்.
அதேபோல, ஊழல் வழக்குகளில் சிக்கிய மாற்றுக்கட்சிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட அரசியல் தலைவர் களையும், ஒருசில காங்கிரஸ் புள்ளிகளையுமே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டது பா.ஜ.க.
இப்படி, அனைத்து விசயங்களுமே தங்களுக்கு சாதக மாக இருந் தாலும், மக்க ளுக்கு தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையும், பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு பாதக மான சூழல் இருப்பதை டெல்லி மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது. எனவே, மிரட்டியோ, உருட்டியோ அ.தி.மு.க. உட்பட சில கட்சிகளை தங்களது என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டாலும் அதைவைத்து மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதும் டெல்லி மேலிடத்திற்கு நன்கு தெரியும்.
எனவே, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் பிளஸ் தி.மு.க., அ.தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் ஆகியவற்றை சேகரிப்பதற்காக ஏகப்பட்ட சுவீட் பாக்ஸ்களை அள்ளிக்கொடுத்து பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் ஒருவர் மூலமாக முதலில் வளைக்கப்பட்டார் சீமான். அதன்பிறகுதான், ‘ஆடிட்டரே’ போற்றும் அளவுக்கு பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த சில கொள்கைகளை மாற்றிக்கொண்டது நாம் தமிழர் கட்சி.
இப்படி, சிதறும் வாக்குகளை சேகரிக்கவும், தி.மு.க.வுக்கு எதிராகப் பேசி நடுநிலையோடு இருக்கும் இளைஞர் வாக்குகளை ஈர்க்கும் களமாகவும் மாற்றப் பட்டது நாம் தமிழர் கட்சி. எப்போதும் போல இம்முறையும் அவர் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு என்.டி.ஏ. கூட்டணிக்கு ஆதரவளிப்பதுதான் அவரது நோக்கம். அதுதான் அசைன்மெண்ட்.
இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் ஆசையோடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்தை அணுகிய நடிகர் விஜய்க்கு, அக்கட்சியின் கதவுகள் அப்போது திறக்காததால் ‘"கொள்கை எதிரி பா.ஜ.க; அரசியல் எதிரி தி.மு.க.'’ என்ற கோஷத்தோடு தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கிய விஜய், கரூர் பிரச்சார நெரிசல் மரண வழக்கில் சி.பி.ஐ.யிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அது தொடர்பான முதற்கட்ட விசாரணையிலேயே, "நல்லா யோசிச்சு சொல்லுங்க விஜய்..' என ‘ஆப்சன்’ கொடுத்து அனுப்பிவிட்டனர் அதிகாரிகள்.
அடுத்து, கடந்த 19ஆம் தேதி நடந்த இரண்டாம்கட்ட விசாரணைக்காக 18ஆம் தேதி இரவே டெல்லி வந்த விஜய்யை, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே நேரில் சென்று சந்தித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரும், அமித்ஷா குடும்பத்திற்கு நெருக்கமானவருமான பாஷ்யம் அபினேஷ். இப்போது மட்டுமல்ல; இனி எப்போதுமே பா.ஜ.க.வுடன் ஒட்டோ, உறவோ கிடையாது” எனச் செல்லுமிடமெல்லாம் கூவிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியை பா.ஜ.க.வுடன் ஒட்டவைத்த "கீ பெர்சனும்' அவர்தான். விஜய்யுடனான அந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வின் அதிமுக்கியப் புள்ளி ஒருவரும் அபினேஷ் மூலமாக விஜய்யுடன் வீடியோகாலில் பேசியிருக்கிறார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிலையில், “"ஒரு ரெண்டுநாள் மட்டும் டைம் கொடுங்க ப்ளீஸ்..' எனக் கூறியிருக்கிறார் விஜய்.
அதனடிப்படையில்தான், மறுநாள் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் கேட்கப்பட்ட சில கேள்விகள் மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டு, "கைதாகிறார் விஜய்!'’என மரணபீதியை ஏற்படுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள். விசாரணை முடிந்து பதற்றத்தோடு தமிழகம் வந்த விஜய்யிடம், மைலாப்பூரைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவரும் பேசி, பா.ஜ.க. சார்பாக சில வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் அந்த முக்கிய முடிவை எடுத்திருக்கிறார் விஜய்.
அதன்படி, இப்போதைக்கு தனித்தோ அல்லது வேறு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டோ 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் த.ù.வ.க., தேர்தல் முடிவிற்குப் பிறகு என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைய ஆதரவளிப்பது’ என 21ஆம் தேதி முடிவு செய்தாராம் விஜய். அந்த தகவல் உடனடியாக டெல்லிக்கு ‘பாஸ்பண்ணப் பட்டது. அதன் பிறகுதான், "த.ù.வ.க. தனித்தே போட்டியிடும், விஜய் கை காட்டுபவர்தான் வெற்றிபெற முடியும்'’என மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தார் செங்கோட்டையன். அடுத்த சிலமணி நேரங்களில் "விசில்' சின்னத்தை ரிலீஸ் செய்துவிட்டது தேர்தல் ஆணையம்.
ஆகமொத்தத்தில்... "இஸ்லாமிய சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து வட மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவும் ஒவைசியைப் போல இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை வாக்குகளை அறுவடை செய்து பா.ஜ.க.வின் கூட்டணிக் கூடையில் கொட்டத் தயாராகிவிட்டார் ஜனநாயகன்'’என அதிர வைத்தனர் நம்மை.
ஆக, தமிழகத்தின் ஒவைசியா விஜய்..?!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us