நீண்ட இழுபறிக்குப் பின் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இக்கூட்டணி உறவை அப்படியே தக்கவைத்து (இடையில் ஒரு தேர்தல் தவிர), 22 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து, தலைமைத்துவம் எது என்பதை நிரூபித்து மாஸ் காட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் எப்படியும் நம்முடன் வந்து விடும் என இலவுகாத்த கிளியாக காத்திருந்த நடிகர் விஜய், இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் மேஜர் பார்ட்னராக இருக்கிறது காங்கிரஸ் கட்சி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் தி.மு.க.விடம் தங்களுக்கான பங்கீட்டைப் பெற, கடைசிவரை இழுத்துச் செல்லாமல் முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும் என திட்டமிட்டு, தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஷோடங்கரின் தலைமையில் ஐந்துபேர் கொண்ட பேச்சுவார்த் தைக் குழுவை அமைத்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கலாச்சாரத்தில் இல்லாத வழக்கமாக இருந்தது இது. அதாவது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.வில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படாமலிருக்கும் சூழலில், மூன்று மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தைக் குழுவை காங்கிரஸ் அமைத்ததுதான் தமிழக அரசியலில் வியப்பாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில், காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் இருந்தது. அது, விஜய்!
த.வெ.க. கட்சியைத் துவக்கி முதல் மாநாட்டை நடத்திய விஜய், "நாங்கள் ஆட்சி அமைத்தால் எங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம்' என்று பிரகடனப்படுத்தினார். தமிழகத் தேர்தல் அரசியலில் இது புதிய யுக்தியாக விமர்சிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியை உடைக்க வேண்டும் எனும் நரித் தந்திரத்தை விஜய் கையாள்கிறார் என்பதும் புரிந்தது.
விஜய் வீசிய இந்த தூண்டிலால் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஒரு நப்பாசை பிறந்தது." தி.மு.க.விடம் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவோம்; கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையேல் அதைவிட மகிழ்ச்சி. தி.மு.க. உறவைத் துண்டித்து கொண்டு விஜய்யுடன் கை கோர்க்கலாம்' என்கிற திட்டத்தில் உருவானதுதான் ஐவர் குழுவை முன்கூட்டியே அமைத்த ரகசியம்.
அதற்கேற்ப ஸ்டாலினை சந்தித்த ஐவர் குழு, "தேர்தல் பேச்சுவார்த்தையைத் துவக்கினால் காங்கிரசுக்கான சீட்டுகளை உறுதி செய்துகொள்ள முடியும்' என வலியுறுத்தியது. ஆனால், ஸ்டாலினோ, "தேர்தலுக்கு காலங்கள் இருக்கின்றன; இப்போதே என்
நீண்ட இழுபறிக்குப் பின் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இக்கூட்டணி உறவை அப்படியே தக்கவைத்து (இடையில் ஒரு தேர்தல் தவிர), 22 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து, தலைமைத்துவம் எது என்பதை நிரூபித்து மாஸ் காட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் எப்படியும் நம்முடன் வந்து விடும் என இலவுகாத்த கிளியாக காத்திருந்த நடிகர் விஜய், இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் மேஜர் பார்ட்னராக இருக்கிறது காங்கிரஸ் கட்சி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் தி.மு.க.விடம் தங்களுக்கான பங்கீட்டைப் பெற, கடைசிவரை இழுத்துச் செல்லாமல் முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும் என திட்டமிட்டு, தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஷோடங்கரின் தலைமையில் ஐந்துபேர் கொண்ட பேச்சுவார்த் தைக் குழுவை அமைத்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கலாச்சாரத்தில் இல்லாத வழக்கமாக இருந்தது இது. அதாவது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.வில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படாமலிருக்கும் சூழலில், மூன்று மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தைக் குழுவை காங்கிரஸ் அமைத்ததுதான் தமிழக அரசியலில் வியப்பாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில், காங்கிரஸின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் இருந்தது. அது, விஜய்!
த.வெ.க. கட்சியைத் துவக்கி முதல் மாநாட்டை நடத்திய விஜய், "நாங்கள் ஆட்சி அமைத்தால் எங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம்' என்று பிரகடனப்படுத்தினார். தமிழகத் தேர்தல் அரசியலில் இது புதிய யுக்தியாக விமர்சிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியை உடைக்க வேண்டும் எனும் நரித் தந்திரத்தை விஜய் கையாள்கிறார் என்பதும் புரிந்தது.
விஜய் வீசிய இந்த தூண்டிலால் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஒரு நப்பாசை பிறந்தது." தி.மு.க.விடம் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவோம்; கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையேல் அதைவிட மகிழ்ச்சி. தி.மு.க. உறவைத் துண்டித்து கொண்டு விஜய்யுடன் கை கோர்க்கலாம்' என்கிற திட்டத்தில் உருவானதுதான் ஐவர் குழுவை முன்கூட்டியே அமைத்த ரகசியம்.
அதற்கேற்ப ஸ்டாலினை சந்தித்த ஐவர் குழு, "தேர்தல் பேச்சுவார்த்தையைத் துவக்கினால் காங்கிரசுக்கான சீட்டுகளை உறுதி செய்துகொள்ள முடியும்' என வலியுறுத்தியது. ஆனால், ஸ்டாலினோ, "தேர்தலுக்கு காலங்கள் இருக்கின்றன; இப்போதே என்ன அவசரம்? தி.மு.க. வில் குழு அமைத்ததும் பேசலாம்' எனச் சொல்லி ஐவர் குழுவை அனுப்பி வைத்தார்.
ஆனால் பொறுமை இல்லாத காங்கிரஸ் கட்சி, "ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக சீட்டுகள் வேண்டும்; காங்கிரஸ் கட்சி என்.ஜி.ஓ. அல்ல' என கிரிஷ் ஷோடங்கர், மாணிக்கம்தாகூர், ராஜேஸ்குமார், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தி.மு.க.வை சீண்டும் வகையில் பொதுவெளியில் பேட்டியளித்தனர். ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கும் இவர்களின் பேச்சு, ராகுலின் அனுமதியுடனே நடக்கிறது என சந்தேகமடைந்தது தி.மு.க. அதற்கேற்ப, பல்வேறு அரசியல் விமர்சனங்களும் பூதாகரமாக வெடித்தன. இதனை தி.மு.க. தலைமை ரசிக்கவில்லை.
இருப்பினும் தனது தலைமைப் பண்பால் காங்கிரசின் செயல்களை விமர்சிக்காமல் அமைதி காத்தார் ஸ்டாலின். ஆனால், இதனை தி.மு.க.வின் பலவீனம் என நினைத்து மேலும் மேலும் சீண்டியது காங்கிரஸ். தி.மு.க.வுடன் இருந்துகொண்டே, நடிகர் விஜய்யுடன் கூட்டணி குறித்து ரகசியமாக விவாதித்தபடியிருந்தார் ராகுல்காந்தி.
தி.மு.க. -காங்கிரஸ் உறவில் முரண்பாடுகள் அதிகரிக்க, டெல்லி சென்று ராகுல்காந்தியை சபரீசன் மற்றும் கனி மொழி ஆகியோர் தனித் தனியாக சந்தித்தது, கே.சி.வேணுகோபால் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்தது என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/congress-dmk1-2026-03-06-12-51-44.jpg)
இந்த சந்திப்புகளில் "ஆட்சியில் பங்கு, 65 சீட்டுகள், 2 ராஜ்யசபா சீட்டுகள், 3 அமைச்சர் பதவிகள், உள்ளாட்சியில் 25 சதவீத பங்கீடு, வாரியப் பதவிகளில் 15 சதவீத பங்கீடு, இவைகளுக்காக முன்கூட்டியே அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளப்பட வேண்டும்' என போகாத ஊருக்கு வழிதேடும் வகையில் கோரிக்கை வைத்தது காங்கிரஸ்.
இதனைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ச்சி யடைந்தாலும் அலட்டிக் கொள்ளாமல், "ஆட்சியில் பங்கு கேட்பது உங்களின் உரிமையாக இருக்கலாம்; அதனை எங்களால் தரமுடியாது. கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. மக்களும் ஏற்கமாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் உங்களின் கோரிக்கையை பரிசீலிக்கிறோம். ஆனால், அக்ரிமெண்டெல்லாம் போட முடியாது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற 18 இடங் களுடன் கூடுதலாக 2 சீட்டுகள் என 20 தொகுதி கள் ஒதுக்குகிறோம். ஒரு ராஜ்யசபா சீட் தரு கிறோம்'' என எதார்த்தத்தை கே.சி.வேணுகோபா லுக்குப் புரியும்படி எடுத்துச்சொன்னார் முதல்வர் ஸ்டாலின். இதனை ஏற்காத அவர், "தலைமையிடம் பேசிவிட்டு சொல்கிறேன்' என கிளம்பி டெல்லிக்குப் பறந்தார்.
டெல்லியில் ராகுல்காந்தி, கார்கே, கே.சி.வி., கிரீஷ் ஷோடங்கர், ராகுலின் இண்ட்ட லெக்சுவல்ஸ் சிலர் ஆகியோர் இணைந்து விவாதித்தனர். அதில், இந்த முறை சட்டமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் உட்கார வேண்டும். அதற்கு 23 இடங்களில் நாம் ஜெயிக்க வேண்டும். அதனால், 45 சீட் + 2 கேட்கலாம். 45 சீட் வாங்கினால்தான் 30 இடங்களிலாவது நாம் ஜெயிக்க முடியும். 30 சீட் ஜெயித்தாலே நம்மை மீறி ஆட்சியமைக்க முடியாது. அப்போது, தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தலாம். அதனால் 45-லிருந்து குறைய வேண்டாம் என முடிவு செய்து, அதனை ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தியது காங்கிரஸ்.
இதனை ஸ்டாலின் ஏற்க மறுக்க, அடுத்தடுத்து நடந்த சீக்ரெட் பேச்சுவார்த்தையில், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 25 சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் மட்டுமே எங்களால் முடியும். பிறகு உங்கள் விருப்பம் என சோனியாவுக்கு தகவல் தந்தார் ஸ்டாலின். கூட்டணி விவகாரத்தை ராகுல்காந்தி கையாள்வதில் சிக்கல்களும் மனக்கசப்புகளும் அதிகரிப்பதை உணர்ந்தார் சோனியாகாந்தி.
இந்தச் சூழலில்தான், "உங்கள் தலைமை என்னதான் நினைக்கிறது? எனக்குப் புரியவில்லை. உங்கள் மேடத்திடம் (சோனியா) பேசுங்கள். இப்படியே இழுத்துக்கொண்டிருப்பது சரியல்ல... நிறைய வேலைகள் இருக்கு. யெஸ் ஆர் நோ என சொல்லச் சொல்லுங்கள்''’என்று ப.சிதம்பரத்திடம் சொன்னார் ஸ்டாலின்.
தி.மு.க.வின் இந்த வருத்தத்தை சோனியாவை தொடர்புகொண்டு ப.சிதம்பரம் பேச, தி.மு.க.வுட னான கூட்டணி டீலிங்கை இனி நாமே கையாள்வது என முடிவு செய்த சோனியா, பேச்சுவார்த்தையை சிதம்பரத்திடமே ஒப்படைத் தார். ஸ்டாலினை சந்தித்து விவாதித்தார் ப.சிதம் பரம். அந்த சந்திப்பில், இறுதியாக 45 சீட் கேட் டிருந்த காங்கிரஸ் 41, 39, 35 என மெல்ல மெல்ல இறங்கி வர, அப்போது ஸ்டாலின் 25 சீட்டோடு 2 ராஜ்யசபா தருகிறோம். ஒண்ணு இப்போது, மற்றொன்று அடுத்தமுறை என உயர்த்தினார். அதற்கு காங்கிரஸ், 35 என்பதை 30 ஆக குறைத்துக்கொள்கிறோம்; ஆனால் 2 ராஜ்யசபா சீட்டும் இப்போதே வேண்டும் எனக் கேட்டது.
ஆனால், இதற்கு உடன்பட மறுத்த ஸ்டாலின், "2-க்கு வாய்ப்பே இல்லை. 25-ஐ 26 ஆக தருகிறோம்' எனச் சொல்ல, 30-லேயே குறியாக இருந்தது காங்கிரஸ். இப்படியே மாறி, மாறி ஏறுவதும் இறங்குவதுமாக நடந்த சம்பவத்தில் இறுதியாக "28+1 என்றும், இதற்குமேல் எதுவும் உயர்த்த முடியாது' எனவும் அழுத்தமாக ப.சி.யிடம் தெரிவித்தார் ஸ்டாலின். இதனை சோனியாவுக்கு சிதம்பரம் பாஸ் செய்ய, அதனை ராகுலுக்கும் கார்கேவுக்கும் பாஸ் செய்தார் சோனியா. இருப்பினும், "28-யை 30ஆக ரவுண்ட்பண்ணச் சொல்லுங்கள்' என ராகுலும் கே.சி.வி.யும் சோனியாவிடம் வலியுறுத்த, "வாய்ப்பே இல்லை' என சிதம்பரம் வழியாக சொல்ல வைத்தார் ஸ்டாலின்.
"ராஜ்யசபா தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய ஒரே ஒரு நாள்தான் இருந்ததால், இனியும் உங்கள் முடிவைத் தெரிவிக்கவில்லை எனில் சீட்டுகளை தி.மு.க. அறிவித்துவிடும்' என ஸ்டாலின் தந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 28+1-க்கு ஒப்புக்கொண்டது காங்கிரஸ்.
கோவாவிலிருந்த கிரீஷ் ஷோடங்கரை சென்னைக்கு அனுப்பிவைத்தார் ராகுல். அவரை சென்னை ஏர்போர்ட்டில் வரவேற்றார் செல்வப் பெருந்தகை. ஜி.ஆர்.டி ஹோட்டலுக்குச் சென்ற னர். அங்கிருந்து டெல்லியை தொடர்புகொண்ட கிரீஷ் ஷோடங்கருக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட.. அறிவாலயத்திற்கு விரைந்தனர். தி.மு.க. -காங்கிரஸ் இருதரப்புக்கும் பரஸ்பரம் ஒப்பந்தம் சைன் ஆனது.
ஆட்சியில் பங்கு, 65 சீட் என அடம்பிடித்த காங்கிரஸ் குதிரையை 28 சீட்டுக்குள் அடக்கி யிருக்கிறார் ஸ்டாலின். இந்த தேர்தலுக்காக, 22 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை உரு வாக்கியிருக்கிறார். கூட்டணிக்கு தலைமை என்கிற முறையில் சென்னையில் இருந்தபடியே காங் கிரஸின் டெல்லி வாலாக்களை அறிவாலயத்துக் கும், தனது இல்லத்துக்கும் வரவழைத்து பேசினார் ஸ்டாலின். காங்கிரசுக்கும், "ஒருமுறை நீங்கள் டெல்லிக்கு வந்து ராகுலை மீட் பண்ணுங்கள்' என அழைக்கும் துணிச்சல் வரவில்லை. காங்கிரஸை மட்டுமல்ல, கூட்டணியிலுள்ள கட்சிகளாக இருந்தாலும், புதிய கட்சிகளாக இருந்தாலும் அறிவாலயத்தை தேடி வரவழைத்தார். இதுதான் தலைமைத்துவம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கிடையே தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், நடிகர் விஜய்யும் ஏகத்துக்கும் எதிர்பார்த்தனர். இதில், ஒருபடி மேலே சென்று, காங்கிரசுக்காக காத்திருந்தார் விஜய். ஆனால், விஜய்யை நம்பவைத்து நட்டாற்றில் நிற்க வைத்திருக்கிறது காங்கிரஸ். இனி, விஜய்யுடன் கூட்டணி வைக்க பெரிய சக்திகள் எதுவும் இல்லை.
தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து தனித்துவிடப்பட்டதில் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார் விஜய். தி.மு.க.வை பகைத்துக் கொண்டாயிற்று. இதனால் தனித்துப் போட்டியிட்டு நாம் ஜெயிக்க முடியாமல் போனால், தேர்தலுக்குப் பிறகு நம்மை ஒழித்துவிடுவார்கள் என்கிற பயம் இப்போதே அவரைச் சூழ்ந்துள்ளது.
தி.மு.க.விடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் விஜய் சேரலாம். ஆனால், பா.ஜ.க.வை கொள்கை எதிரின்னு சொல்லிவருவதால், அங்கேயும் போக முடியாது. ஒருவேளை பா.ஜ.க.வை உதறிவிட்டு அ.தி.மு.க. வந் தால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க திட்ட மிட்டு எடப்பாடிக்கு தூதுவிட்டுள்ளார் விஜய்.
"தி.மு.க. கூட்டணி அமைய முழுகாரணமும் ப.சி.யும் கார்கேயும்தான். இருவரும் சோனியாவிடம் பேசி கூட்டணி தொடர்வதற்கு பெரும்முயற்சி எடுத்து அதில் முழு வெற்றியும் கண்டனர்' என கிசுகிசுக்கிறார்கள் காங்கிரஸார்.
-----------------------------------------
விரக்தி மனநிலையில் விஜய்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/vijay-2026-03-06-12-51-59.jpg)
மார்ச் 04ஆம் தேதி, தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், வழக்கம்போல் தி.மு.க.வை மட்டுமே தாக்கிப் பேசினார். அதேவேளை, முதன்முறையாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்து வாய் திறந்த விஜய், அதற்காக குரல் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போதே தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி அன்றைய தினம் உறுதியாகவுள்ள தகவல் தெரிந்ததால் விரக்தியிலிருந்த விஜய், தி.மு.க. தொடர்ந்து 2வது முறை ஆட்சிக்கு வருவது என்பது நடக்கவே நடக்காதென்றும், கலைஞராலேயே முடியவில்லை என்றும் கூறியவர், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள், தனது அரசியல் வருகையால் அச்சத்திலிருக் கின்றன என்று பெருமைப்பட்டுக்கொண்டார். தன் மனைவியின் விவாகரத்து பிரச்சனையால் குழப்ப மனநிலையில் விஜய் இருக்கும் சூழலில், கூட்டத்துக்கு வந்த ரசிகர்களில் சிலர், விஜய் -சங்கீதா ஜோடி புகைப்படத்தை தூக்கிக்காட்டியது விஜய்க்கு அதிர்ச்சியளித்தது. உடனடியாக அந்த ரசிகரை புஸ்ஸி ஆனந்த் அப்புறப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்ததில், திருச்சி கல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அருண் ஆகியோர் விபத்தில் சிக்கியதில் விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விக்னேஷின் தந்தை இதுகுறித்து, “"இரண்டு நாளுக்கு பிறகுதான் சொல்லமுடியும்னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க. 2 லட்ச ரூபாய கட்டியிருக்கேன்... புள்ளைய காப்பாத்தணும்ல'' என்றவரிடம் "கட்சியிலிருந்து பார்த்தாங் களா?''’என்று கேட்டதற்கு, “"41 பேர் செத்தப்பவே வந்து பாக்காதவிங்க இதுக்கு போயா பார்க்கப்போறாய்ங்க? நா ஆரம்பத்திலிருந்தே விஜய் கூட்டத்துக்கெல்லாம் போகாதடான்னுதான் சொல்லிட்டிருக்கேன். இதுக்குப் பெறகாவது திருந்தணும்'' என்று மனம் வெறுத்துப்போய் கூறினார்.
-துரை.மகேஷ்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us