சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அந்த தி.மு.க. நிர்வாகி, சில மாதங்களுக்கு முன் நடந்த "உடன் பிறப்பே வா' ஒன் டூ ஒன் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், “"என்னுடைய கோரிக்கை சொந்த நலன் சார்ந்தது கிடையாது. சிவகாசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வேண்டுமென்றால், சிவகாசி டி.எஸ்.பி. பாஸ் கரனை உடனடியாக டிரான்ஸ்பர் செய்யவேண்டும்'’எனக் கேட்டுக்கொண்டார். சிவகாசி டி.எஸ்.பி. பாஸ்கரனும் விழுப்புரம் மாவட்டத்திற்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு டி.எஸ்.பி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
டி.எஸ்.பி. பாஸ்கரன் மீது தி.மு.க.வினருக்கு என்ன கோபம்?
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கோகுலஇந்திரா வின் உறவினரான பாஸ்கரனுக்கு, சென்னை தலைமைச் செயலகம் வரை நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந் திரபாலாஜியின் நம்பிக்கைக்கு உரியவர் என்ப தால், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கு, பாஸ்கரன் சரிப்படமாட்டார் என்பதை அறிந்திருந்ததாலேயே, தி.மு.க. தரப்பினர் அவருக்கு எதிரான காய்நகர்த்தல் களைக் கச்சிதமாகச் செய்தனர். எப்படி யென்றால், பாஸ்கரன் மீது ஊழல், லஞ் சம், பஞ்சாயத்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அடுக்கடுக்கான புகார்களை காவல்துறை யைச் சேர்ந்த இருவர் வெவ்வேறு பெயர்களில் தட்டிவிட்டனர். அந்தப் புகார்களை எல்லாம் விருதுநகர் மாவட்ட சட்டம்-ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா (மைக் 12) விசாரித்து வருகிறார்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அந்த பட்டாசு ஆலை அதிபர், "நான் ஏ.டி.எஸ்.பி. ஆபீஸுக்கு போயி அந்த பெட்டிஷனை படிச்சுப் பார்த் தேன். அதுல என்னைப் பத்தி வேற மாதிரி விஷயங்களெல் லாம் எழுதி வைச்சிருக்காங்க. எனக்கு ஒரு இல்லீகல் லேடியோட தொடர்பு இருக்குன்னு போட்டிருக்காங்க. அதுமட்டுமில்லாம, நான் டி.எஸ்.பி. பாஸ்கரனுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்த மாதிரிகூட காட்டி யிருக்காங்க. நான் அந்த மாதிரி எந்த விஷயத்துக்கும் போனதே கிடையாது. முன்னால வேற ஒரு பிரச்சினைக் காக நான் சிவகாசி டி.எஸ்.பி. ஆபீஸ் போயிருக்கேன். ஆனா.. இப்ப நடக்காதத நடந்த மாதிரி என் பெயரில் பொய் புகார் கொடுத்திருக்காங்க''’என்றார் எரிச்சலுடன்.
சிவகாசியில் மிகவும் பிரபலமான ஒருவர், "என்னையும் கூப்பிட்டாங்க. நான் போய் பார்த்தேன். நெறய இருந்த புகார்ல ஒரு பாயிண்ட்ல நான் இருந்தேன். அதுல என்ன எழுதியிருக்குன்னா... பாஸ்கரன் சிவகாசில இன்ஸ்பெக்டரா இருந்தப்ப நடந்தமாதிரி போட்ருந் தாங்க. பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜிகிட்ட சொல்லி எனக்கு ஏ.டி.எம்.கே. பொருளாளர் பதவி கிடைச்சதாவும், அந்த சிபாரிசுக்காக நான் கணிசமான தொகையை பாஸ் கரனுக்கு கொடுத்ததாவும் எழுதிருந்தாங்க. என்னோட விளக்கத்துல, பாஸ்கரன் என்கிட்ட எதுவும் கேட்கல. நான் அவருக்கு எதுவும் கொடுக்கலன்னு சொன்னேன். ஒருத்தர காலி பண்ணுறதுக்காக இப்படி எல்லாமா பொய் புகார் கொடுப்பாங்க?''’என்றார் ஆதங்கத்துடன்.
சாத்தூர் போலீஸ் லிமிட்டில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்தனர். அந்த வழக்கில் பட்டாசு ஆலை அதிபரைக் காப்பாற்றுவதாகக் கூறி, அவரிடம் லட்சங்களில் லஞ்சம் பெற்றாராம், அந்த லிமிட்டிலேயே இல்லாத சிவகாசி டி.எஸ்.பி. பாஸ்கரன். இப்படி ஒரு புகாரை கையில் வைத்துக்கொண்டு அந்தப் பட்டாசு ஆலை அதிபரை அழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். அவரோ, "அப்படி எதுவுமே நடக்கவில்லை' என்று விளக்கம் தந்திருக்கிறார்.
இன்னொரு விவகாரம், சிவகாசியில் அட்டை வியாபாரம் செய்துவரும் நபர், பைனான்ஸ் பார்ட்டி ஒருவரிடம் ரூ.18 லட்சம் வாங்கினார். வட்டியே ரூ.12 லட்சம் வரை கட்டியிருக்கிறார். 5 வருடங்களுக்கு முன்பே கூடியமட்டிலும் செட்டில் பண்ணிவிட்டார். ஆனாலும், தான் கொடுத்த காசோலைகளை அவர் திரும்பப் பெறவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனிக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதால், மிரட்டலுக்கு ஆளாகாமல் தப்பித்துவிட்டதாக எண்ணினார். ஆனால், பாஸ்கரன் டி.எஸ்.பி.யாக சிவகாசிக்கு வந்ததும், ஆளும் கட்சியின் அடாவடி பேர்வழிகள் சிலர், அந்த வீட்டுக்குள் நுழைந்து கடன் வாங்கியவரின் மனைவியிடம் கேவலமாக நடந்த தோடு ரூ.1 கோடி கேட்டு மிரட்ட வும் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண் அழுதுகொண்டே பேசி பதிவுசெய்த ஆடியோ, தேவாசீர் வாதம் ஏ.டி.ஜி.பி.யாக இருந்தபோது அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஸ்கரன் பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக புகார் எழ, அட்டை வியாபாரம் செய்தவர் விசாரணைக்கு ஆளாகி விளக்கம் அளித்திருக்கிறார்.
விழுப்புரம் டி.எஸ்.பி. பாஸ் கரன் நமது லைனுக்கு வராத நிலை யில், அவர் தரப்பில் பேச முடிந்தது. “"தனக்கு எதிரான புகார்களில் துளி யும் உண்மை இல்லை. தான் ஒன்றும் தி.மு.க. ஆட்சிக்கு எதிரானவன் கிடையாது. அரசியல் சூழ்ச்சியால் பந்தாடப்பட்டுவிட்டேன். விதிப்படி நடக்கட்டும்'’என்று விட்டேத்தி யாகப் பேசியதாகச் சொன்னார்கள்.
விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பை யாவை தொடர்புகொண்டபோது, “"டி.எஸ்.பி. பாஸ்கரன் மீதான புகார்கள் குறித்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. அதை நான் வெளிப்படுத்த முடியாது''’என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
ஒரு டி.எஸ்.பி. இடமாற்றத்தில் இத்தனை அரசியலா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/dsp-2026-01-06-10-37-55.jpg)