Advertisment

விமானத் துறையை அதானிக்கு தாரை வார்க்கிறதா மோடி அரசு?

புதுப்பிக்கப்பட்டது
adani1


ந்திய உள்நாட்டு விமான சேவை கடந்த 10 நாட்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறினாலும், இது செயற்கை யான முடக்கம் என்பதை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலும் கூறியுள்ளனர்.

Advertisment

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டுவர, சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குனரகம் டி.ஜி.சி.ஏ., விமானி களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விமான நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

Advertisment

adani

அதன்படி இந்த சட்டத்தை இரண்டு கட்டமாக அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. முதல் கட்டமாக ஜூலை மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதில் விமானி தினமும் எவ்வளவு நேரம் பறக்கவேண்டும் என்பதற் கும், கட்டாய ஓய்வுக்கும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முன்பு ஒரு விமானி 14 மணி நேரம் வரை விமானத் தை இயக்குவார், ஆனால் புதிய விதிமுறையின் மூலம் அதிகபட்சம் 8 முதல் 10 மணி நேரம் மட்டுமே பறக்க அனுமதியளிக்கப்பட்டது. அதேபோல முன்பு ஒரு விமானத்தை இயக்கிய பின்பு 8 மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பறக்கலாம், ஆனால் புதிய சட்டத்தின்படி கட்டாயம் 12 மணி நேர ஓய்வு தேவை. 

கடந்த ஜூலை மாதம் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் விமானிகளின் இரவுநேர பணிக்கும், வாரம்தோறும் பறக்கும் நேரத்திற்குமான விதிகள் அமலுக்கு வந்தன. அதா வது, முன்பு ஒரு விமானி தொடர்ந்து பல இரவுகள் விமானங்களை இயக்க முடிந்தது. ஆனால் புதிய விதிப்படி இரவு விமானம் இயக்கிய பின் குறைந் தது இரண்டு நாள் முழு ஓய்வு கட்டாயம். அதே போல முன்பு ஒரு விமானி வாரத்திற்கு 55 முதல் 60 மணி நேரம் வரை விமானத்தை இயக்குவார், ஆனால் இப்போதைய விதிகளின்படி அதிகபட்சம் 48 முதல் 50 மணி நேரம் மட்டுமே இயக்கமுடியும்.

இந்த புதிய சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் 65% இயக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கு, பைலட்டுகள், கேபின் குரூஸ், உதவி ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வானிலை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானப் போக்குவரத்து ரத்துக்கு காரணம் என, ஊழியர்கள் மூலம் இண்டிகோ நிறுவன


ந்திய உள்நாட்டு விமான சேவை கடந்த 10 நாட்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறினாலும், இது செயற்கை யான முடக்கம் என்பதை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலும் கூறியுள்ளனர்.

Advertisment

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டுவர, சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குனரகம் டி.ஜி.சி.ஏ., விமானி களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விமான நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

Advertisment

adani

அதன்படி இந்த சட்டத்தை இரண்டு கட்டமாக அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. முதல் கட்டமாக ஜூலை மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதில் விமானி தினமும் எவ்வளவு நேரம் பறக்கவேண்டும் என்பதற் கும், கட்டாய ஓய்வுக்கும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முன்பு ஒரு விமானி 14 மணி நேரம் வரை விமானத் தை இயக்குவார், ஆனால் புதிய விதிமுறையின் மூலம் அதிகபட்சம் 8 முதல் 10 மணி நேரம் மட்டுமே பறக்க அனுமதியளிக்கப்பட்டது. அதேபோல முன்பு ஒரு விமானத்தை இயக்கிய பின்பு 8 மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பறக்கலாம், ஆனால் புதிய சட்டத்தின்படி கட்டாயம் 12 மணி நேர ஓய்வு தேவை. 

கடந்த ஜூலை மாதம் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் விமானிகளின் இரவுநேர பணிக்கும், வாரம்தோறும் பறக்கும் நேரத்திற்குமான விதிகள் அமலுக்கு வந்தன. அதா வது, முன்பு ஒரு விமானி தொடர்ந்து பல இரவுகள் விமானங்களை இயக்க முடிந்தது. ஆனால் புதிய விதிப்படி இரவு விமானம் இயக்கிய பின் குறைந் தது இரண்டு நாள் முழு ஓய்வு கட்டாயம். அதே போல முன்பு ஒரு விமானி வாரத்திற்கு 55 முதல் 60 மணி நேரம் வரை விமானத்தை இயக்குவார், ஆனால் இப்போதைய விதிகளின்படி அதிகபட்சம் 48 முதல் 50 மணி நேரம் மட்டுமே இயக்கமுடியும்.

இந்த புதிய சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் 65% இயக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கு, பைலட்டுகள், கேபின் குரூஸ், உதவி ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வானிலை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானப் போக்குவரத்து ரத்துக்கு காரணம் என, ஊழியர்கள் மூலம் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் தினசரி 2200 உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயண சேவைகளை வழங்கிவருகிறது. கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும்துயரத்துக்கு தள்ளப் பட்டனர். டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம், கொல்கட்டா, பெங்க ளூரு ஆகிய விமான நிலையங்களில் இண்டிகோ விமானப் பயணிகள் தங்களது விமானப் பயணம் குறித்து தகவல்தெரியாமல் பல மணி நேரம் காத்திருந்து தவித்தனர். விமான நிலையங்களில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மும்பை, டெல்லி என சில விமான நிலையங்களில் கைகலப்பும்  ஏற்பட்டது. இண்டிகோ விமானப் பயணிகள் தண்ணீர், உணவின்றி நிற்க, அமரக்கூட இடமில்லாமல் பலமணி நேரம் தவித்தனர். மருத்துவமனை, அலுவலக மீட்டிங், கட்சி விவகாரம், சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என எதற்கும் செல்ல முடியவில்லை. 

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து வைத்திருந்த ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் என எல்லாம் வீணானது. இது நம் இந்திய சுற்றுலாத் துறையின் வருவாயை முடக்கியது. சர்வதேச அளவில் இந்திய விமானப் பயணம் மீது ஒரு கரும்புள்ளியே விழுந்தது. அன்றைய நாளில் ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இண்டி கோ விமானப் பயணிகளின் உடமைகளை மலைபோல குவித்து வைக்க, தேடியெடுத் துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 4,000 பயணிகள் உடைமைகள் ஒரு வாரமாகியும் கிடைக் காமல் அவதிப்பட்டனர். இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டும் இந்திய விமான போக்குவரத்துத்துறை மௌனம் காத்துவந்தது. 

புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே தெரியவந்தும் இண்டிகோ நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டு களாக புதிய விமானிகளை தேவையான அளவுக்கு பணி நியமனம் செய்யவில்லை.

இண்டிகோ நியமனம் செய்த விமானிகளின் எண்ணிக்கை...

2019- 2020 ஆண்டில்830 விமானிகள்.

2022- 2023 ஆண்டில் 616 விமானிகள். 

2023- 2024 ஆண்டில் 631 விமானிகள். 

நீதிமன்றம் உத்தரவிட்ட இந்த ஆண்டில் வெறும் 418 விமானிகளை மட்டுமே பணிநியமனம் செய்துள்ளது இண்டிகோ நிறுவனம். 

இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனமானது... நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு, டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமானப் போக்கு வரத்து இயக்குனரகம், விமான போக்குவரத்து துறை அமைச்சகம், ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று யாருக்கும் பயப்படவில்லை என்றால் என்ன கார ணம்? பயணிகளின் துயரங்களைப் பற்றி இண்டி கோ நிறுவனத்திற்கு அப்படி என்ன அலட்சியம்? 

இந்த விவகாரம் மீடியாக்களில் பிரதி பலிக்கவே இண்டிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் இண்டிகோ விமானப் போக்குவரத்து இயக்கம் சீராகிவிடும் என்று தெரிவித்தபோதும் அதன்பிறகும் சீராகவில்லை.. 

இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை ஒலித்ததால் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, "ஊழியர்கள் மற்றும் விமானிகள் பற்றாக்குறையால் இந்த குளறுபடி. இதுதொடர்பாக விமான நிறுவனத் திடம் விளக்கம் கேட்டுள்ளோம்''’என தெரிவித்தார். 

யார் இந்த இண்டிகோ? சந்தையை கைப்பற்றியது எப்படி?

adani2

2014ஆம் ஆண்டு வரை ஆரோக்கியமாக இருந்த விமானப் போக்குவரத்து சந்தை, அதற்குப் பின் இரட்டை தனியார் விமான நிறுவனமாக உருவெடுக்கக் காரணம் என்ன.? மற்ற தனியார் விமான நிறுவனங்கள் என்ன ஆனது.?

இண்டிகோ நிறுவனம் 2014-க்கு முன் 30 சதவீத விமான சேவையை இயக்கியது. தற்போது 65 சதவீத விமான சேவையை இயக்கிவருகிறது. 

டாட்டா நிறுவனத்தின் ஏர் இந்தியா 2014க்கு முன் 18 சதவீத விமான சேவையை இயக்கியது. தற்போது 30 சதவீத விமானப் போக்குவரத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் சீராக இயக்கிவருகிறது.

21% விமான சேவையை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் தனியார் நிறுவனம் காணவில்லை.

18% விமான சேவையை இயக்கிவந்த ஸ்பைஸ்ஜெட் தனி நிறுவனம் காணவில்லை. 

9 சதவீத விமான சேவையை இயக்கிவந்த கோ ஏர் நிறுவனமும் காணவில்லை. அதேபோல கிங்பிஷர், பாரமவுண்ட், ட்ரூ ஜெட் (ற்ழ்ன்ங் த்ங்ற்), விஸ்தாரா நிறுவனங்கள் விமானச் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போயின. 

தற்போது இண்டிகோ விமானம் 65%, டாட்டாவின் ஏர் இந்தியா விமானம் 30% ஐந்து சதவீதம் மட்டுமே மற்ற தனியார் நிறுவனங்கள் விமானத்தை இயக்கி வருகின்றன. 

இந்திய விமானத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோவை விமான போக்குவரத்து ஆணையம், அமைச்சரகம் என யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எங்கிருந்து அவ்வளவு தைரியம் அவர்களுக்கு வந்தது? ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கையாலாகாத அரசாக இருக்கவேண்டும் அல்லது கையூட்டு வாங்கிய அரசாக இருக்கவேண்டும். 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு, சுமார் 610 கோடி டிக்கெட் பணம் பயணிகளுக்கு திருப்பியளிக்கப்பட் டது என்றும், பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு ஐந் தாயிரம் முதல் பத்தாயிரம் வரை இழப்பீடு வழங்கப் படும் என்றும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித் துள்ளது. இந்த நிலையில் இந்திய விமானப் போக்கு வரத்து ஆணையம் புதிய விதிகளை அமல்படுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர் களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், "இண்டிகோ நிறுவனம் மூலமாக பா.ஜ.க. அரசு ஆதாயம் பெற் றுள்ளது. இதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்'' என்று கூறினார். மேலும், பா.ஜ.க. அரசு கொண்டு வந்த எலக்ட்ரோல் பாண்ட் எனப்படும் தேர்தல் நிதியை பா.ஜ.க. அரசுக்கு பின்வாசல் வழியாக முறைகேடாக பெற்ற விவரத்தை வெளியிட வலியுறுத்தியபோது, அதற்கு பா.ஜ.க. அரசு மறுத்தது. பிறகு நீதிமன்றம் மூலம் இந்த விவகாரம் அப்பட்டமாக வெளியே வந்தது. 

இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய இயக்கு னர்கள் பட்டியலில் இருப்பவர் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. என்பதும் குறிப் பிடத்தக்கது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு கொடுப்பதாலேயே ஆட்சி நீடிக்கின்றது. இந்த பின்னணியால்தான் இண்டிகோ நிறுவனம் யாரையும் மதிப்பதில்லை.

இண்டிகோ விமான சேவையின்மீது மோடியின் நண்பரான அதானி பார்வை விழுந்துள்ளது. இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? குறிப்பாக கடந்த நவம்பர் 27-ஆம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய விமான பைலட் பயிற்சி நிறுவனத்தின் 72 சதவீதம் பங்குகளை, அதானி குழுமம் வாங்கிய சில நாட்களிலே இண்டிகோவின் விமான சேவை முடங்கியது. 

இந்தியாவின் முக்கியமான விமான நிலையங் களான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் இந்தியாவின் பெரும் பான்மையான விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது மோடியின் ஒன்றிய அரசு. இந்த வகையில் சென்னை விமான நிலையம் அந்த வரிசையில் உள்ளது. தற்போது பெரும்பான்மையான சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் அதானி விமான சேவை பற்றிய விளம்பரங்கள் வரத் துவங்கியுள் ளது. இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் விமானப் போக்கு வரத்தும் அதானிக்கு முழுமையாக தாரைவார்க் கும் நிலைக்குத் தள்ளப்படும்''’என்றார். 


_____________________________
இண்டிகோ சர்ச்சை! நிகழ்வுகளின் காலவரிசை மற்றும் குற்றச்சாட்டுகள்!


2025-க்கு முன்: அதானி விமானத் துறையில் ஏகபோகம் செலுத்த -இண்டிகோ சந்தை மேலாதிக்கம் செலுத்தியது.

2019-2020: ஆறு முக்கிய விமான நிலையங் கள் தனியார்மய மாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப் பட்டது. ரூ.2,440 கோடி மதிப்பிலான டெண்டரை அதானி குழுமம் பெற்றது. அவர்கள் நாடு முழுவதும் பயணி களின் 25% போக்குவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

2020-2024: இண்டிகோவின் மேலாதிக்கம். 1700 விமானங்களுடன் இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் செல்லும் 30% விமான வழித்தடங் களில் விமானங்களை இயக்குகிறது.

2023-ல் பா.ஜ.க.வுக்கு ரூ.31 கோடி தேர்தல் நிதி வழங்கியது. அதானி, ஆண்ழ் ரர்ழ்ந்ள் ஒய்க்ண்ஹ-வை வாங்கி பராமரிப்பு, பழுதுபார்ப்பு, இயக்கம் ஆகியவற்றை மேற்கொள் ளும் ஙதஞ துறையில் பெரும் ஆதிக்கம்பெற்றார்

2025 தொடக்கம்: உஏஈஆ புதிய பைலட் ஓய்வு விதிகளை அறிமுகம் செய்தது. இதில் பைலட்டுகளின் கட்டாய ஓய்வு நேரம் 36 மணியிலிருந்து 48 மணி  நேரமாக உயர்த்தப்பட்டது. இதனால் இண்டிகோ பைலட் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.

நவம்பர் 2025: அதானி பைலட் பயிற்சியில் நுழைவு. எநபஈ பைலட் பயிற்சி மையத்தில் 73% பங்கை அவர் வாங்கினார்.  அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ், எப்ண்ஞ்ட்ற் நண்ம்ன்ப்ஹற்ண்ர்ய் பங்ஸ்ரீட்ய்ண்வ்ன்ங் ஈங்ய்ற்ழ்ங் நிறுவனத்தின் 73% பங்குகளை ரூ820 கோடிக்கு வாங்கியது. இந்திய பைலட்டுகளின் 30% பயிற்சி இங்கு நடக்கிறது.

டிசம்பர் 2025 தொடக்கம்: இண்டிகோ நெருக்கடி வெடித்தது.

டிசம்பர் 1-5: வட இந்திய மூடுபனி, டெல்லியின் காற்று மாசுபாடு அளவு 400 ஆணஒ-க்கு மேலும் அதிகரிக்க, அதேசமயத்தில், பைலட்டுகளுக்கான புதிய ஓய்வு விதியை கடைப்பிடிக்க நெருக்குதல் தரப்பட்டதால் இண்டிகோவின் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்படைந்தனர்.

இதையடுத்து விமானப் போக்குவரத்து அமைச்சர் “தேவைப் பட்டால் சி.இ.ஓ.வை பதவி நீக்குவோம்”என்றார். இண்டிகோ வுக்கு டி.ஜி.சி.ஏ. அபராதம் விதித்ததோடு தற்காலிக சலுகையும் வழங்கியது. இதையடுத்து இண்டிகோ சி.இ.ஓ. மன்னிப்பு கோரியதோடு புதிதாக 500 பைலட்டுகளை நியமித்தார். 

இந்நிலையில் டிசம்பர் 6 முதல் எதிர்க்கட்சிகள், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்           தன. விமானத் துறையிலும், பைலட்டுகளுக்கான பயிற்சியிலும் அதானி மேலாதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்டதாகவும், எநபஈ  நிறுவனத்தை வாங்கியதால் புதிய பைலட்டுகளை உருவாக்குவதில் முழுக் கட்டுப்பாடு அதானிக்குச் செல்கிறது என்றன. ஏற்கெனவே பல்வேறு விமான நிலையப் பராமரிப்புகள், எம்.ஆர்.ஓ. பராமரிப்பு அவர் வசம்தான் இருக்கின்றன.

ஆனால் அரசோ இந்த விவகாரத்தில் அதானியை தொடர்புபடுத்த ஆதாரமில்லை என குற்றச்சாட்டை மறுத்தது. இண்டிகோ விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கோரியது. ஆனால் பா.ஜ.க. இந்த விஷயத்தை திசை திருப்பப் பார்க்கிறது.

-துரை.மகேஷ்

nkn171225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe