Advertisment

விருத்தாசலத்தில் பிரேமலதா? - தி.முக.-தே.மு.த.க. தொண்டர்கள் மனநிலை?

virudachalam

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கடந்த மாதம் 9-ஆம் தேதி வேப்பூர் அருகே பாசார் என்ற இடத்தில் மாநாடு நடத்தி அதில் யாரோடு கூட்டணி என்பதை அறிவிப்பதாகக் கூறினார். அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் காலமிருக்கிறது என்று கூறிவிட்டுச் சென்றார். கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? யாரோடு கூட்டணி என்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளார் பிரேமலதா, இதனால் தி.மு.க. முன்னோடிகள் சந்தோஷத்திலும் தொண்டர்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர். குறிப்பாக விருத்தாசலம்,  ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 2006 தேர்தலில் விருத்தாசலத்தில் நின்று வெற்றிபெற்றார் விஜயகாந்த். அடுத்து 2011-ல் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். மூன்றாவது முறை 2016-ல், மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

Advertisment

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா கட்சியி

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கடந்த மாதம் 9-ஆம் தேதி வேப்பூர் அருகே பாசார் என்ற இடத்தில் மாநாடு நடத்தி அதில் யாரோடு கூட்டணி என்பதை அறிவிப்பதாகக் கூறினார். அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் காலமிருக்கிறது என்று கூறிவிட்டுச் சென்றார். கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? யாரோடு கூட்டணி என்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளார் பிரேமலதா, இதனால் தி.மு.க. முன்னோடிகள் சந்தோஷத்திலும் தொண்டர்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர். குறிப்பாக விருத்தாசலம்,  ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 2006 தேர்தலில் விருத்தாசலத்தில் நின்று வெற்றிபெற்றார் விஜயகாந்த். அடுத்து 2011-ல் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். மூன்றாவது முறை 2016-ல், மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

Advertisment

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளராகி கடந்த 2021 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள பிரேமலதா விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய இரண்டு தொகுதிகளையும் கேட்டுப்பெறுவதில் தீவிரமாக உள்ளார். இரண்டில் ஒன்றில் (விருத்தாசலம்) அவர் உறுதியாக போட்டியிடப்போகிறார் என்கிறார்கள் தே.மு.தி.க.வினர். ரிஷிவந்தியம் தொகுதியில் அவரது தம்பி சுதீஷ் அல்லது விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் இருவரில் ஒருவரை களத்தில் நிறுத்த உள்ளார் பிரேமலதா. 

Advertisment

அதேநேரத்தில் தி.மு.க. சார்பில் 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற்ற வசந்தம் கார்த்திகேயன், தொகுதியில் தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கை அடைந்துள்ளார். தொகுதிக்குத் தேவையான திட்டப் பணிகளை நிறைவேற்றி தொகுதியில் அசைக்கமுடியாத மனிதராக வலம்வருகிறார் இந்த நிலையில் தி.மு.க. தலைமை அந்தத் தொகுதியை பிரேமலதாவுக்கு தாரைவார்க்குமா? ரிஷிவந்தியம் பகுதியை தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. கொடுக்காதென்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள். .அதேநேரத்தில் கொடுத்துவிடுமோ என்ற  குழப்பத்திலும் உள்ளனர் தி.மு.க. தொண்டர்கள்.

விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் தி.மு.க. அரசின் திட்டங்கள் அமைச்சர் கணேசன் முயற்சியினால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் தி.மு.க.வுக்கு  மக்களிடம் ஏற்பட்டுள்ள செல்வாக்கை சுலபமாக அறுவடைசெய்ய திட்டமிட்டுள்ளார் பிரேமலதா என்றும் அவரது எண்ணத்திற்கு தி.மு.க. தலைமை விட்டுக்கொடுக்குமா? கொடுக்காதா? என்றும் தி.மு.க. தொண்டர்கள் ஆங் காங்கே விவாதம் நடத்திக்கொண்டி ருக்கிறார்கள். பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் தானே நின்று வெற்றி பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என தே.மு.தி.க. தொண்டர்கள் அடித்துக் கூறுகின்றனர். 

virudachalam1

தி.மு.க. தலைமை விருத்தாசலம் தொகுதியை கடந்த முறை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்தது. ஆனால் இந்த முறை தி.மு.க. தனது கட்சி வேட்பாளரையே களமிறக்கும் என்ற நம்பிக்கையில், மறைந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் மகளும் நகரமன்ற தலைவருமான சங்கவி முருகதாஸ், மறைந்த எம்.எல்.ஏ. செல்வராசு அவர்களின் தம்பி மகனும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான கணேஷ்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பட்டி வசந்தகுமார் ஆகியோர் சீட்  பெறுவதற் கான கடும் முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தே.மு. தி.க.வுக்கு விருத்தாசலம், ரிஷிவந்தியம், இரண்டு தொகுதிகளையும் தவிர்த்து உளுந்தூர்பேட்டை தொகுதி யைக் கொடுக்கலாம். ஆனால் 2016-ல் தனது கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு டெபாசிட் இழந்த தொகுதியை பிரேமலதா விரும்பமாட்டார் என் கிறார்கள் தே.மு.தி.க.வினர். இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் மாநிலப் பேரவைச் செயலாளர் அருள் அழகன், ரவீந்திரன் ரெட்டியார் மறைந்த எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் மகன் ரமேஷ், சந்திரகுமார், அட்வகேட் விஜயகுமார் இப்படி சீட்டு கேட்டுள்ளவர்கள் பட்டியல் நீளமாக உள்ளது. 

பிரேமலதா இங்கு போட்டியிட்டால் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டிபோட பவர்ஃபுல்லான வேட்பாளர் வேண்டும். அதற்குத் தகுதியான நபர் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன்தான். அவர் கடந்த 2021 தேர்தலில் புவனகிரி தொகுதியில் நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தோடு கட்சியினரிடமும் புவனகிரி தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வருகிறார். அவரை பிரேமலதாவிற்கு எதிராக விருத்தாசலத்தில் அ.தி.மு.க. களமிறக்கவேண்டும். அ.தி.மு.க. இங்கு வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புண்டு.   

விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதியளித்து, அதை ஐந்தாண்டு கால ஆட்சியில் நிறைவேற்றவில்லை என்ற மனக்குமுறல் மக்கள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் எதிரொலிக்கிறது. இது எங்களுக்கு பிளஸ் பாயிண்ட் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

கட்சியின் இழந்த செல்வாக்கை தி.மு.க கூட்டணி மூலம் நிலைநிறுத்த பிரேமலதா போடும் கணக்கு சரியா? தவறா? என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எது எப்படி இருந்தாலும் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணைந்தது எங்களுக்கு சற்று கூடுதல் பலம் என்கிறார்கள் தி.மு.க தொண்டர்கள். 

-எஸ்.பி.எஸ்.

nkn250226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe