Advertisment

ஆதவா..? புஸ்ஸி ஆனந்தா...? கலகலக்கும் த.வெ.க.!

tvk

போட்டியாளருக்கு ஆதரவாக இயங்கும் சமூக வலைத்தளக் கணக்குகள் மீது தங்ல்ர்ழ்ற்  அடிப்பது, whisper campaign மூலம் போட்டியாளருக்கு எதிராக தகவலை வெளிப் படையாக அல்லாமல் முறைசாரா வழிகள் மூலம் ஊதிவிடுவது ஆகியவற்றின் மூலம் புஸ்ஸி ஆனந்தை, ஆதவ் அர்ஜுனா கிறுகிறுக்க வைத்த நிலையில், "கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் நான். என்னுடைய அனுமதி இல் லாமல் எவருடைய பேச்சையும் கேட்கக் கூடாது'' என அனைத்து மா.செ.க்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

Advertisment

"த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ பொதுச்செய லாளராக புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை செயலாளராக ஆதவ் அர்ஜுனா மற்றும் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண் ராஜ்  ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில்... 120 மா.செ.க்களை மட்டுமே நியமித்தது கட்சி. 

Advertisment

இதுவரை தூத்துக்குடி, மணப்பாறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியாக செயலாளர்களை நியமிக்கவில்லை. "கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த, நிரப்பப்படாத இடங்களில் செயலாளர்களை நியமிக்க இன்னும் 15 நபர்களை நியமிக்க வேண் டும்' என புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்திய நிலையில் வெறும் 5 நபர்களை மட்டுமே நியமித்துள்ளது கட்சித் தலைமை. கரூர் சம்பவத்திற்கு பின், கட்சியின் கோஷ்டிகளை தனியாக எண்ணி விடலாம். கட்சியில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான்ராஜ், நிர்மல்குமார், ஜெக தீசன், ஜான் ஆரோக்யசாமி என தனித்தனியாக இர

போட்டியாளருக்கு ஆதரவாக இயங்கும் சமூக வலைத்தளக் கணக்குகள் மீது தங்ல்ர்ழ்ற்  அடிப்பது, whisper campaign மூலம் போட்டியாளருக்கு எதிராக தகவலை வெளிப் படையாக அல்லாமல் முறைசாரா வழிகள் மூலம் ஊதிவிடுவது ஆகியவற்றின் மூலம் புஸ்ஸி ஆனந்தை, ஆதவ் அர்ஜுனா கிறுகிறுக்க வைத்த நிலையில், "கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் நான். என்னுடைய அனுமதி இல் லாமல் எவருடைய பேச்சையும் கேட்கக் கூடாது'' என அனைத்து மா.செ.க்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

Advertisment

"த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ பொதுச்செய லாளராக புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை செயலாளராக ஆதவ் அர்ஜுனா மற்றும் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண் ராஜ்  ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில்... 120 மா.செ.க்களை மட்டுமே நியமித்தது கட்சி. 

Advertisment

இதுவரை தூத்துக்குடி, மணப்பாறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியாக செயலாளர்களை நியமிக்கவில்லை. "கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த, நிரப்பப்படாத இடங்களில் செயலாளர்களை நியமிக்க இன்னும் 15 நபர்களை நியமிக்க வேண் டும்' என புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்திய நிலையில் வெறும் 5 நபர்களை மட்டுமே நியமித்துள்ளது கட்சித் தலைமை. கரூர் சம்பவத்திற்கு பின், கட்சியின் கோஷ்டிகளை தனியாக எண்ணி விடலாம். கட்சியில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான்ராஜ், நிர்மல்குமார், ஜெக தீசன், ஜான் ஆரோக்யசாமி என தனித்தனியாக இருந்தாலும், கட்சி இப்பொழுது மூன்று கோஷ்டிகளாக பிரிந்துள்ளது. 

அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்யசாமிக்கு கார் ஒன்றையும் கொடுத்து, அதற்கு டிரைவரையும் நியமித்தது மட்டுமில் லாமல், அவருக்கு பாதுகாப்பாக பவுன்சர் ஒருவ ரையும் ஆதவ் அர்ஜுனா நியமிக்க... இப்பொ ழுது ஜான் ஆரோக்ய சாமி, ஆதவ் அர்ஜுனா ஒரு கோஷ்டி. இந்த கோஷ்டி, விஜய் யை தன்பக்கம் இழுப்பதற்காக, தன்னுடைய பேச்சை மட் டு ம் கேட்பதற் காக புஸ்ஸி ஆனந்தையும், அருண்ராஜையும் எதிர்த்து கட்சிக்குள்ளேயே அரசியல் செய்கின்றது. 

இதில் ஆதவ் அர்ஜூனா வின் "வாய்ஸ் ஆப் காமன்' டீம் மா.செ-க்கள் 120 நபர்களிட மும் தனித் தனியாக பேசி, "உங்களுக்கு என்ன தேவை? பணமா, பொருளா? உங்க ளுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சப்போர்ட் செய்கின்றோம்' என மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக சர்வே எடுத்தது. இதனை தற்பொழுது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கூறியபோது, "இப்ப வந்தவன் பேச்சைக் கேட்டீர்கள் என்றால் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பல்ல' என மிரட்டி வைத்தது தான் மிச்சம். நாங்கள் யார் பேச்சை கேட்பது..?'' என்கின்றார் மேற்கு மண்டலத்தி லுள்ள மாவட்ட நிர்வாகி ஒருவர். 

"கட்சி கலைக்கப்பட்டால் புஸ்ஸி ஆனந்த் ரியல் எஸ்டேட் தொழில், ஆதவ் அர்ஜுனாவிற்கு மீண்டும் வெறொரு கட்சி, அதுபோல்தான் நிர்மல்குமாரின் நிலையும். ஆனால் திரைத் துறையை விட்டு வந்த விஜய்க்கும், ஐ.ஆர்.எஸ். பணியை விட்டு வந்த நமக்கும்தான் ஆப்பு. ஆதலால் கட்சிதான் எதிர்காலத்திற்கு சரியான வழி' என நம்பிய அருண்ராஜ், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புஸ்ஸி ஆனந்திற்கும், ஆதவ்விற்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டி குறித்து விஜய்யிடம் போட்டுக் கொடுத்துள்ளார். குறிப்பாக, அதில் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு உளவுத்துறையின் சிறப்பு எஸ்.பி. சரவணனிடம் நெருக்கமாக இருப்பதும், அவர் கூறியதின் பேரில் ஏற்காடு அருகில் தங்கி யிருந்தது குறித்தும், அதுபோல் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமனின் செயல்பாடுகளும், அதற்கு இணக்கமாக ஜான் ஆரோக்யசாமி இருப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளாராம். 

tvk1

இது மாமல்லபுரத்தில் பொதுக்குழு மேடைக்குப் பின்னால் வி.ஐ.பி.க்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏழ்ங்ங்ய் தர்ர்ம்ல்தான் நடந்தது என்கின்ற தகவலும் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்தை கலகலக்க வைத்துள்ளது. தென் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான மா.செ. ஒருவரோ, "சிறப்பு பொதுக்குழு மேடையில் பேசும்போது ஒரு சில மா.செ.க்களின் பெயர்களை வேண்டுமென்றே குறி வைத்து பேசினார் ஆதவ் அர்ஜுனா. குறிப்பிடப்பட்ட அந்த மா.செ.க்கள் அனைவருமே புஸ்ஸி ஆனந்தின் ஆட்கள். புஸ்ஸி ஆனந்திற்கும் அந்த மா.செ.க்களுக்கும் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தவே அந்தப் பேச்சு  என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்றாலும், புஸ்ஸீக்கு அது புரியவில்லை. தலைவரிடம் நேரடியாகக் கூற எங்களுக்கு வாய்ப் பில்லை. என்ன செய் வது.? என்னைப்போல் 24 மா.செ.க்களின் நிலை கேள்விக்குறி யாகியுள்ளது. பேசா மல் கட்சியை விட்டே விலகிவிடலாம் என் கின்ற நிலைப்பாட் டிற்கு வந்துவிட் டோம்'' என்கின்றார்.

"வாய்ஸ் ஆஃப் காமன் ஆட்கள்தான் தற்பொழுது த.வெ.க.வை கட்டுப்பாட்டில் வைத் திருக்கின்றனர் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக த.வெ.க. தொடங்கிய போது புஸ்ஸி ஆனந்த் கட்சிப் பதவிக்கு பணம் வாங்கிக்கொண்டு பதவிகளைக் கொடுத்தார் என சமூக வலைத்தளங்களில் புஸ்ஸி ஆனந்த்துக்கு எதிரான தகவல்களை பதிவிட்டதில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கும் உண்டு. தனக்கு எதிராக விஜய்க்கு அடுத்த இடத்தைக் கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா பல வழிகளை கையிலெடுக்கின்றார். அதில் சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகம் என்பது தெரியவர, மதுரையை சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மூலம் வார் ரூமை அமைத்தது புஸ்ஸி ஆனந்த் தரப்பு. இது ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக "யார் இந்த ஏழரை மூக்கன்?' என எதிர்கணைகளாய் பாய... ஆதவ் அர்ஜுனா தரப்பும், "பிளாக்கில் டிக்கெட் விற்றவன் கட்சியின் பொதுச்செய லாளரா..?' என தன் பங்கிற்கு பாய... இரு தரப் பும் எதிரெதிர் சமூக வலைத்தளப் பக்கங்களை குறிவைத்து தங்ல்ர்ழ்ற் அடித்து புகார்களை தெரிவித்துள்ளதாக வலைத்தள விபரங்கள் குறிப்பிடுகின்றன.

கரூர் சம்பவத்திற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் தலைமறைவான நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட ஜான் ஆரோக்யசாமி, அமைப்பு ரீதியான கூட்டங் களை நடத்த முன்வர... "உங்களுக்கு கார் கொடுத்து டிரைவரையும் பவுன்சரையும் கொடுத்தது உங்களுடைய நன்மைக்காக அல்ல. உங்களை வேவு பார்ப்பதற்காகவே' என்கின்ற தகவல் அவருக்கு வர கப்சிப் ஆகியுள்ளார் ஜான் ஆரோக்கியசாமி.

"வாய்ஸ் ஆஃப் காமன்தான் கட்சிக்கான ஐ.டி. விங். இது தேர்தல் பணிகளை பார்க்கின்றது என்றால் என்னிடம் என்ன நடக்கின்றது என்பதை கூறவேண்டும் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ்வை நெருக்கிய நிலையில், "உன்னிடம் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை' என ஆதவ் ஒருமையில் பேசினார். நெ.2 இடத்தைப் பிடிப்பதும், விஜய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப் பதும்தான் ஆதவ்வின் எதிர்காலத் திட்டம். இதற்காக ஒருவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக  whisper campaign ஆக  வதந்தி பரப்பிவருகின்றார். இது கட்சிக்கு நல்லதல்ல! 

இதுபோல்தான் வி.சி.க.விலும் செய்தார்... தெருவிற்கு வந்தார். இப்பொழுது இங்கு செய்கின்றார். தெருவிற்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கின்றனர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள்.

"த.வெ.க.வை பொறுத்தவரை விஜய்தான் பலம். ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் அச்சுறுத்தல்கள் விஜய்யை பயமுறுத்தாது என்றாலும், இவர்கள் கோஷ்டிப் பூசலால் வரும் வாரங்களில் த.வெ.க.வின் மா.செ.க்கள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணையும் செய்தியை பார்க்கலாம்' என்கின்றனர் விபரமறிந்த அரசியல் வட்டாரத்தினர். 

nkn121125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe