Advertisment

எடப்பாடியா? உதயகுமாரா?  -குழப்பத்தில் கடையநல்லூர்!

kadaiyanalur


தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரை,  அ.தி.மு.க. ஒரே நபருக்கு மீண்டும் தொகுதியை கொடுத்ததில்லை. அதேபோல் தொடர்ச்சியாக இங்கு வென்றதில்லை என்ற "மேஜிக்' சென்டிமெண்டை கொண்டது. இந்த சென்டிமெண்டை உடைத்து அ.தி.மு.க.வில் மீண்டும் சீட் வாங்கும் முனைப்பிலிருக்கின்றார் கடையநல்லூர் சிட்டிங் எம்.எல்.ஏ. இதற்காக, எடப்பாடியை நம்பாமல் மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கரத்தைப் பற்றியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி தெற்கு மாவட்டமாகவும், சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் (தனி) உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி வடக்கு மாவட்டமாகவும் அ.தி.மு.க.வில் பிரிக்கப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு மாவட்ட மா.செ.வாக இருப்பவர் கடையநல்லூரின்


தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரை,  அ.தி.மு.க. ஒரே நபருக்கு மீண்டும் தொகுதியை கொடுத்ததில்லை. அதேபோல் தொடர்ச்சியாக இங்கு வென்றதில்லை என்ற "மேஜிக்' சென்டிமெண்டை கொண்டது. இந்த சென்டிமெண்டை உடைத்து அ.தி.மு.க.வில் மீண்டும் சீட் வாங்கும் முனைப்பிலிருக்கின்றார் கடையநல்லூர் சிட்டிங் எம்.எல்.ஏ. இதற்காக, எடப்பாடியை நம்பாமல் மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கரத்தைப் பற்றியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி தெற்கு மாவட்டமாகவும், சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் (தனி) உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி வடக்கு மாவட்டமாகவும் அ.தி.மு.க.வில் பிரிக்கப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு மாவட்ட மா.செ.வாக இருப்பவர் கடையநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி. தெற்கு மா.செ. செல்வமோகன்தாஸ். சமீபத்தில் செல்வமோகன்தாஸின் சகோதரர் போக்ஸோ வழக்கில் உள்ளே சென்றதும், வடக்கு மா.செ. சாதியை முன்னெடுப்பதும், எடப்பாடிக்கு தலைவலியாகியுள்ளது.

Advertisment

"கடையநல்லூர் தொகுதியில் இஸ்லாமியர் களும், தேவேந்திரகுல வேளாளர்களுமே தொகுதி யின் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கின்றனர். 1967 முதல் 2021வரை நடைபெற்ற 13 தேர்தல்களில் அ.தி.மு.க. 6 முறை, தி.மு.க. 3 முறை, காங்கிரஸ் ஒரு முறை மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 முறையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி, "எனக்கு கீழேயுள்ள தனித்தொகுதிகளை இன்னாருக்குத்தான் பரிந்துரைக்கவுள்ளேன்'' எனக்கூற, அவரை நம்பி கோடிக்கணக்கில் ரூபாய்களை கொட்டிக் கொடுத்துள்ளனர் சிலர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவர, மா.செ. மீது கோபக்கணைகளை வீசினார். அ.தி.மு.க.வின்  தேர்தல் சுற்றுபயணத்தின்போது எடப்பாடியின் மகன், "இவர் சரியில்லை' எனக்கூற, தனக்கெதிராக கட்சியின் போக்கு இருந்ததால், வேறு வழியில்லாமல் சாதியை கையிலெடுத்துள்ளார் வடக்கு மா.செ. கிருஷ்ணமுரளி. இதற்காக ஆர்.பி. உதயகுமாரிடம் சரணடைய, கவுண்டர் ஸ்ள் முக்குலத்து சமூகப் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது'' என்கிறார் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் ஆதரவில் தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயோ, "கிருஷ்ணமுரளி, கடையநல்லூர் தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. இத்தொகுதியிலிருந்து கேரளாவிற்கு தினமும் 

650 லாரிகள் மூலம் பல ஆயிரம் டன் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. லாரிகளால் பல்வேறு விபத்துகளில் பலநூறு பொதுமக்கள் பலியாகியுள்ளார்கள். இதைத் தடுக்காமல் கனிமவளத் திருடர்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறார் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி. அதுபோக, விவசாய நிலங்களை யானைகள், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க  நடவடிக்கை இல்லை'' என எக்கச்சக்கமாக புகாரை வாசிக்கிறது.

இது நமக்கு கேடு விளைவிக்குமென, மேஜிக் சென்டிமெண்டை  சாக்காக வைத்து "உனக்கு சீட் இங்கில்லை, அ.ம.மு.க.விலிருந்து வந்த அய்யாத்துரை பாண்டியனே இங்கு வேட்பாளர்'' என்றது எடப்பாடி டீம். அதுபோக, "ஒன்று மா.செ.வாக இரு, இல்லையெனில் பதவி விலகிவிடு' என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், "முக்குலத்து வாக்குகளுக்கு தலைமை தாங்கும் ஓ.பி.எஸ். நம்மிடமில்லை. எனவே முக்குலத்து மக்களின் பிரதிநிதியாக மாறுங்கள். கவுண்டர் சமூகத்தின் எடப்பாடி முதல்வர், நீங்கள் துணைமுதல்வர்'' என ஆர்.பி.உதயகுமாரை மெருகேற்றியுள்ளார் கிருஷ்ணமுரளி. அதனால் தான் ஆர்.பி.உதயகுமார் துணைமுதல்வர் கனவில் கிருஷ்ண முரளியை தன்னருகில் வைத்துள்ளார்'' என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.'

குண்டாறு அணையில் சேறு நிரம்பி காணப்படுவதால் போதிய நீரைத் தேக்க முடியவில்லை. இந்த அணையை தூர் வாரவேண்டும். அதனருகிலுள்ள பூங்காவை சீரமைத்து, சுற்றுலாத்தலமாக்கவேண்டும். அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றையும் தூர்வாரி, அவற்றின் அருகில் பூங்கா அமைக்கவேண்டும். கடையநல்லூரில் கழிவுநீர் பிரச்சினையால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காண வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேரளாவிலிருந்து கொண்டுவந்து சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மின்னணு சாதனக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ள நிலையில், அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்த அய்யாத்துரை பாண்டியன், மாநில நிர்வாகி சுப்பையா பாண்டியன்,  டாக்டர் சுசிதரன் மற்றும் பலர் அ.தி.மு.க.வில் சீட் பெற கடும் கோதாவில் உள்ளனர்.

வெல்வது எடப்பாடி பழனிச்சாமியா? ஆர்.பி.உதயகுமாரா? என்பதனை யார் வேட்பாளராக வரவுள்ளார் என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்!

-வேகா

nkn250226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe