நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பட்சிராஜன் மகள் சிவமதி. கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்துவரும் சிவமதி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மயக்கமடைந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றிக் காணப்பட, அவரது குடும்பத்தினர் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் சிவமதியின் கழுத்தில் காயங்கள் இருந்தன என்கின்ற தகவலோடு, இறந்த மாணவி சிவமதி முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததாகவும், இதற்கு குடும்பத்தில் எதிர்ப்பிருந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். இது சாதி ஆணவக்கொலையாக இருக்க வாய்ப்பு என மாவட்டம் முழுமையும் பரவியது.
சிவமதியின் காதலனான ஆனந்தகிருஷ்ணன் "நான் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவன். பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந் தவர் சிவமதி. நாங்கள் ஒருவருக்கொருவர் வ
நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பட்சிராஜன் மகள் சிவமதி. கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்துவரும் சிவமதி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மயக்கமடைந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றிக் காணப்பட, அவரது குடும்பத்தினர் கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் சிவமதியின் கழுத்தில் காயங்கள் இருந்தன என்கின்ற தகவலோடு, இறந்த மாணவி சிவமதி முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததாகவும், இதற்கு குடும்பத்தில் எதிர்ப்பிருந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். இது சாதி ஆணவக்கொலையாக இருக்க வாய்ப்பு என மாவட்டம் முழுமையும் பரவியது.
சிவமதியின் காதலனான ஆனந்தகிருஷ்ணன் "நான் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்தவன். பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந் தவர் சிவமதி. நாங்கள் ஒருவருக்கொருவர் விரும்பிக் காதலித்து வந்தோம். நான் பட்டிய-ன வகுப்பைச் சார்ந்தவன் என்பதால் சிவமதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். அவரது பெற்றோர், தாய்மாமாவான பழனி ஆகியோர் சிவமதியை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திவந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள நினைத்த நாங்கள், செங்கோட்டை (புளியரை) அருள்மிகு சிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோவிலில் வைத்து 06/02/2026 வெள்ளிக்கிழமை திருமணம்செய்ய முடிவெடுத்து, அதற்கான பத்திரிகை அச்சடித் தும், திருமணத்திற்கு பதிவுசெய்வதற்கு இணையத்தில் வருவாய்த்துறை அதிகாரிக்கு திருமணம் ஆகவில்லை என்ற சான்று பெறவேண்டி யும் விண்ணப் பித்தோம். இதனையறிந்த சிவமதியின் பெற்றோர் 01/02/2026 (ஞாயிற்றுக் கிழமை) அவ ளுடைய செல் போனைப் பறித்து வைத்துக் கொண்டனர். அவளை, தொடர்ந்து துன்புறுத்தி அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அவர் பாட்டியின் மொபைல் எண்ணிலிருந்து (94435 லலலலல) எனது மொபைல் எண்ணிற்கு காலை 11:20க்கும், பின்பு மதியம் 12:15-க்கும் போன் செய்தார். வேறு சமூக ஆணோடு திருமணம் செய்ய நினைத்தால் உன் னைக் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாகத் தெரி வித்தார். அவள் அழுதபடி பேசியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது. மாலை சுமார் 6:00 மணியளவில் சிவமதி இறந்துவிட்டது தெரிய வந்தது. நல்ல ஆரோக் கியத்துடன், நல்ல மனநிலையிலிருந்த சிவமதி இறப்பு பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரும், தாய்மாமாவும் சேர்ந்து அவளைக் கொலை செய்துள்ளார்கள். அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/padukolai1-2026-02-05-16-59-34.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, "முதலில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பழையபேட்டை கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவள் கழுத்தில் காயத்துடன் காணப்பட்டிருக்கிறாள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பிவைத்துள்ளனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனந்தகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணை யாளரைச் சந்தித்து வன்கொடுமை மற்றும் ஆணவக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சிவமதியின் உடலை ஆனந்தகிருஷ்ண னிடம் ஒப்படைக்கவேண்டும், ஆனந்தகிருஷ்ண னுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யிருக்கிறோம்'' என்றது.
இதையடுத்து சிவமதி, (01.02.2026) மாலையில் இறந்தது சம்பந்தமாக மேற்படி இறந்துபோன சிவமதியின் தாயார் ரேவதியின் புகாரின் அடிப்படையில் 01.02.2026 பேட்டை காவல் நிலையத்தில் 194 இசநந (சந்தேக மரணம்) பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்து பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் புலன்விசாரணை செய்துவந்தார். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதிசெய்வதற்காக, 02.02.2026 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், இவ்வழக்கின் புலன் விசாரணையினை காவல் உதவி ஆணையர் (டவுண் சரகம்) அவர்களுக்கு மாற்றம்செய்து உத்தரவிட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்ட கையோடு, சிவமதி வீட்டின் அருகிலுள்ள அனைவரையும் அழைத்து விசாரித்தது. இதில் சிவமதியின் தாயாரை விசாரித்தபோது, சிவமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துப்பட்டாவைக் காண்பித்தார்.
சிவமதியின் உறவினர்களோ, "சிவமதி வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என்பது வெளியே தெரியவந்தால் தனது குடும்பமானம் போய்விடும் எனக்கருதிய அவரது தாயார், மகள் தற்கொலைக்குப் பயன்படுத்திய துப்பட்டாவை மறைத்து வைத்திருந்தார். அதனை இவர்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர்'' என்றனர். இதே வேளையில் பிரேதப் பரிசோதனை முடிவும் தற்கொலை என்றே வந்தது.
"இந்த இளைஞன் மீதுதான் ஏதோ தவறு உள்ளது. இவனால் அந்தப் பெண் மன தளவில் பாதிக்கப்பட்டு உளவியல்ரீதியாக தற்கொலை செய் திருக்கலாம்'' என்றொரு விவாதம் சமூக வலைத்தளத்தில் பகிரப் பட்டு வருவது விவ காரத்தை வேறு திசைக்குத் திருப்பி யுள்ளது.
-வேகா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us