Advertisment

ஐ.பி.எஸ். மாநாட்டில் வருண்குமார் வைத்த ஆப்பு! -சிக்கலில் நா.த.க.!

ss

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த 2023, ஆகஸ்ட் 11 முதல் வருண்குமார் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றிவரு கிறார். இந்தாண்டு கடந்த ஜூலை 11-ஆம் தேதி திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன்மீது வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

vv

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த 2023, ஆகஸ்ட் 11 முதல் வருண்குமார் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றிவரு கிறார். இந்தாண்டு கடந்த ஜூலை 11-ஆம் தேதி திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன்மீது வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

vv

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக ஊடகங்களில், எஸ்.பி. வருண்குமார் சாதிப் பாகுபாடு பார்ப்பதாக அவதூறு கருத்து களை பரப்பிவந்தனர். அதைத் தொடர்ந்து, சாட்டை துரை முருகன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் சீமானுடன் சேர்ந்து எஸ்.பி.யை இழிவு படுத்தி பேட்டி கொடுத்தார் கள். தொடர்ந்து அவரை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளிவந்த தால், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி திருச்சி தில்லைநகர் போலீசில் எஸ்.பி. வருண்குமார் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், பெயர்தெரி யாத 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisment

இந்நிலையில், சண்டிகரில் 5-வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாட்டை பிர தமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கிவைத்தனர். சைபர் க்ரைம் துறையில் தற்போதுள்ள சவால்கள் குறித்து அமைக்கப்பட்ட, 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவுக்குத் தலைமையேற்று, உரையாற்ற வருண்குமாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி. வருண்குமார், “"தமிழகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியினர், பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக தமிழகத்தில் இருந்துகொண்டே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பதுபோல் இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள்மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்குப் பதிலடியாக, தன்னையும், ஐ.பி.எஸ். அதிகாரியான தன் மனைவி, குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரித்து எக்ஸ் வலைத்தளம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப் போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறை யாக புகாரளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், ஆபாசமான பதிவுகளை யார் செய்தது என்ற விவரம்கேட்டு, சமூக வலைத்தள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பி மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விவரங்கள் கிடைக்கவில்லை. என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்த ரித்து வெளியிடப்பட்ட படங் கள் சமூக வலைத்தளங்களில் இன்றைக்கும் உள்ளன. பிரி வினைவாதத்தை ஊக்குவிக்கும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் க்ரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும்''’ என்று பேசியுள்ளார்.

nkn071224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe