10,25,000 கோடி ருபாய் முதலீடுகள்! 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! -தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!

TRRB

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை நேர்காணல் கண்டோம். நம்முடைய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை மாதிரி மக்கள் வாழ்க்கையில் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்த தொழில்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களை பார்க்க முடிகிறது; மக்கள் இது குறித்து பேசுகிறார்கள்; இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது?

தொழில்துறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எனக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். முதல் இரண்டரை வருடம் போராடி மீட்டெடுத்துக் கொடுத்தார். அதனால் எனக்கு வேலை செய்ய எளிமையாக இருந்தது. தொழில்துறை குறித்து எளிய மக்கள் வரை எதுவும் பேசமாட்டார்கள்; பேச வைக்க வேண்டும் என்று தான் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தோம். இது திட்டமிட்டு எடுத்த முடிவு தான்.

TRRB

தி.மு.க. அரசு அடுத் தடுத்து திட்டங்களை அறி வி

தி.மு.க. அரசு அடுத் தடுத்து திட்டங்களை அறி வித்து நிறைவேற்றிவிட்டு சென்று விடுவார்கள். அது குறித்து பேச மாட்டார்கள். அது சிலசமயம் எங்களுக்கு எதிராகவும் அமைந்தது. எங்களது பிள்ளைகளுக்கே எங்கள் சாதனை தெரியா மல் இருந்தது. அதனால் அது குறித்து தொடர்ச்சி யாக பேசினோம், சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக சொன் னோம். அதனால் மக்கள் அது குறித்து பேச ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டிற்கு தொழில்துறை முதலீடுகளை எப்படி கொண்டு வந்தீர்கள்?

தமிழ்நாட்டிற்கான முதலீடு என்று வரும் பொழுது, முதலில் இந்தியா பற்றிய பார்வையை தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று தான் சொல்வோம். தமிழ்நாட்டில் நடந்த மாற்றத்தையெல்லாம் நாம் உலகநாடுகளுக்கு சுட்டிக் காட்டுகிறோம். நார்வே போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு அதைப் போல பாருங்கள் என்று சொல்வோம். சீனாவிற்கு இணையான உற்பத்தி மேம்பாடு எங்களிடத்திலும் உள்ளது. எங்களால் நிறைய உற்பத்தியை செய்து தர முடியும் என்று தமிழ்நாட்டை உலகநாடுகளில் மார்க்கெட்டிங் செய்து முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிறோம்.

இந்தியாவிற்கு எந்த முதலீட்டாளர்கள் வந்தாலும் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்து முதலீடு செய்வது பற்றி யோசித்து விட்டுத் தான் அடுத்த மாநிலங்களுக்குச் செல்வார்கள். அந்த அளவிற்கு தமிழகத்தினை பிராண்ட் செய்திருக் கிறோம். தொழில்துறை வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும். எனவே எங்கு சென்றாலும் தமிழ்நாடு என்ற முத்திரை யை பதித்து, அதன் வழியாக 10 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு வந்தோம்.

தொழில்துறை அமைச்சராக ஆன பிறகு முதல்வரோடு சென்றுவந்த அமெரிக்க பயணம் தமிழகத்திற்கு கொண்டு வந்தது என்ன?

பல நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும்போது இங்கே போடப்படுகிற புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவை எவ்வாறு முதலீடாக மாறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. வெறும் பேப்பரில் இல்லாமல் முதலீட்டாளர்கள் இங்கே வந்து அலுவலகங்கள் அமைத்து முதற்கட்ட ஆயத்தப் பணிகளை ஆரம்பிப்பது தான் முக்கியம்.

எல்லா முதலீட்டாளர்களிடமும் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. யாரெல் லாம் உண்மையாகவே நிறுவனங்களை ஆரம்பிப்பார்களோ, தொழிற்சாலைகளை துவங்குவார்களோ அவர்களோடு தான் ஒப்பந்தம் செய்தோம். 50 லட்சம் பேருக்கு இந்த 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை எட்டிவிட்டோம். இன்னும் 18 லட்சம் தான் பாக்கியிருக்கிறது. நிச்சயம் அதை அடைவோம்.

அமெரிக்க பயணம் மட்டுமல்லாது ஸ்பெயின், துபாய், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழில்துறையில் முதலீடுகளுக்கு 7500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட் டோம். இது தமிழக தொழில்துறையில் 65 சதவீதம் செயல்படுத்தப்பட்டதாகவும் மாறி யிருக்கிறது.

சாம்சங் என்ற பிராண்ட் பிரபலமாக இருந்ததற்கு இணையாக தமிழகத்தில் பேசுபொருளானது. அது குறித்து?

மீண்டும் 100 பேரை வேலைக்கு எடுக்கப் போகிறோம். மொத்தமாக 3500 பேரை வேலைக்கு வைக்கப் போகிறோம். 1000 கோடி ரூபாய் மீண்டும் முதலீடு செய்யப்போகிறோம் என்றும், எங்களுடைய ஊழியர்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் சாம்சங் நிறுவனமே சொல்லியுள்ளது. இது அந்த நிறு வனம் ஊழியர்களின் மீதும் நமது முதல்வரின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையையும், மரியாதையையும் உணர்த்துகிறது.

"எங்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை உள்ளது. அதனை படிப்படியாக நாங்கள் சரிசெய்து வருகிறோம். இன்னும் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் சரி செய்துவிடு வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்று சாம்சங் நிறுவனம் ஊழியர்களிடமும், அரசிடமும் சொல்லியிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் என்று வந்தால் பிரச்சனைகள் வரத்தானே செய்யும், அது தானே பிசினஸ் என்றாகவும் இருக்கிறது. ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி சரி செய்ய வேண்டியதை சரி செய்யும் என்று அரசிடம் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்.

நேர்காணல் : வசந்த் பாலகிருஷ்ணன்

தொகுப்பு : தாஸ்

nkn170525
இதையும் படியுங்கள்
Subscribe