காருக்குள் மோடி நடத்திய விசாரணை! -அதிர்ச்சியில் பா.ஜ.க. புள்ளி

s

திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழக விழா விற்கு கடந்த வாரம் வந்தி ருந்த பிரதமர் மோடி அதிரடி விசாரணையில் இறங்கி ஒரு பா.ஜ.க. புள்ளிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அப்படி என்னதான் நடந்தது?

dd

காந்திகிராமப் பல்கலைக்கழக விழாவிற்காக கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடி, விழா முடிந்து மதுரைக்கு காரில் கிளம்பினார். அப்போது தன்னை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பார்த்ததும், தனது காரை நிறுத்தச் செய்திருக்கிறார். உடனே மகிழ்ச்சியான அண்ணாமலை, மோடியின் காருக்கு அருகில் வந்து வணக்கம் சொல்ல, அப்போது காரின் கதவு திறந்திருக்கிறது. மோடி காரில் ஏறும்படி ஜாடை காட்ட, அண்ணாமலையும் பரவசமாக உள்ளே ஏறி அமர்ந்திருக்கிறார்.

அங்கிருந்து பிரதமர

திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழக விழா விற்கு கடந்த வாரம் வந்தி ருந்த பிரதமர் மோடி அதிரடி விசாரணையில் இறங்கி ஒரு பா.ஜ.க. புள்ளிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அப்படி என்னதான் நடந்தது?

dd

காந்திகிராமப் பல்கலைக்கழக விழாவிற்காக கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடி, விழா முடிந்து மதுரைக்கு காரில் கிளம்பினார். அப்போது தன்னை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பார்த்ததும், தனது காரை நிறுத்தச் செய்திருக்கிறார். உடனே மகிழ்ச்சியான அண்ணாமலை, மோடியின் காருக்கு அருகில் வந்து வணக்கம் சொல்ல, அப்போது காரின் கதவு திறந்திருக்கிறது. மோடி காரில் ஏறும்படி ஜாடை காட்ட, அண்ணாமலையும் பரவசமாக உள்ளே ஏறி அமர்ந்திருக்கிறார்.

அங்கிருந்து பிரதமர் மோடியோடு மதுரை விமான நிலையம்வரை அண்ணாமலை பயணித்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. மறுநாள், ஒரு தனியார் நிறுவன விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், பா.ஜ.கவின் தலைமையகமான கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ‘"பிரதமரோடு காரில் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்''’என சிலாகித்துக்கொண்டார்.

அதே சமயம், எந்த அரசுப் பதவியிலும் இல்லாத ஒரு நபரை புரோட்டோ கால் விதிமுறைகளையும் மீறி, நாட்டின் பிரதமரே தனது அரசு வாகனத்தில் அழைத்துச் சென்றது குறித்து ஒரு பக்கம் சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில், ‘பிரதமரின் காருக்குள் அண்ணாமலைக்கு அர்ச்சனை நடந்தது’என்று ஒரு தகவலும் விறுவிறுப்பாகப் பரவ... பிரதமரின் காருக்குள் என்னதான் நடந்தது?’ என்பது குறித்து கமலாலய வட்டாரங்களில் விசாரித்தோம்.

நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்ட தமிழக பா.ஜ.க. வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்...

dd

"பிரதமர் நிகழ்ச்சி முடித்து திரும்பும் போது, வானிலை சரியில்லாததால் ஹெலிகாப்டரில் ஏறாமல் கார் வழியாகவே மதுரை ஏர்போர்ட் போனார். அதே காரில் முதலில் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் மட்டுமே மதுரை வரை பயணிப்பதாகக் கூறப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரதமரின் விருப்பப்படி முன்னால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் செல்வார் என தகவல் வந்தது. திடீரென அந்தக் காரில் அண்ணமலை ஏற்றப்பட்டார். அந்தக் காரில் மகிழ்ச்சியாக அண்ணாமலை பயணித்த நிலையில், கார் பை-பாஸ் சாலைக்கு வந்த பிறகுதான் பேச ஆரம்பித்திருக்கிறார் மோடி. பெரும்பாலும், மோடியின் தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணனே பதிலளித்திருக்கிறார். ஏற்கனவே, இங்குள்ள மூத்த நிர்வாகிகள் சிலர் மூலமும், உளவுத்துறை அதிகாரிகள் மூலமும் அண்ணாமலை மீது கட்சியினர் கிளப்பி வரும் அதிருப்திகள் குறித்து பிரதமருக்கு தகவல் சென் றுள்ள நிலையில், அது பற்றி அண்ணாமலை யிடமே நேரடியாகக் கேட்டிருக்கிறார் மோடி.. அதற்கு அண்ணாமலை பதட்டமாகவும் மழுப்பலாக வும் பதில் கூறிய நிலையில், ‘"இனிமே இது மாதிரி உங்க மேல புகார் எதுவும் வரக் கூடாது. கட்சி ரொம்ப முக்கியம். அடுத்த தேர்தலுக்குள்ள நல்ல ரிசல்ட் மட் டும்தான் எனக்கு வரணும் என்று சொன்ன மோடி, கட்சியோட சீனியர்கள் ரொம்ப முக்கியம். அந்த நினைப்பு எப்பவும் இருக்கட்டும்' என் றும் சொன்னாராம். அவர் குரலில் இருந்த கடுமை அண்ணாமலையை மிரளவச்சிருக்கு. கட்சியின் சீனியர்களை அண்ணாமலை மதிப்பதில்லை என்ற புகாரால்தான் மோடி கோபமாகி இருக்கார். ஆக மொத்தத்தில், அவங்க பயணிச்ச அந்த 48 நிமிசமும் படபடப்புலயே இருந்திருக்கிறார் அண்ணாமலை" என்றார்கள் புன்னகையோடு. காருக்குள் மோடி நடத் திய விசாரணையாலும் கண்டிப்பாலும் அண்ணா மலை அன்று முழுதும் அப்செட்டிலேயே இருந்தாராம். அண்ணாமலையுடன் மோடி பேசும்போது அ.தி. மு.க. பற்றியும், எடப்பாடி பற்றியும்கூட விசாரித் தாராம். "சீனியர்களை தவிர்த்துவிட்டு தன் னந்தனியாகவே முடிவுகள் எடுக்கும் அண்ணா மலைக்கு இது மோடி கொடுத்திருக்கும் ‘ஃபைனல் வார்னிங்' என்கிறது கமலாலய வட்டாரம்,

nkn191122
இதையும் படியுங்கள்
Subscribe