ன்றிய அரசால் அறிவிக்கப்படும் திட் டங்கள் அனைத்தும் எல்லா மாநிலங்களுக்கும் முழுமையாக சென்றடை கிறதா என்று ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்து, ஆய்வு செய்ய அனுப்பி வைப்பார்கள். அதே போல் தான் ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சி சார்ந்த ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, மாநில அரசின் திட்டங்கள், முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி அரசிற்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். இந்த சிறப்புக் குழுக் களுக்கு அந்தந்த மாவட் டங்களில் கட்சி சார்ந்தவர்கள் நல்ல கவனிப்பை தந்தாலும், தங்களுடைய செயல்பாடு கள் குறித்தும், திட்டத் தினால் பயனடைந்தவர்கள் குறித்தும் தெளிவான அறிக்கை வழங்குவார்கள், அதேபோல் முன்கூட்டியே இடத்தை அதிகாரிகள் முடிவுசெய்து அந்த சிறப்புக் குழுக்களை அழைத்துச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குழுதான் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். 

Advertisment

கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் உரிமைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா என்பவரும், உறுப்பினர் களாக சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் பணிபுரியும் குழந்தை உரிமை ஆர்வலர் எம்.காசிமிர் ராஜ், குழந்தை மருத்துவர் மோனா மாடில்டா பாஸ்கர்; குழந் தைகள் நலக்குழுக்களில் முன்னர் பணியாற்றிய ஆர்.ஜெயசுதா மற்றும் வி.உஷாநந்தினி; எஸ்.சி./எஸ்.டி. மாவட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் வி.செல்வேந் திரன் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீகாவ்யா நாகராஜன் ஆகிய ஆறு புதிய உறுப் பினர்களும் ஆணையத்தில் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Advertisment

இவர்களில் ஒரு உறுப்பினர் மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பணிகளை செய்வதில்லை என்றும், அரசு அதிகாரிகளை அவருடைய வீட்டு வேலைக்காரர்களைப் போல நடத்துவதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத்துறைகள் மூலம் பல்வேறு புகார்கள் இவர்மீது கொடுக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்ற மனக்குமுறலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆணைய உறுப்பினர் செல்வேந் திரனுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி என்றாலும், இந்த ஆணைய உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பித்து, நாகை எம்.பி.யின் சிபாரிசில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய சொந்த பிரச்சனைகளுக்கு ஆணையத்தின் அதிகாரத்தினை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்துவருவதாகத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கூட திருச்சியிலுள்ள மிகப்பிரபலமான ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்று, தவறான ஒரு தகவலை வைத்துக்கொண்டு, தன்னுடைய குழந்தைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடவில்லை என்று கூறி அந்த மருத் துவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதற்காக திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரையும் அலைக்கழித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டது. சமீபத்தில் கூட திருச்சி மாவட்டத்தில் ஆணை யத்தின் உறுப்பினர்களான செல்வேந்திரன் உள்ளிட்ட இருவர் ஆய்வு செய்துள்ளனர். 

Advertisment

உறுப்பினர் செல்வேந்திரனின் குழந்தைகள் லால்குடியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவரும் நிலையில், தன்னுடைய பவரை காட்ட வேண்டுமென்று குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்று, 1 மணி நேரம் பள்ளி வளாகத்தில் சுற்றிப்பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அதிலும் ஆய்வு செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு அனுப்பப்பட்ட சுழல் கொண்டை வைத்த காரில் தன்னுடைய குழந்தை களை காலையில் பள்ளிக்கு அனுப்பி வைத்த தாக பள்ளி வளாகத்தில் இருந்தவர்கள் கூறு கின்றனர். திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக் கான பள்ளிகள் இயங்கிவரும் நிலையில், தன்னு டைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஏன் விசாரணை செய்யச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆய்வின்போதும், குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என அனை வரின் நேரத்தையும் வீணடித்துள்ளார். ஏற் கெனவே பணிச்சுமைகள் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதுபோன்ற சொந்தக்காரணங் களுக்காக ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், அலுவலர்கள் எனப் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆணையத்திற்கு என்று ஒருசில கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக, தன்னுடைய சுய விளம்பரத்திற்காக ஆணையத்தின் பிரதான நோக்கத்திற்கு களங்கம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் அவசியம் தேவை என்கிறார்கள்.

இது தொடர்பாக அவரை செல்போன் மூலம் அழைத்து விளக்கம் கேட்ட நிலையில், தன்னை திருச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்ய விடாமல் திட்டமிட்டு சிலர் இதுபோன்ற தவறான தகவல்களை பதிவு செய்வதாகவும், இதுகுறித்து ஆணையத்தில் புகாரளித்து உரிய விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், தான் எந்த மருத்துவமனைக்கும் விசாரணைக்கு செல்லவில்லை எனவும், பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றது ஒரு தற்செயலான விசாரணைக்காக மட்டுமே என்றும் கூறினார். சிறப்புக்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்கவும் ஓர் குழு அமைக்கணும் போல!