(4) நடிகை அழுதால் போதை ஏறும்!

ன்னதான் எச்சரிக்கையுடன் ஆண்கள் இருந்தாலும், பெண்களின் பார்வையும், பேச்சும் ஈர்த்துவிடும். இந்த நம்பிக்கையில்தான், சூதாட்ட ரீதியில் நடக்கின்ற நோட்டு மாற்றும் மோசடியில், பெண் தரகர்களை இறக்கிவிட்டிருக்கின்றனர். அத்தனை பெண் தரகர்களின் பின்னணியிலும் நிச்சயம் ஆண் தரகர்கள் இருப்பார்கள். ‘இவர் பழைய நோட்டுகள் நிறைய வைத்திருக்கிறார்; அவர் புது நோட்டுகளை மாற்றி ஐந்து மடங்கு பழைய நோட்டுகள் பெறும் ஆவலில் இருக்கிறார்’ என, சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் நம்பரை, பெண் தரகர்களிடம் கொடுப்பது ஆண் தரகர்களே! தியாகராய நகர் மகாலட்சுமியிலிருந்து லிஸிவரை பெண் தரகர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

Advertisment

vinothஒருவரிடமிருந்து இன்னொருவர் என பணம் கைமாறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் பலமடங்கு பெருகும் என்கிற ரீதியில், மூளைச்சலவை செய்வார்கள். தேவைப்பட்டால், அந்த ஆணின் பலவீனத்தை அறிந்து, வளைந்துகொடுத்து, சென்னை -சொரன்டோ கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து வருவார்கள். அதன்பிறகு, ஸ்ரீனிவாசனின் பார்ட்னர்கள் அவர்களிடம் டீல் பேசுவார்கள்.

மும்பையைச் சேர்ந்த ஹைடெக் பெண் தரகரான ஆலியாபட் யாரையும் எளிதில் வசீகரிக்கக் கூடியவர். கணவர் என்ற பெயரில் ஒருவரோடு ரெசிடென்ஸி டவர்ஸ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவார். அவர் சென்னை வந்திருக்கும் தகவல் உரியவர்களிடம் போய்ச் சேர்ந்துவிடும். வலையில் மாட்டிக்கொள்வதற்கு ஒவ்வொருவராக வருவார்கள். இந்த ஆலியாபட்டின் நட்புக்காக, சொரன்டோ கெஸ்ட் ஹவுஸில் ரிட்டயர்ட் எஸ்.ஐ. உமாபதியும், நந்தகோபாலும் முட்டிக்கொண்டு, காமெடி பண்ணுவதெல்லாம் வாடிக்கையாக நடப்பதுதான்.

அண்ணா நகர் -சொரன்டோ கெஸ்ட் ஹவுஸில் கரன்ஸி மாற்றுவதற்கு அறைகள் தந்ததாலேயே, மேனேஜர் வினோத்தால் ஸ்ரீனிவாசனின் பார்ட்னர் ஆக முடிந்தது. அந்த ஏரியா லிமிட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்காக நிரந்தரமாக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், சபல சிந்தனை எழும்போது, இந்தக் கரன்ஸி பார்ட்டிகள் செல்லும் இடங்கள் வேறாகவே உள்ளன.

Advertisment

அந்தமாதிரி சமாச்சாரம் என்றாலே, ஹைடெக் தரகர்களில் ஒருவனான விக்னேஷ்தான் பளிச்சென்று தெரிவான். இரண்டாவது இடத்தில் இருந்துகொண்டு, சொத்து வழக்கில் சிக்கியிருக்கும் மூன்றெழுத்து இனிஷியல்காரர் மகனுக்கு இந்த விக்னேஷோடு நெருக்கம் அதிகம். விக்னேஷ் ஹவாலா ஏஜெண்டும்கூட. ஊழலில் சம்பாதிக்கின்ற பணத்தை, அவர்மூலம் ஹவாலா ரூட்டில் அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செய்திருக்கும் முதலீடுகளில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார் அந்த மகன்.

எதேச்சையாக டி.வி.யில் ஒரு புதுமுகத்தைப் பார்த்ததும் பிடித்துவிட்டால், விக்னேஷை அழைத்து, விருப்பத்தைச் சொல்வார். அடுத்த நட்சத்திர ஓட்டல் சந்திப்பில், அறையில் புதுமுகம் காத்திருப்பார். ட்ரிங்ஸ் பார்ட்டியில் விக்னேஷும் உடன் இருப்பார். புதுமுகத்தைக் கண்ணியத்தோடு நடத்துவார்கள். ஒருகட்டத்தில் விக்னேஷ் வெளியேறிவிடுவார். மகனின் ரசனையே தனி. போதை ஏறிக்கொண்டே இருப்பதற்காக, நடிகையை டிசைன் டிசைனாக சிரிக்கச் சொல்வார்; அழுது நடிக்கச் சொல்வார். சீரியல் வசனத்தை உணர்ச்சிகரமாக பேசச் சொல்லி, கை தட்டுவார். நான்கு வார்த்தை பேசினாலும், ஒருநாள் நடிப்புக்கு என்ன ரேட்டோ, அதைவிட பத்து மடங்கு தருவார். பேசியதைக் காட்டிலும் சிறப்பாக கவனித்துவிடுவார்.

money

Advertisment

இன்னொருநாள் சக தரகர்களுக்கு பார்ட்டி கொடுக்கும்போது "என்னோட ரேஞ்சே வேற...'’என்று நட்சத்திர ஓட்டலில் அன்று நடந்ததையெல்லாம் பெருமையாக உளறிக்கொட்டுவார் விக்னேஷ். அப்போது, போதையோடு போதையாக விக்னேஷிடமிருந்து, அத்தனை ரகசியங்களையும் கறந்துவிடுவார்கள் தரகர்கள்.

அவர் ஒரு மாஜி எம்.எல்.ஏ. இப்போது இருப்பது ஆளும்கட்சியில். தொடரைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்டார். "இந்தப் பழைய நோட்டு சமாச்சாரத்தில், சம்பந்தமே இல்லாமல், என்னை மாட்டிவிட்டார் ஒரு பில்டர். இந்த மோசடிக்கு காவல்துறையும் துணைபோனது'’என்று குமுறினார்.

அவர் என்னவெல்லாம் இழந்திருக்கிறார் தெரியுமா...?

(சதுரங்க வேட்டை தொடரும்)