கலக்கிய காக்கி உடை நடிகை!

நோட்டு மாற்றும் விஷயத்தில் நடப்பதெல்லாம் மோசடிதான் என்று பார்ட்டிகளிடம் தங்களை மாட்டிவிட்ட தரகர் விக்ரமை, சொரன்டோ கெஸ்ட் ஹவுஸ் அறையில் அடைத்துவைத்து, ரூ.10 லட்சம் பணம் கேட்டு அடித்து உதைத்த ஸ்ரீனிவாசன் டீம், “"சரி... உன் வீட்டுக்கு போன் போட்டுப் பேசு... பணத்தைக் கொண்டு வரச்சொல்'’ என்று மிரட்ட, தன் அம்மாவைத் தொடர்புகொண்டார் விக்ரம்.

rupeesஸ்பீக்கர் போனில் விக்ரமின் அம்மா அலறினார். ""என்னடா உமாகாந்த், எங்கேடா இருக்க? அம்மாகிட்ட நீ பேசி ஆறு மாசமாச்சு. அப்பா உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடக்காங்க. இந்த நேரத்துல, கடன்காரங்க வேற அடிக்கடி வீட்டுக்கு வந்து ரொம்ப கேவலமா பேசுறாங்க...''’என்று அழ, லைனை கட்செய்யச் சொல்லிவிட்டு, ""ஏன்டா உன் பேரு உமாகாந்தா? விக்ரம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச. உன் குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது போல. சரி இந்தப் பணத்தை வச்சிக்கோ. இனியாச்சும், எங்கள பத்தி நல்லவிதமா பேசி, பார்ட்டிகளைக் கூட்டிட்டு வா''’என்று ஆதரவாகப் பேசி ரூ.1ணீ லட்சத்தை, உமாகாந்தின் கையில் கொடுத்தார்கள் ஸ்ரீனிவாசன் ஆட்கள்.

உமாகாந்த் விஷயத்தில், காரண காரியத்துக்காக திடீர் கருணை காட்டிய ஸ்ரீனிவாசன் கும்பல், கடந்த ஜூன் 28-ஆம் தேதி, தரகர் அஜித்திடம் மிகமோசமாக நடந்துகொண்டது. செமத்தியாக கவனித்துவிட்டு, ""உனக்கு விதித்த அபராதத் தொகை ரூ.10 லட்சத்தை யாராவது இங்கு வந்து கொடுத்தால் தான் உன்னை விடுவோம்''’’ என்று கடுமை காட்ட, நண்பன் இளவரசனைத் தொடர்புகொண்டு, “""பணம் ரெடி பண்ணிக் கொண்டு வாடா. நீ வரலைன்னா, இவங்க என்னை சாகடிச்சிருவாங்க''’என்று கதறினார் அஜித். நண்பனைக் காப்பாற்று வதற்காக, தியாகராய நகர் ஏரியா அ.தி.மு.க. கவுன்சிலர் சாந்தியின் கணவர் பாஸ்கரிடம், ""நம்மாளு ஒருத்தன் ஒரு கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டான்''’என்று இளவரசன் முறையிட... சென்னை, அண்ணா நகர் கே-4 காவல்நிலையத்துக்கு தகவல் பறந்தது.

Advertisment

ஆளும்கட்சி கவுன்சிலர் தரும் அழுத்தம் என்பதால், உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது காவல்துறை. அஜித்தை மீட்ட கையோடு ஸ்ரீனிவாசன், நந்தகோபால், முருகா னந்தம் போன்றவர்களை கே-4 காவல் நிலையத் துக்கு அழைத்து வந்தனர். 7 மணி நேரம் பெரிய அளவில் பேச்சு வார்த்தை நடத்திய இன்ஸ் பெக்டர் சரவணன், "செல்லாத நோட்டு மாற்றிய விவகாரத்தில் ஆள் கடத்தியதை மறைத்து, "ரியல் எஸ்டேட் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை' என சிம்பிளாக எழுதி வாங்கி, “""வேற எந்த போலீஸ் லிமிட்லயும் என்னமும் பண்ணிக்கங்க. கே-4 லிமிட்ல இந்த மாதிரி இனி எதுவும் நடக்கக்கூடாது''’’ என்று அன்பாக கேட்டுக் கொண்டார். அஜித் மீதான தாக்குதலுக்கு ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், ஸ்ரீனிவாசன் டீமிடம் காவல்துறை பம்மியதைப் பார்த்து கொதித்தார் பாஸ்கர். காவல்நிலைய வாசலிலேயே “""சட்டம் உங்கள ஒண்ணும் பண்ணலைல்ல... நான் விடமாட்டேன், ஏதாச்சும் பண்ணுவேன்''’என்று கூச்சலிட்டார்.

"பாஸ்கரும் புது நோட்டுகளை ஏற்பாடு செய்யும் ஒரு மீடியேட்டர்தான். தொழில் ரீதியான பந்தம்தான், அஜித்துக்கு ஆதரவாக அவரைக் குரல்கொடுக்க வைத்தது'’எனச் சொல்லும் தரகர் ஒருவர், ""ஒயிட் ஃபண்டர் (புது நோட்டு), பி ஃபண்டர் (செல்லாத நோட்டு) ஆக செயல் படுபவர்களின் பின்னணி பரிதாபகரமானதாக இருக்கும். குடும்ப பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள், பெரும் கடனாளியாக இருப்பவர்கள், கானல்நீர் போன்ற இத்தொழிலுக்கு, பேராசையோடு வருகின்றனர். இவர்கள், இரவில் தூங்குவதற்கு முன்பாக கோடீஸ்வரர் கனவில் மிதப்பார்கள். விடிந்ததும், கையில் பணம் இல்லாத இன்றைய நாளை எப்படி கடத்துவது என்ற கவலையில் ஆழ்ந்துவிடுவர்.

nelaniஉதவி கமிஷனர் உடையில் சின்னத்திரை நடிகை நிலானி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து போலீஸுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது வைரலானதால் கைதானார். அவரும் ஒரு மீடியேட்டர்தான். “"நடிப்பென்றாலும் கூட, போலீஸ் யூனிபார்மை அணி வதற்கு ரொம்ப கூசுது'’என்று பகிரங்கமாக ஸ்டேட்மெண்ட் விட்ட நிலானி, பழைய நோட்டுக்கு புது நோட்டு ஏற்பாடு செய்பவராக, மாற்றுத்தொழிலில் எந்தக்கூச்சமும் இல்லாமல் சந்தையில் வலம்வந்தார். இவரை இயக்கியவர்கள் ஏழுமலையும் காளிதாஸும். வடபழனி, ஜிஞ்சர் ஹோட்டலில் இவர்களுக்கென்று பெர்மனென்ட் அறை உண்டு. அந்த அறையில் என்னென்ன நடக்கிறது என்பதைக் கண்ணால் கண்டதில்லை. நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்காத ஒரு விஷயத்தைப் பேசுவது முறையல்ல’ என்றார் இயல்பாக.

Advertisment

கோடிகளில் கருப்புப் பணம் புழங்கும் இடங்களில் சாமியார்கள் ‘என்ட்ரி’ ஆவது தானாக நடந்து விடும். மதுரையிலோ, அழைப்பின் பேரில் வந்தார் ஒரு சாமியார். ஆசி வழங்க வந்தவரை, அடி பின்னி எடுத்தார்கள். சாமியார் என்ன காரியம் செய்தார் தெரியுமா?

-சி.என்.ராமகிருஷ்ணன்

(சதுரங்கவேட்டை தொடரும்)