செல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்! (5)

guesthouse

(5) கல்லா கட்டும் காக்கிகள்!

""செல்லாத நோட்டு தொடரைப் படித்துவருகிறேன்'...’ என்று நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அந்த முன்னாள் எம்.எல்.ஏ. ""பழைய நோட்டு விவகாரத்தால் ரூ.35 லட்சத்தை இழந்து நிற்கிறேன். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருகிறார்கள். சொந்த ஊருக்குப் போக முடியவில்லை. சென்னை மாநகர ஆணையரிடம் புகார் கொடுத்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை''’என்றார் குமுறலுடன்.

guesthouseதற்போது ஆளும்கட்சியில் இருக்கும் அவர், முன்னாள் எம்.எல்.ஏ.தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். "என்பெயரோ, போட்டோவோ வேண்டாம்... ப்ளீஸ்'’என்று கேட்டுக்கொண்ட அவர், அந்தப் புகார் குறித்து விரிவாகப் பேசினார்.

""தமிழகம் முழுவதும் உள்ள இந்தப் பெரிய நெட்வொர்க்கில், சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு கோடி ரூபாய் செல்லாத பழைய நோட்டுக்கு ரூ.6 லட்சம் புது நோட்டு தருவதெல்லாம், சென்னையில் சர்வசாதாரணமாக நடக்கிறது. சம்பந்தப்பட்டவருக்கு, 50 சதவீத பணம் கிடைத்தாலும், மீ

(5) கல்லா கட்டும் காக்கிகள்!

""செல்லாத நோட்டு தொடரைப் படித்துவருகிறேன்'...’ என்று நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அந்த முன்னாள் எம்.எல்.ஏ. ""பழைய நோட்டு விவகாரத்தால் ரூ.35 லட்சத்தை இழந்து நிற்கிறேன். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருகிறார்கள். சொந்த ஊருக்குப் போக முடியவில்லை. சென்னை மாநகர ஆணையரிடம் புகார் கொடுத்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை''’என்றார் குமுறலுடன்.

guesthouseதற்போது ஆளும்கட்சியில் இருக்கும் அவர், முன்னாள் எம்.எல்.ஏ.தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். "என்பெயரோ, போட்டோவோ வேண்டாம்... ப்ளீஸ்'’என்று கேட்டுக்கொண்ட அவர், அந்தப் புகார் குறித்து விரிவாகப் பேசினார்.

""தமிழகம் முழுவதும் உள்ள இந்தப் பெரிய நெட்வொர்க்கில், சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு கோடி ரூபாய் செல்லாத பழைய நோட்டுக்கு ரூ.6 லட்சம் புது நோட்டு தருவதெல்லாம், சென்னையில் சர்வசாதாரணமாக நடக்கிறது. சம்பந்தப்பட்டவருக்கு, 50 சதவீத பணம் கிடைத்தாலும், மீதி ரூ.44 லட்சம் லாபம்தானே?

எம்.எல்.ஏ.வாக இருந்த நான், ஒப்பந்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்தி வந்தேன். அந்தவகையில், சென்னை-தியாகராய நகரில் இயங்கிவரும் ஜி.வி.ஆர். டிரேட் கன்சார்டியம் இன்ப்ரா லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சண்முகம் மற்றும் அதன் இயக்குநர்களிடம் ரூ.35 லட்சத்தை வைப்புத் தொகையாகக் கொடுத்தேன். கட்டுமானத் தொழில் செய்துவரும் ஜி.வி.ஆர். குழுமம் ஆண்டுக்கு ரூ.2000 கோடி வரவு-செலவு செய்கிறது. பேசியபடி அந்த நிறுவனம் எனக்கு ஒர்க் ஆர்டர் தரவில்லை. கொடுத்த பணத்தையும் தர மறுத்தனர். நண்பர்களை அழைத்துச்சென்று நான் பணத்தைக் கேட்டபோது, பாண்டி பஜார் காவல்நிலையத்தில் என் மீது பொய்ப்புகார் அளித்தனர். மிதுன் தாமஸ் என்பவர் தந்த அந்தப் புகாரில், அந்த நிறுவனம் என்னிடம் ரூ.25 கோடி கடன் கேட்டதாகவும், நான் செல்லாத பழைய நோட்டுகளாக ரூ.25 கோடியை எடுத்துச்சென்று கொடுத்ததாகவும், அதைக் கண்டு அவர்கள் பதறிப்போனதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்வை நான் வீடியோ எடுத்து, அதைக்காட்டி மிரட்டியதாகவும், நடக்காத ஒன்றைச் சொல்லியிருந்தார்கள்.

பொய்ப்புகார் என்பதால், என்னுடைய விளக்கத்தை ஏற்று, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், நான் கைதானதாக தொலைக்காட்சியிலும், நாளிதழ்களிலும் செய்தி வந்தன. இதன் பின்னணியில், ஒரு ஏ.சி. இருந்தார். ராக்கெட் ராஜா கூட்டாளிகள் கைது வழக்கில், கைது செய்யாமல் இருப்பதற்கு ஒருவரிடம் பேரம் பேசினார் அல்லவா? அதே ஏ.சி.தான். இன்றுவரையிலும், ஜி.வி.ஆர். நிறுவன எம்.டி. சண்முகம் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சண்முகம் ஒரு சாம்பிள்தான்'' என்றார்.

மாஜி எம்.எல்.ஏ. முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சென்னை தரகர் ஒருவர், “""அனுபவத்தில் அறிந்த உண்மையைச் சொல்கிறார் மாஜி எம்.எல்.ஏ. அப்போதெல்லாம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு மிகவும் வேண்டியவரான, திருச்சியைச் சேர்ந்த புரோக்கர் தாஜுதீனோடு கைகோ(ர்)த்துக் கொண்டு திரிந்தார். வடபழனி "காஃபி டே'வில் அவருடைய சந்திப்புகள் நடக்கும். இந்தத் தொழிலில் மீடியேட்டராக இருந்து நஷ்டப்பட்டவுடன், தனக்கு இது சரிவராது என்று ஒதுங்கிக்கொண்டார். நோட்டு மாற்றும் விவகாரத்தில்தான், ஜி.வி.ஆர். குழுமத்தினரும் அந்த மாஜி எம்.எல்.ஏவும் மாறி மாறி புகார் தந்திருக்கிறார்கள் என்பது காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் அதிகாரிகளும் இந்த மோசடிக்குள் மூக்கை நுழைத்து, பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். வழக்கையும் வேறுவிதமாக ஜோடித்து, கிடப்பில் போட்டுவிட்டார்கள்''’என்றார்.

guesthouseமாஜி எம்.எல்.ஏ.வோ, “""நான் பிசினஸ் பண்ணுறேன். உங்ககிட்ட தரகர் யாராச்சும் சும்மா சொல்லிருப்பாங்க. நோட்டு மாற்றும் கும்பலுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை''’என்று மறுத்தார்.

சென்னை -சொரன்டோ கெஸ்ட் ஹவுஸில், இருட்டுஅறையில் முரட்டுக்குத்து சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறும். ரூ.6 லட்சம் செலுத்தி, ஒயிட் (புது நோட்டு) புரோக்கர் ஆனவன் விக்ரம். கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பணமுதலைகளிடமிருந்து புது நோட்டுகளை வாங்கி, பல மடங்கு பழைய நோட்டுகளைப் பெற்றுத்தருவதுதான் இவனுடைய வேலை. ஒருகட்டத்தில், இது முழுக்க முழுக்க சீட்டிங் என்பது விக்ரமுக்குத் தெரிந்துபோனது. ஸ்ரீனிவாசன் கும்பலின் வலையில் சிக்கிய பார்ட்டிகள் இருவரிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறான். அதனால், பார்ட்டிகள் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். ‘மோசடியைத் தடுத்துவிட்டானே’ என்ற ஆத்திரத்தோடு, சொரன்டோ கெஸ்ட் ஹவுஸ் அறை எண் 213-க்கு, விக்ரமை அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அந்தப் பார்ட்டிகளுடனான டீலில் "ரூ.10 லட்சம் எங்களுக்கு கிடைத்திருக்கும். காரியத்தைக் கெடுத்துவிட்டாய். அதனால், அந்தப் பத்து லட்ச ரூபாயை நீதான் தரவேண்டும்'’என்று ஒருநாள் முழுவதும் இருட்டு அறையில் அடைத்துவைத்து அடித்திருக்கின்றனர்.

"வெளிநபர்கள் யாரிடம் வேண்டுமானாலும் போனில் பேசி பணத்தைக் கொண்டு வரச்சொல். பணம் கைக்கு வந்தால்தான் உன்னை விடுவோம்'’என்று தாக்குதலைத் தொடர்ந்தனர். ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது வேறாகிவிட்டது.

-சி.என்.ராமகிருஷ்ணன்

(சதுரங்க வேட்டை தொடரும்)

nkn07-08-2018
இதையும் படியுங்கள்
Subscribe