டந்த 10 வருடங்களுக்கு முன் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் போதைக்கு இங்க் ரிமூவர் (பெலிகேன்), பிளாஸ்டிக் பைப் ஒட்டும் சொல்யூசன், பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொல்யூசன் ஆகியவற்றை கைக்குட்டையில் தடவி முகர்ந்துவந்தனர். இதுகுறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தும் அதனைக் கண்காணித்து மாணவர்களுக்கு அதன் ஆபத்து குறித்து எச்சரித்தனர்.

Advertisment

ss

தற்போது ஹைடெக்காக மாணவர்கள் வலிநிவாரணி மாத்திரையை குளுக்கோஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டி நரம்பு வழியாகச் செலுத்தி போதை அனுபவிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டனர்.

Advertisment

கடலூரில் கடந்த 13-ஆம் தேதி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமுக்கு, திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு கண்காணித்து தகவல் தர உத்தரவிட்டார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஓரிடத்தில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த வாலிபர்களைக் கண்டு போலீசார் சென்றபோது அனைவரும் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதில் இரு கல்லூரி மாணவர்களைப் பிடித்து விசாரித்த போது, நண்பனுக்காக வெயிட் பண்றோம் எனக் கூறியுள்ளனர். அவர்கள் பையில் வைத்திருந்த குளுக்கோஸ் பாட்டில், காலியான மாத்திரை அட்டைகள், சிரிஞ்ச் உள்ளிட்டவை குறித்து துருவித் துருவி விசாரித்தபோது, வலி மாத்திரையை போதை மருந்துகளாக மாற்றி மாணவர்கள் ஊசி மூலம் பயன்படுத்துவது தெரிந்ததும் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இதுகுறித்து கைதுசெய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் விசாரணையில், "குளுக்கோஸ் அல் லது டிஸ்டில்டு வாட்டரில் வலி மாத்திரையைக் கரைத்து வடிகட்டி, சிரிஞ்ச் வழியாக நரம்பில் செலுத்திக் கொண்டால் குறைந்தது 2 நாட்கள் போதை இருக்கும்' என கூறியுள்ளார். பிடிபட்ட 5 மாணவர்களும் விசாரணையில் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வலி நிவாரணி மாத்திரையை விற்பனை செய்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கவியரசன், கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் சுபாஷ், செம்மண்ட லம் சிவக்குமார் மகன் நிவாஸ், கூத்தப்பாக்கம் சத்தியமூர்த்தி மகன் சிவக்குமார் ஆகிய 4 பேரை யும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை செய்தனர். இவர்கள் வலி நிவாரணி மாத்திரை களை நேரடியாக வரவழைத்து மாணவர் களைக் குறிவைத்து விற்பனை செய்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

d

இந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 4 பேரையும் போலீசார் கைதுசெய் துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களிடம் இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து வாங்கிச்செல்வதாகத் தெரிவித்தனர். இது கடலூரில் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ளதாகவும், இதில் பல மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அடக்கம் எனவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. போலீசார் இதுகுறித்து விரிவாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபு, “"பிள்ளைகள் கல்லூரிக் காலம் தடம் மாறும் நேரமாக உள்ளது. எனவே பெற்றோர், பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்வதை மட்டும் பார்க்காமல், அவர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என கண்காணிக்கவேண்டும். குடும்பத்தில் இருவரும் வேலைக்குச் செல் பவர்கள், சிங்கிள் பேரண்ட் உள்ள இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதன் நெட்வொர்க் சென்னை உள்ளிட்ட சிறு மற்றும் பெரு நகரங்களுக்கும் செல்கிறது. மாணவிகளும் தொடர்பில் உள்ளார் களா? என ஆராய்ந்து வருகிறோம். இதனைத் தடுக்க அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது''’எனக் கூறினார்.

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருப்பதியோ, “"இதுபோன்ற மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் உட்கொண்டால் உடலில் பல்வேறு இன்னல்கள் வரும். இதனை தண்ணீரில் கலந்து நரம்பு வழியாகச் செலுத்துவதால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். தொடர்ந்து இந்த மருந்தை போட்டுக்கொண்டால் கிட்னி, கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இதைப் பயன்படுத்துபவர்கள் பிரச்சினையின்றி இருப்பதுபோல் தெரியும். உண்மையில் அவர்கள் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறார்கள். மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை கருதி இத்தகைய போதைப் பழக்கத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற பழக்கங் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "மனம்' என்ற அமைப்பை அரசு உருவாக்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. கடலூர் மாவட்ட அரசுக் கல்லூரியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்பும் நடைபெற்றுள்ளது. மீண்டும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த உள்ளோம்''’ எனக் கூறினார்.

மாணவர்களின் எதிர்காலம் அச்சத்தை ஏற்படுத்துகிறது!

-ஏ.காளிதாஸ்