பெரம்பலூர் அதிமுக மா.செவாக இருக்கும் ராமசந்திரன், குன்னம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவரது மா.செ. பதவியை மாற்றக்கோரி கையெழுத்து வேட்டை நடத்தி வந்த அதிருப்தி கோஷ்டி யினர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாற்றுக் கட்சிக்கு சென்று வந்தவர்களுக்கு பதவி கொடுப்பது, ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பது, கட்சி யினரிடையே பிரித்தாளும் வேலையைச் செய்வது என தான் வைத்ததுதான் சட்டம் என்ற போக்கில் மா.செ செயல்படுகிறார். கிட்னி ஆபரேசன் வேறு செய்து கொண்டுள் ளதால் இவரால் கட்சி பணியை செம்மையாக நடத்த முடியவில்லை. அதனால்தான், கட்சி வரலாறு காணாத அளவில் எம்.பி மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. எனவே, இவரை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து புதிய மாவட்ட செயலாளரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று லெட்டர் பேடில் டைப் செய்து அதன் கீழே மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்களிடம் கையெ ழுத்து பெற்று தலைமைக்கு அனுப்புவதற்காக, மாவட்ட அவைத்தலைவர் நெய்குப்பை துரை, அமைப்புசாரா ஓட்டு னர் அணி மாசெ முத்துசாமி, மீனவரணி முருகேசன், சாத்த னவாடி ஊராட்சிசெயலாளர் தங்கராசு ஆகியோர் கையெ ழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.
கடந்த 13ஆம் தேதி நெய் குப்பை துரை வீட்டில் ஆலோ சனையில் இருந்தபோது, மா.செ. மைத்துனர் கார்த்தி கேயன் தலைமையில் அரசு வழக்கறிஞர் பாலமுருகன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வர்கள் இரண்டு கார்களில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இரும்பு பைப், ராடு கொண்டு கடுமை யான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவைத்தலைவர் துரை ஓட்டுனர் முத்துசாமி, தங்கராசு ஆகியோருக்கு மண்டை உடைப்பு, கை முறிவு, பலத்தகாயம். இதில், மீனவரணி முருகேசன் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிஉள்ளார்.
அடிபட்டவர்கள் ரத்தகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்கு கொண்டுபோய் சேர்க்கப்பட்டனர். இது சம்பந்தமாக வி.களத்தூர் போலீசார் மா.செ. மைத்துனர் கார்த்திகேயன், அரசு வக்கீல் பால முருகன், முத்து என்கிற முத்துதுரை உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளானவர் களிடம் பேசியபோது, ""எங்கள் மூலம் கையெ ழுத்து பெறப்பட்ட கடிதம் கட்சித் தலைமைக்கு சென்று அதன் அடிப்படை யில் மாவட்ட செயலாளர் பதவி மாற்றப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரண மாகவே மாவட்ட செயலா ளர் மைத்துனர் கார்த்தி கேயன் தலைமையில் வந்த கும்பல் எங்கள்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர்'' என்கிறார்கள்.
இந்த உட்கட்சி பூசல் குறித்து மாவட்டத்தில் உள்ள ர.ர.க்களிடம் விசா ரித்தபோது, ""மா.செ.வுக்கு சமீபகாலமாக அவரது உடல்நிலை சரி யில்லாமல் போனது உண்மைதான். இதனால் கட்சிப்பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த எம்.பி. தேர்தலில் அதிமுக தோற்றது. உள்ளாட்சி தேர்தலிலும் சரிவை சந்தித்தது. மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றில் கூட சேர்மன் பதவியை பிடிக்கமுடியவில்லை. அதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளை கோட்டை விட்டதால், திமுக மாவட்ட சேர்மன் பதவியை பிடித்துள்ளது. செந்துறை ஒன்றியத் தில் மொத்தம் 19 கவுன்சிலர் பதவிகளில் 11 இடங்களை கூட்டணிகட்சிகள் ஆதரவோடு வெற்றிபெற்று சேர்மன் பதவிக்கு ஒ.செ. சுரேஷ் மனைவி சுதாவுக்கு கட்சிதலைமை சேர்மன் பதவியை கொடுக்க உத்தரவிட்டும் அதை செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. மா.செவின் அலட்சியமே இதற்கு காரணம்.
உள்ளாட்சி தேர்தலில் செந்துறை ஒன்றியத்தில் அதிக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதும், இதற்கு காரணமான ஒ.செ.வை பதவியைவிட்டு நீக்கிய மா.செ., தினகரன் கட்சிக்கு சென்றுவந்த செல்வக்குமார் என்ப வருக்கு பெரம்பலூர் ஒ.செ பதவியை வழங்கியுள்ளார். இதேபோன்று தினகரன் கட்சிக்கு சென்றுவந்த செந்தில்குமார் என்பவ ருக்கு மாவட்ட ஜெ. பேரவை வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க. விதிமுறைகளின்படி மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை கட்சியில் பொறுப்புகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். இப்படி தனக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்தி யுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள், கிளைசெயலாளர்கள் சிபாரிசுசெய்தவர்களுக்கு வேட்பாளர் சீட்டு தராமல், அவர் இஷ்டபடி சீட்டு கொடுத்ததால் தான் பெரும் தோல்வி ஏற்ப்பட்டது. இப்படிப்பட்ட காரணங்களாலும் அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டும் அவரிடம் இருந்து மா.செ பதவியை மாற்றக்கோரி கையெழுத்து பெற்றவர்களை தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்க தக்கது'' என்கிறார்கள்.
உட்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது பற்றி மா.செ ராமசந்திரனிடமே நாம் கேட்டபோது, ""இது சும்மா சாதாரண பிரச்சனைதான். எனக்கு எதிராக கையெழுத்து வாங்கியவர்கள் அதை வாட்சப் மூலம் என் மைத்துனர் கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ளனர். அதனால் அவர் கோபப்பட்டு அவர்களிடம் போய் கேட்டுள்ளார். மற்றபடி ஒன்றும் பெரிதாக இல்லை. கட்சிதலைமையிடம் புகார் கொடுத்தால் நான் கட்சிதலைமைக்கு விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன். எல்லாம் சரியாகிவிடும்'' என்கிறார்.
- எஸ்.பி.சேகர்