திருச்செங்கோடு அருகே கல் குவாரி மற்றும் கிரஷர் ஆலைகளால் நிலத்தடி நீரும், காற்றும் கெட்டுப் பொனதால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாடு பாடுகின்றனர். போதாக் குறைக்கு வெடிவைத்து உடைக்கப் படும் பாறைகள் ஊருக்குள் விழுவதால், அந்தப் பகுதியில் உள்ள கோக்கலை, குறுக்கபுரம், நெய்க்காரம்பாளையம், துண்டுக் காட்டூர், தொண்டிப்பட்டி, குஞ்சாம்பாளையம் ஆகிய 6 கிராமங்களும் மரண பீதியில் ஆழ்ந்திருக்கின்றன.
கோக்கலை, நெய்க்காரம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளான ராமசாமி, பொன்னுசாமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கந்தசாமி, பழனிவேல், செல்லமுத்து ஆகியோர் நம்மிடம் பேசும்போது...
"கோக்கலை ஊராட்சியில் செந்தில்ராஜா, பி.ஏ.ராஜா, எஸ்.பி.எஸ். சிவக்குமார், பி.ஆர்.எம் ஆகியோருக்குச் சொந்தமான 5 குவாரிகளும் எம்-சாண்ட் கிரஷர் ஆலைகளும் இயங்கி வருது. இதுகள்ல பாறைகளைத் தகர்க்க, தடை செய்யப்பட்ட டெட்டனேட்டர் வெடிகளைப் பயன்படுத்துவதால் அவற்றில் இருந்து தெறித்து வரும் கற்கள் வீடுகள் மீதும் விழுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு ராமசாமி என்பவர் நிலத்தில் கற்கள் விழுந்தபோது, மயிரிழையில் அவர் உயிர் தப்பினார
திருச்செங்கோடு அருகே கல் குவாரி மற்றும் கிரஷர் ஆலைகளால் நிலத்தடி நீரும், காற்றும் கெட்டுப் பொனதால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாடு பாடுகின்றனர். போதாக் குறைக்கு வெடிவைத்து உடைக்கப் படும் பாறைகள் ஊருக்குள் விழுவதால், அந்தப் பகுதியில் உள்ள கோக்கலை, குறுக்கபுரம், நெய்க்காரம்பாளையம், துண்டுக் காட்டூர், தொண்டிப்பட்டி, குஞ்சாம்பாளையம் ஆகிய 6 கிராமங்களும் மரண பீதியில் ஆழ்ந்திருக்கின்றன.
கோக்கலை, நெய்க்காரம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளான ராமசாமி, பொன்னுசாமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கந்தசாமி, பழனிவேல், செல்லமுத்து ஆகியோர் நம்மிடம் பேசும்போது...
"கோக்கலை ஊராட்சியில் செந்தில்ராஜா, பி.ஏ.ராஜா, எஸ்.பி.எஸ். சிவக்குமார், பி.ஆர்.எம் ஆகியோருக்குச் சொந்தமான 5 குவாரிகளும் எம்-சாண்ட் கிரஷர் ஆலைகளும் இயங்கி வருது. இதுகள்ல பாறைகளைத் தகர்க்க, தடை செய்யப்பட்ட டெட்டனேட்டர் வெடிகளைப் பயன்படுத்துவதால் அவற்றில் இருந்து தெறித்து வரும் கற்கள் வீடுகள் மீதும் விழுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு ராமசாமி என்பவர் நிலத்தில் கற்கள் விழுந்தபோது, மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல், குவாரிகள் வெட்டப்பட்ட தால் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை வறண்டு போகின் றன. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர்ப் பற்றாக்குறை யும் ஏற்பட்டுள்ளது. காற்று மாசடைந்ததால் பலருக்கு சுவாசக் கோளாறுகளும் உள்ளன.
அவர்கள் சட்டவிரோதமாக டெட்டனேட்டர் வெடிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று அதி காரிகளிடம் புகார் அளித்தால், நாணல் வெடிகளைத்தான் பயன்படுத்துகிறார் கள் என்று, குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளே பொய் பேசுகிறார்கள். இங்குள்ள குவாரிகளின் உரிமைக்காலம் முடிந்துவிட்டது. எனவே மீண்டும் இவற் றின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கூடாது'' என்றவர்கள்...
"கடந்த இரண்டு ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், முதல்வர் தனிப்பிரிவு என அனைத்திற்கும் அனுப்பி விட்டோம். ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனால் கோக்கலை உள்ளிட்ட 6 கிராம மக்களும் குடும்பத்தோடு ஊரை விட்டே, எங்கள் கால்நடைகளுடன் வெளியேற முடிவு செய்துவிட்டோம்,'' என்கிறார்கள் பரிதாபமாக.
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், "குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகளும், 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் கிரஷர் ஆலைகளும் இயங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால் இங்கு குடியிருப்புகளில் இருந்து 156 மீட்டர் தொலைவுக்குள்ளேயே குவாரிகளும், எம்சாண்ட் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதெல்லாம் அப்பட்டமான விதிமீறல்.
பிப். 9ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. குவாரிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பட்டியலின மக்களில் ஒரு பகுதியினரை ஒன்று திரட்டிய குவாரி முதலாளிகள், அவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும், மது பானங்கள், சாப்பாட்டு டோக்கன் கள் போன்றவற்றைக் கொடுத்துத் தங்களுக்கு ஆதரவாகப் பேச வைத்தனர். அதேநேரம், பாதிக் கப்பட்ட விவசாயிகள் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையெல்லாம் அதிகாரவர்க்கம் கவனிக்குமா என்று தெரியவில்லை. குவாரி தரப்புக்கு ஆதரவாக மனு வாங்கிக் கொடுக் கின்றனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத பெருமாயி என்பவரை, குவாரி தரப்பைச் சேர்ந்த சிலர் வீட்டுக்கே சென்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பெருமாயி, மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்''’என்றார் காட்டமாக..
குவாரி வெடிகளால் ஏற்பட்ட அதிர்வால், வீட்டுச் சுவர்களில் விரிசல் விழுந்ததாக ஏரியா மக்கள் சொல்கின்றனர். குவாரியில் இருந்து 220 மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைவேல் என்பவருடைய வீட்டுச் சுவர்களும், 156 மீட்டர் தூரத்தில் உள்ள ராமசாமி என்பவரின் வீட்டுச் சுவர்களும் முற்றிலும் விரிசல் விட்டிருந்ததை நாம் நேரடி ஆய்வில் தெரிந்து கொண்டோம்.
இது தொடர் பாக நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் பூர்ண வேலிடம் நாம் கேட்ட போது, "எதுவாக இருந் தாலும் கலெக்ட ரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நான் பதில் சொல்ல முடியாது'' என அலட்சியமாகப் பேசினார். குவாரி உரிமையாளர்களின் 'அன்பான கவனிப்பு', அவர் பேச்சில் தெரிகிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
குவாரி உரிமையாளர்கள் எஸ்.பி.எஸ்.சிவகுமார், ராஜா ஆகியோரிடம் இது குறித்துக் கேட்டபோது, "கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குவாரிகளை இயக்கி வருகிறோம். அப்போதெல்லாம் பாதிக்காத சுற்றுச்சூழல், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதிக்கிறதா? உள்ளூரைச் சேர்ந்த நான்கு பேர் உள்நோக்கத்துடன் எங்களுக்கு எதிராகப் பொய்யான புகார்களைக் கிளப்பிவிடுகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டில் எங்கேயும் குவாரிகள் செயல்பட முடியாது. எம் சாண்ட் கிரஷர்களால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் மீதான புகார்களில் எந்த உண்மையும் இல்லை,'' என்கிறார்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண் ணன் ஆகியோரிடம் பேசியபோது, "குவாரிகளுக்கு உரிமம் புதுப்பித்தல் தொடர்பாக மக்களிடம் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். ஆதரவு, எதிர்ப்பு இரண்டு கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே பதிவு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன'' என்றனர். ஒரு சிலரின் வசதிக்காக மக்களின் நிம்மதியை மாவட்ட நிர்வாகம் பலி கொடுக்கலாமா?