இந்தியாவின் பிரபலமான 20 மருத்துவ ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் குறித்தும், உலக நாடுகளில் இந்த வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம், வைரஸ் உருமாற்றம், இந்தியாவில் அதனைத் தடுப்பது போன்றவை குறித்து ஆய்வுசெய்து ஒருங்கி ணைத்து சார்ஸ் -கோவிட் 19 நோய் ஆய்வு மற்றும் கொரோனா தடுப்புக்குழுவை உருவாக்கி யுள்ளனர்.
அந்தக் குழுவின் தலைவராக 2020 டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டவர் இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்ட் ஷாகீத் ஜமீல். உத்தரப்பிரதேசம் அலிகார் நகரைச் சேர்ந்த 63 வயதாகும் ஷாகீத், உலகின் பிரபலமான வைராலஜிஸ்ட்களில் ஒருவர். சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நோயியல் குறித்து பி.எச்டி. முடித்தவர். ஹரி யானா மாநிலத்திலுள்ள அசோகா பல்கலைக் கழகத்தில் பயோடெக் துறைத்தலைவராக உள்ளார். இவர் கடந்த மே 16-ஆம் தேதி குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, இந்திய ஒன்றிய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். இந்த விலகல் குறித்து காரணம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இதற்குக் காரணம் இந்தியாவை ஆளும் பிரதமர் மோடியும், ஆட்சி யாளர்களும்தான் என்கிற கருத்து எதி ரொலிக்கிறது.
மே 13-ஆம் தேதி அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் ஜமீல். அந்தக் கட்டு ரையில் கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட் டுள்ளது. தற்போது அரசு தினசரி பாதிப்புகள் குறித்து வெளியிடும் கணக்குகளில் வித்தியாசம் உள்ளது. எங்களது ஆய்வுப்படி தினமும் சுமார் 4 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பாதிப்பு வரும் ஜூலை மாதம்வரை தொடரும். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்தான் இரண்டாவது அலை இந்தியாவில் ஓயும். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கள் சுமார் 30 கோடி பேராக இருப்பார்கள்.
நாங்கள் கடந்த மார்ச் மாதமே, இரண் டாவது அலை உருமாறிய கொரோனா வைரஸ் என்பதைக் கண்டறிந்து மத்திய அரசை எச்சரித்தோம். இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவக் காரணம் சர்வதேச விமானங்களை கடந்த ஜனவரி மாதம் அனுமதித்ததே. பிரிட்டனில் இரண்டாவது அலையில் பி.1.1.7 என்கிற கொரோனா வைரஸ் பரவியது. அதேபோல் தென்ஆப்பிரிக்காவில் பி.1.351 என்கிற வைரஸ் பரவியது. பிரேசிலில் பி.1 வகை கொரோனா வைரஸ் உருமாறிப் பரவியது.
இதில் பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா வின் உருமாறிய வைரஸ்களில் இருந்து உருவானதுதான் இந்தியாவில் இரண்டாவது அலையில் உருவாகியுள்ள பி1.617 என்கிற வைரஸ். இதனால் பெரும்பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தோம். ஆனால் இந்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் மத்திய அரசு, மாநிலங்களில் தினசரி பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. அதில் ஏப்ரல் மாதம் தந்த புள்ளிவிவரத்தில் கோவா மாநிலத்தில் 35.5 சதவிதம் சராசரி பரவல் என்றது. அதே மாதம் உத்தரகாண்ட் குறித்த புள்ளிவிவரத்தில் 32 சதவிதம் என்கிறது. அவர்கள் குறிப்பிட்ட மாதத்தில் உத்தர காண்ட் மாநிலத்தில் கும்பமேளா நடந்தது. சுமார் 20 லட்சம் மக்கள் அங்கு கூடி யிருந்தார்கள். அப்படியிருக்க அங்கே எப்படி குறைந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்?
இரண்டாவது அலை குறித்து ஆய்வு செய்ய டேட்டா கேட்டபோது, அரசு தந்த டேட்டாவில் குழப்பமிருந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு எங்களை மதிக்கவில்லை.
தடுப்பூசி போடுவதிலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சதவிகித மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது எல்லாமே அரசின் நிர்வாகத் தோல்வி என அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். இறுதியில் கடந்த ஏப்ரல் இறுதியில் 800 விஞ்ஞானிகள் பிரதமர் மோடிக்கு, முழுமையான, உண்மையான தகவல் வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனாலும் சரியான புள்ளிவிவரத்தைத் தரவில்லை என முடித்திருந்தார். இந்த கட்டுரை சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் நிர்வாக அவலத்தையும், மக்கள் கொத்துக் கொத்தாக இறப்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது.
இதுகுறித்து டெல்லி செய்தியாளர்களிடம் கேட்டபோது, "வைராலஜிஸ்ட் ஜமால் எழுதிய கட்டுரை, தங்களது ஆட்சியின் இமேஜ் மற்றும் பிரதமரின் கட்டமைக்கப்பட்ட இமேஜை உடைத்ததால் கடும் அதிருப்தியடைந்துள்ளார் பிரதமர் மோடி. அந்த கோபத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஹர்ஷவர்தன், பயோடெக் துறையின் செயலாளர் ரேணுஸ்வரப் இருவரும், விஞ்ஞானி ஷாகீத் ஜமீலிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் கடுமையாகப் பேசியதன் விளைவாக அவர் அதிருப்தியடைந்துள்ளார். அந்த இருவரும் தந்த நெருக்கடி மற்றும் மிரட்டலால்தான் பதவியிலிருந்து விலகியுள்ளார்'' என்கிறார்கள்.