Advertisment

நள்ளிரவு வரை மிரட்டல்! -கவர்னருக்கு கறுப்புக்கொடி

opp.governor

ய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எங்கு சென்றாலும் எதிர்ப்புதான். ஜூலை 20-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறார் என்றதும், தி.மு.க. பொறுப்பாளர்கள் ரகுபதி, செல்லபாண்டியன் ஆகியோர் எதிர்க்கட்சி தோழர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்திற்கு தயாராகினர். அன்றுகாலை மகளிர் கல்லூரிக்கு முன்னாலுள்ள திடலில், கறுப்புக்கொடிகளுடன் குவிந்திருந்த சுமார் ஆயிரம்பேரை ஆளுநர் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே கைதுசெய்த காவல்துறை மூன்று மண்டபங்களில் அடைத்தது.

Advertisment

opp.governor

அதே நேரத்தில் புதிய பேருந்துநிலையத்தில் உடைந்து விழும் நி

ய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எங்கு சென்றாலும் எதிர்ப்புதான். ஜூலை 20-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறார் என்றதும், தி.மு.க. பொறுப்பாளர்கள் ரகுபதி, செல்லபாண்டியன் ஆகியோர் எதிர்க்கட்சி தோழர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்திற்கு தயாராகினர். அன்றுகாலை மகளிர் கல்லூரிக்கு முன்னாலுள்ள திடலில், கறுப்புக்கொடிகளுடன் குவிந்திருந்த சுமார் ஆயிரம்பேரை ஆளுநர் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே கைதுசெய்த காவல்துறை மூன்று மண்டபங்களில் அடைத்தது.

Advertisment

opp.governor

அதே நேரத்தில் புதிய பேருந்துநிலையத்தில் உடைந்து விழும் நிலையிலிருக்கும் சுவர்களுக்கு பெயிண்ட் அடித்து, அங்கேயே ஆளுநருக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் கணேஷ் ஆகியோருடன் மேடையேறிய ஆளுநர் "தூய்மை இந்தியா' உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி செட்-அப் செய்யப்பட்ட பகுதிக்கு செல்லாமல், குறுகலான சந்திற்குள் சென்று அங்கிருந்த மதுபாட்டில்களைக் கண்டு டென்ஷனானார்.

பின்னர் விருந்தினர் மாளிகையில் 11 முதல் 2 மணிவரை அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகளிடம் அலுவல்களைக் கேட்டறிந்தார். மனுக்களை வாங்க, பிரிவுவாரியாக வகைப்படுத்த அரசு ஊழியர்கள் முகாமிட்டிருக்க, காலையில் ஆளுநரை வரவேற்ற புதிய தமிழகம் கட்சியின் மா.செ. சிவக்குமாரின் டோக்கனை அழைக்காததால் அப்செட்டாகி கூச்சலிட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்தவரிடம் கேட்டபோது, ""2011-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. லேப்டாப் மற்றும் உபகரணங்களுக்காகும் செலவான ரூ.75ஆயிரத்துக்கு பதில், ரூ.1.50 லட்சம் என கணக்குக்காட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும்''’எனக்கோரி மனு கொடுத்ததாக தெரிவித்தார்.

மாலை ஆய்வுமுடிந்து கிளம்பிய ஆளுநரின் கார் முத்துடையான்பட்டி அருகே லேசான விபத்துக்குள்ளானது. அரசுப்பேருந்து ஓட்டுநர் விஜயசுந்தரம் கைதுசெய்யப்பட, ஆளுநர் மாற்றுக் காரில் கிளம்பினார்.

இதுவொருபுறமிருக்க... கறுப்புக்கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சியினர் மீது வழக்குப் பதியவேண்டும் என்ற ர.ர.க்களின் உத்தரவையடுத்து, 800 பேருக்கு எஃப்.ஐ.ஆர். போட மாலை 7 மணிக்கு கணினி ஆபரேட்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரவு 9 மணியளவில் குன்றாண்டார் கோயில் ஒ.செ. வெங்கிடாசலம் மயங்கியதையடுத்து ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையறிந்த எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் தமிழகம் முழுவதும் பரவக்கூடும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுக்க... கைதாகி உணவு, குடிநீர் இன்றி வாடியவர்கள் நள்ளிரவு 12 மணிக்குமேல் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ. ரகுபதி, ""ஆளுநர் வருகைக்கு முன்பே கைது செய்தவர்கள், அவர் போன பின்னும் உணவு, தண்ணீர் இன்றி அடைத்து வைத்தனர். பலருக்கு சர்க்கரை அளவு குறைந்து மயக்கமடைந்தனர். ஆளுநர் விசிட் என்ற பெயரில் அமைச்சரும் அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினருக்கு எதிரான தங்கள் வேலையை கச்சிதமாக செய்து முடித்தனர்''’என்றார்.

-இரா.பகத்சிங்

nkn27-07-2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe