மிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில், வேலையே பார்க்காமல், வெறும் கையெழுத்து மட்டுமே போட்டு, மாற்றுப்பணி என்ற பெயரில் சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகளில் வீரேசனும் ஒருவர். அருப்புக்கோட்டையில் பராமரிப்பு பிரிவில் பணிபுரியும்(?) இவர், அ.திமு.க.வின் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு மாநில துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.

Advertisment

ww

அப்படியென்றால், வீரேசன் பார்க்கின்ற வேலைதான் என்ன?

மதுரையில் அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடன் கேட்டு விண் ணப்பிக்கும் போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம், ரூ.1லட்சத்துக்கு 5000 ரூபாய் வரை கமிஷனாகக் கறந்துவிடுவார். சாத்தூரைச் சேர்ந்த ஜெயராஜ் இச்சங்கத்தின் உறுப்பினராக இருந்து இறந்துவிட் டார். தந்தையின் கணக்கில் இருந்த வைப்புத் தொகையை, அவருடைய மகன் முத்துக்குமார் பெறுவதற்கு லஞ்சம் கேட்டார், அச்சங்கத்தின் தலைவரான வீரேசன். இவருடைய கொட்டத்தை ஒடுக்குவதற்கு, சங்க உறுப்பினர்கள் பலரும் துடித்துக்கொண்டிருந்த நிலையில்... லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முத்துக்குமார் தகவல் தந்தார். லஞ் சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட வீரேசன், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

"இதெல்லாம் பழைய கதை... வில்லங்கமாக ஒரு பெண்ணுடன் விளையாடிய விவகாரத்துக்கு வருவோம்'’என்றார் போக்குவரத்துக்கழக ஊழியர் ஒருவர். அரசுத் துறையில் பணி புரியும், தனக்குத் தெரிந்த பெண் ஊழியர்களுக்கு வலைவீசிப் பழகுவதோடு, உயர் அதிகாரிகளையும் கவனிப்பது வீரேசனுக்கு வாடிக்கையாகிப் போனது. மறைமுகமாக நடத்திய இந்தச் செயல், ஆதாரங்களோடு தற்போது அம்பலமாகி யிருக்கிறது. கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிந்ததுபோல், பெண் ஊழியர் ஒருவரிடம் நெருக்கமாக இருந்தபோது, நிர்வாண நிலையில் செல்ஃபி படங்களாக எடுத்துத் தள்ளிய வீரேசன், காம மயக்கத்தில் அந்தப் படங்களை, தனது வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸில் வைத்துவிட்டார். அவை பரபரவென்று போக்குவரத்துக்கழக ஊழியர்களின் செல்போனில் பரவிவிட்டது.

Advertisment

இந்த மோசமான விவகாரம், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச் சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வரை போய், அவர் கண்டித்து விரட்டியதும் நடந்திருக்கிறது.

அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு மாநில துணைச்செயலாளர் வீரேசனை தொடர்புகொண்டோம். “""லஞ்சம் பெற்று கைதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், ஆபாச போட்டோக்கள் விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்''’என்றார் கூலாக.

அரசியல் வளர்ச்சிக்கும் ஆபாசக் கூத்துக்கும் முடிச்சு போடுவது அபத்தமாக அல்லவா இருக்கிறது?

-ராம்கி