முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகிறேன். அவ ராகவே தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் மீதான பாலியல் வழக்கு திட்ட மிடப்பட்ட ஒன்று. முகிலன் ஒரு சமூகப் போராளி. ஒவ்வொரு போராட்டக் களத்திலும் பல பெண் கள் பங்குபெற்றுள்ளார்கள். களப் பணி, இயக்கம், போராட்டமென எல்லோரும் ஒன்றாகத்தான் இயங்கி யுள்ளார்கள். போராட்ட இயக்கங் களில் பங்குபெறுபவர்கள் ஒன்றாகத் தங்குவதும் ஒரே அறையில் தூங்கு வதும் உண்டு. அந்த பெண் படித்த வர்தானே. முகிலன் பாலியல் அட் வான்டேஜ் எடுத்துக்கொண்டாரென் றால் ஏன் அப்போதே கூறவில்லை? இரு வருடங்கள் கழித்து புகார் கூறவேண்டிய அவசியம் என்ன?
முகிலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத் தார், அதை நம்பித்தான் இடம் கொடுத்தேன் என்று அந்தப் பெண் சொல்வதும் சமாளிப்புதான். போராட்டக் களத்தில் பயணிக்கும் ஒரு போராளிப் பெண் அறிவுள்ளவ ளாகத்தானே இருக்கமுடியும். சட்ட அறிவு இருக்கும்தானே? ஒரு ஆணுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன் இருக்கும்போது அந்த நபரை இரண் டாவது திருமணம் செய்தால் அது சட்டவிரோத மில்லையா? அந்தப் பெண் ஏராளமாகப் பொய் பேசுகிறார். அவர் பேச்சை நம்பி யாராவது முகி லனிடம் பேசிப்பார்க்கிறேனென சொல்லி யிருக்கலாம். முதல் மனைவி இருக்கும்போது அவருக்கென ஒரு குடும்பம் இருக்கும் நிலையில் யாரும் இன்னொரு பெண்ணுக்காக பேச மாட்டார்கள்.
முகிலன் ஒரு போராளி. அவரைத் தன்வசப்படுத்த வேண்டுமென திட்டமிட்டி ருக்கிறார். அது முடியாமல் போனதால் விரக்தியில் பொய்களைப் பரப்புகிறார். குறுந்தகவலை பெரிய விஷயமாகச் சொல்கிறார்கள். என்ன எங்காவது ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கலாம் என்றா குறுந்தகவல் அனுப்பினார். அது ஏதாவது போராட்டம் சம்பந்தமாக இருக்கலாம்?
போராட்டக் களத்திற்கு வந்துவிடுவதால் வருடக்கணக்கில் மனைவி, குடும்ப உறவே இல்லாமல் போய்விட்டதாக அப்பெண்ணிடம் முகிலன் கூறியிருக்கிறார். ஆகவேதான் தன்னை முகிலன் திருமணம் செய்துகொள்வாரென அவர் நம்பியதாகக் கூறுவது அவதூறு. அந்த பெண்ணின் அவதூறுக்கு நான் பதில் கூறவேண்டியதில்லை. முகிலன் சட்டப்படியான என் கணவர். அந்தப் பெண் கூறுவது இல்லீகல்; ஆகவே நான் அவர் மீது வழக்கு தொடர்வேன். அப்போது தெரியும் அந்தப் பெண்ணின் முழு பின்னணியும்'' என்றார் ஆவேசமாக.
-ஜீவாதங்கவேல்
படம்: குமரேஷ்