Advertisment

லஞ்ச பேரம் நடத்திய ஆட்சியரின் நேர்முக உதவியாளர்! -விருதுநகர் மாவட்ட வில்லங்கம்!

ss

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத் தைக் கையில் வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வராஜ், லஞ்சமாகத் தனக்கு ரூ.15,000 தர வற்புறுத்தியிருக்கிறார். செல்வராஜ் பேரம் நடத்திய ஆடியோ, தற்போது லீக் ஆகியுள்ளது.

Advertisment

cc

அதில் செல்வராஜ், "வேலைக்கான உத்தரவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒருமாதம்கூட ஆகலாம். நிறையபேர் விண் ணப்பித்திருக்கிறார்கள். வந்திருக்கும் விண்ணப்பங் களில் உங்களது விண்ணப் பத்தைத் தேர்ந்தெடுத்து நானாகவே உங்களை அழைக் கிறேன். இது பெர்மனென்ட் போஸ்டிங். நியாயமாகச் சொல்வதென்றால், இது போன்ற போஸ்டிங், ரூ.5 லட்சம் க

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத் தைக் கையில் வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வராஜ், லஞ்சமாகத் தனக்கு ரூ.15,000 தர வற்புறுத்தியிருக்கிறார். செல்வராஜ் பேரம் நடத்திய ஆடியோ, தற்போது லீக் ஆகியுள்ளது.

Advertisment

cc

அதில் செல்வராஜ், "வேலைக்கான உத்தரவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒருமாதம்கூட ஆகலாம். நிறையபேர் விண் ணப்பித்திருக்கிறார்கள். வந்திருக்கும் விண்ணப்பங் களில் உங்களது விண்ணப் பத்தைத் தேர்ந்தெடுத்து நானாகவே உங்களை அழைக் கிறேன். இது பெர்மனென்ட் போஸ்டிங். நியாயமாகச் சொல்வதென்றால், இது போன்ற போஸ்டிங், ரூ.5 லட்சம் கொடுத்தாலும் யாருக்கும் கிடைக்காது. நாளைக்கு ரூ.15,000 கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள். நாளை காலை 8-30 மணியிலிருந்து 9 மணிக்குள் வந்துவிடுங்கள். இதுகுறித்து யாரிடமும் எதுவும் சொல்லாதீர்கள். ரகசியம் காக்கவேண்டும்''” என்று கூற, அந்த நபர் இடைமறித்து “"நாங்க அன்றாடம் வேலை பார்த்து கஞ்சி குடிக்கிறவங்க. நீங்க கேட்ட தொகையை வீட்டில் சொன்னேன். அவ்வளவு தர வேண்டுமா என்று தயங்குறாங்க...''’என்று சொல்ல, “"தம்பி, நாளைக்கு எப்படியாவது ரூ.15,000-ஐ யாரிடமாவது வாங்கிக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து விடு''’என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்.

‘செல்வராஜ் லஞ்சம் வாங்குபவரா?’ விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

Advertisment

"ரொம்பவும் கீழ்த் தரமா நடந்துக்கிறாரு. இங்கே வந்து 2 மாசம் கூட ஆகல. டெய்லி ஒவ்வொரு சத்துணவு மையத்துக்கா விசிட் போவாரு. ஒவ்வொரு சென்டர்லயும் ரூ.2000-ல இருந்து ரூ.3000 வரைக்கும் வசூல் பண்ணிருவாரு. இப்படித்தான் ஒருநாள் கல்குறிச்சி போனாரு. அங்கே சத்துணவு அமைப்பாளரா இருந்த ஒரு அம்மாகிட்ட "கையில எவ்வளவு இருக்கு?'ன்னு கேட்டிருக்காரு. அந்தம்மா அப்பாவித்தனமா "40 கிலோ அரிசி இருக்கு, 10 கிலோ பருப்பு இருக்கு'ன்னு சொல்லிருக்காங்க. உடனே இவரு, "நான் கையிருப்ப கேட்கலம்மா. எவ்வளவு பணம் வச்சிருக்கீங்கன்னு கேட்டேன்'னு நேரடியா விஷயத்துக்கு வந்திருக்காரு. அந்தம்மா பரிதாபமா "300 ரூபாய்தான் வச்சிருக்கேன்'னு சொல்லிருக்காங்க. அதுக்கு இவரு "நீ உள்ளூர்தான, போய் யார்ட்டயாவது கைமாத்தா பணம் வாங்கிட்டு வந்து கொடு'ன்னு வெளிய அனுப்பிருக்காரு. அந்தம்மா யார்கிட்டயோ கெஞ்சி, 400 ரூபா வாங்கிட்டு வந்து மொத்தமா 700 ரூபாய இவருகிட்ட கொடுத்திருக்கு. இவரும் "சரி போம்மா.. மீதி (ரூ.300) பணத்த அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்''னு சொல்லிட்டு கிளம்பிருக்காரு. கல்குறிச்சியில இவரு லஞ்சம் வாங்குன கேவலத்த கலெக்டர் ஆபீஸ் வட்டாரத்துல தெரியாதவங்க இருக்கமுடியாது.

cc

விருதுநகர் மாவட்டம் முழுவதுக்கும் சத்துணவுக்கான பெரிய அதிகாரி செல்வராஜ். உள்நோக்கத்தோடுதான் சத்துணவு மையத்துக்கு இவரு விசிட் போவாரு. மையத்துக்குப் போயி அரிசி கம்மியா இருக்கு. பருப்பு கம்மியா இருக்குன்னு எழுதிருவாரு. இவரப் பத்தி கலெக்டர்கிட்ட ஏற்கனவே பெட்டிஷன் எல்லாம் கொடுத்திருக்காங்க''’என்றனர்.

இதுகுறித்து விளக்கம்பெற, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வராஜை, அவரது கைபேசி எண் 740லலலலலலலலில் தொடர்புகொண் டோம். அழைப்பை ஏற்கவில்லை. அந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பினோம். பதிலில்லை. செய்தி அச்சிலேறும் வரையிலும், அவர் நம்மைத் தொடர்புகொள்ளவே இல்லை. தனது விளக்கத்தைப் பகிர அவர் முன்வந்தால், பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி டெல்லி சென்றுவிட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமாரைத் தொடர்புகொண்டு, ‘லஞ்ச ஆடியோ சம்பந்தப்பட்ட செல்வராஜ் நடவடிக்கைக்கு உள்ளாவாரா?’ எனக் கேட்டோம். "இதுல நான் சொல்லு றதுக்கு என்ன இருக்கு? விஷயம் வெளிய வந்திருச்சு. கலெக்டர் வந்த பிறகுதான் இது குறித்துப் பேசணும்''’என்றார் சுரத்தில்லாமல்.

மாவட்ட ஆட்சியர் ஒருவரது நேர்முக உதவியாளர், வறுமையில் உழலும் எளிய மக்களிடமும் லஞ்சம் வாங்குவது, வெட்கக்கேடான செயலல்லவா?

nkn170822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe