Advertisment

இந்தியக் கடலில் சர்வதேசக் கடத்தல்! பாகிஸ்தான்-இலங்கை ஹைடெக் அபாயம்!

india

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீ ஹரி கோட்டாவிலுள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம். அங்குள்ள அதிகாரிகள், திடீரெனத்தான் அதைக் கவனித்தனர். உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போனின் சிக்னல் அது. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பார்ட்டி ஒருவரைத் தொடர்புகொண்ட அழைப்பு.

Advertisment

india

அழைப்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட விவரங்களையும், அழைப்பு வந்த இடம் குறித்த மிகத் தெளிவான ரிப்போர்ட்டையும் தமிழ்நாட்டின் தென்மண்டல கடலோரக் காவல் படைக்கு அனுப்பிவைக்கிறது ஆராய்ச்சி மையம்.

Advertisment

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றால் சேட்டிலைட் போன்கள் தடைசெய்யப்பட்டது. அதன் போன் அழைப்புகள் சாதாரண டவர்களில் பதிவாகாது. இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டா, அமெரிக்காவின் நாசா போன்ற குறிப்பான சில விண்வெளி ஆராய்ச்சி மையங்களால் மட்டுமே அதனை ஃபாலோ பண்ணமுடியும்..

கிடைத்த விண்வெளி ஆராய்ச்சிமையத்தின் ரிப்போர்ட்டைக் கொண்டு அலர்ட்டான கடலோரக் காவல்படையின் கப்பலான வைபவ் அதன் லொகேஷனான தூத்துக்குடியின் தென்கடல் பகுதிக்கு விரைந்தது. இலங்கைக்கான 120 நாட்டிங்கல் தாண்டி, இந்தியக் கடல் எல்லையான 200 நாட்டிங்கல் மைல்களின் ஐ.எம்.ஏ. பார்டரில் நின்றிருந்த அந்தப் படகைக் கடலோரக் காவல்படை ஐந்து நாட்களாக கண்காணித்தது. ஆறாவது நாளான நவ -25 அன்று அந்தப் படகு நகர்ந்து இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்ததும் விரைந்த கடலோரக் காவல்படை துப்பாக்கி முனையில் படகை வளைத்தனர். அப்போது படகிலுள்ளவர்கள் எந்த

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீ ஹரி கோட்டாவிலுள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம். அங்குள்ள அதிகாரிகள், திடீரெனத்தான் அதைக் கவனித்தனர். உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போனின் சிக்னல் அது. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பார்ட்டி ஒருவரைத் தொடர்புகொண்ட அழைப்பு.

Advertisment

india

அழைப்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட விவரங்களையும், அழைப்பு வந்த இடம் குறித்த மிகத் தெளிவான ரிப்போர்ட்டையும் தமிழ்நாட்டின் தென்மண்டல கடலோரக் காவல் படைக்கு அனுப்பிவைக்கிறது ஆராய்ச்சி மையம்.

Advertisment

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றால் சேட்டிலைட் போன்கள் தடைசெய்யப்பட்டது. அதன் போன் அழைப்புகள் சாதாரண டவர்களில் பதிவாகாது. இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டா, அமெரிக்காவின் நாசா போன்ற குறிப்பான சில விண்வெளி ஆராய்ச்சி மையங்களால் மட்டுமே அதனை ஃபாலோ பண்ணமுடியும்..

கிடைத்த விண்வெளி ஆராய்ச்சிமையத்தின் ரிப்போர்ட்டைக் கொண்டு அலர்ட்டான கடலோரக் காவல்படையின் கப்பலான வைபவ் அதன் லொகேஷனான தூத்துக்குடியின் தென்கடல் பகுதிக்கு விரைந்தது. இலங்கைக்கான 120 நாட்டிங்கல் தாண்டி, இந்தியக் கடல் எல்லையான 200 நாட்டிங்கல் மைல்களின் ஐ.எம்.ஏ. பார்டரில் நின்றிருந்த அந்தப் படகைக் கடலோரக் காவல்படை ஐந்து நாட்களாக கண்காணித்தது. ஆறாவது நாளான நவ -25 அன்று அந்தப் படகு நகர்ந்து இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்ததும் விரைந்த கடலோரக் காவல்படை துப்பாக்கி முனையில் படகை வளைத்தனர். அப்போது படகிலுள்ளவர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் காட்டவில்லை.

india

ஆரம்பத்தில் அவர்களை விசாரிக்கையில், நாங்கள் மீன்பிடிப்பதற்காக வந்தோம். வழிதவறி இந்தியக் கடல் பாதையில் வந்துவிட்டோம் என்ற ரெடிமேடான வார்த்தைகளை விட்டிருக்கிறார்கள். சுதாரித்த அதிகாரிகள் சேட்டிலைட் போன் ட்ரேஸைக் காட்டி அதற்கான ஆவணங்களைக் கேட்டபோது. மழுப்பியவர்களிடமிருந்து சேட்டி லைட் போனைப் பறித்தனர். பின் விசாரணையில் அதிகாரிகளிடம் இந்த போன், படகின் ஓனர் ஸ்ரீலங்காவின் நிகம்பு பகுதியிலுள்ள அலென்சு குட்டிகே சின்கா தீப்தாசானி பெர்னாண்டோ கொடுத்தனுப்பியது என்றதும், படகைச் சலித்த அதிகாரிகள் அங்கு சிக்கியவைகளைக் கண்டு அதிர்ந்துவிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நாம் பேசியபோது...

""இலங்கையின் சேனையதுவா எனும் பெய ருடைய அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்த நீந்துகுல சூர்ய சந்தமனுவேல், வர்ணகுலா சூர்ய ஜீவன், லட்சுமணன் குமார், வர்ணகுல சாந்த சுனி மான், சமீரா, நிஷாந் கமகயே என 6 பேர் இருந்தார் கள். அவர்களிடம் எத்தகைய ஆயுதங்களிருக்கும் என்பது தெரியாததால் நாங்கள் அந்தப் படகை எங்களின் கமாண்டோக்களைக் கொண்டுதான் வளைத்தோம்.

அடித்தளத்தைச் சோதனையிட்டதில் படகின் இரண்டு ப்யூல் டாங்குகளில் ஒன்று மட்டும் பூட்டப்பட்டு வித்தியாசமாகக் காணப்பட்டதால் அதை ஓப்பன் பண்ணியபோது உள்ளே 20 பெட்டிகளில் 99 பாக்கெட்களில் அடைக்கப்பட்ட வெள்ளை பவுடர் சிக்கியது. ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடையுள்ளது. மேலும் பாகிஸ்தான் தயாரிப்பான லோடுசெய்யப்பட்ட 5 பிஸ்டல்கள். சோதனையில் அது ஹெராயின் என்று தெரிந்தது. அவர்களிடம் சிக்கிய துரையா வகை சேட்டிலைட் போன் பாகிஸ்தான் தயாரிப்பு. விலை 2.50 லட்சம் மதிப்புள்ளது.

inddd

பிடிபட்ட 5 பிஸ்டல்களும் மாடர்ன் டைப் மற்ற பிஸ்டல்களைவிட அரிதிலும் அரிதான 30 மீட்டர் தொலைவு கில்லிங் ரேஞ்ச் கொண்டது. போன் உள்ளிட்ட இந்த இரண்டுமே லேட்டஸ்ட் தயாரிப்பு. சர்வதேச தீவிரவாத அமைப்பினரின் பயன்பாட்டிற்கானது என்ற சந்தேகமும் உண்டு.

அவர்களை முறைப்படி விசாரித்ததில், ஹெராயின் கடத்தலுக்காகவே இந்தப் படகை பயன்படுத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து இவர்கள் குறிப்பிட்ட கடல் தொலைவில் நின்றிருந்தபோது, அங்கிருந்து வந்த விசைப்படகிலிருந்த இந்த ஹெராயின் பார்சல்கள் இந்தப் படகில் லோடு செய்யப்பட்டுக் கிளம்பி, சர்வதேச கடல் பாதைக்கு வந்தவர்கள், கன்சைன்மெண்ட் போகவேண்டிய ஆஸ்திரேலியாவின் க்ளியரன்சுக்காக நான்கு நாட்கள் காத்துக்கிடந்திருக்கிறது படகு. ஆஸ்திரேலியா லைன் சிக்னல் கிடைப்பதற்குத் தாமதமான நேரத்தில்தான் அவர்கள் சேட்டிலைட் போனில் பேசியபோது சிக்னல் நமது விண்வெளி கண்ட்ரோலில் கிடைத்திருக்கிறது.

சென்னை ஏர்போர்ட் கஸ்டம்சின் தகவல்படி, சர்வதேச சந்தையில் பிடிபட்ட ஹெராயினின் மதிப்பு கிலோவிற்கு 2.90 கோடியாம் அதன் மொத்த மதிப்பு 290 கோடி. பாகிஸ்தானிலிருந்து இந்தக் கடல் ரூட்டில் கடத்தப்படும் போதைப் பொருட்கள் ஆஸ்திரேலியா கொண்டுபோகப்பட்டு பின்பு தீவிரவாதிகளின் மூலம் சர்வதேச சந்தையில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. தங்களின் ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொள்ளவும், குறிவைக்கப் படும் இலக்கின் நோக்கம் சிதையாமலிருப்பதற் காகவும் இது போன்ற போதைப் பொருட்களைத் தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

india

இலங்கைவாசிகள் ஆஸ்திரேலியாவுக்குப் புதியவரல்ல என்பதால், ஹெவியான அமௌண்ட் அடிப்படையில், போதைப் பொருளைக் கடத்துவதற்காகவே தீவிரவாதிகள், போதைக் கடத்தல் மாஃபியாக்கள், இலங்கைவாசிகளான சிங்களர்களையே பெரும்பாலும் ஈடுபடுத்து கிறார்கள். கடத்தலின் சூட்சுமம் அவர்கள் அறிந்திருப்பதும் அடிப்படைக் காரணம்.

இந்தப் படகின் இலங்கை ஓனர், மீனவர்களுக்கு 5 லட்சம் வீதமும் கேப்டன் நீந்துகுல சூர்ய சந்தமனுவேலுக்கு ஆறுலட்சம் என்று 31 லட்சம் கடத்தல் நபர்களுக்கான கூலியாக போதைக் கும்பல் தலைவனிடம் வாங்கியவர், மீனவர்களுக்கு தலா ஒரு லட்சமும் கேப்டனுக்கு 2 லட்சம் என்ற அடிப்படையில் பேசி, மீதத் தொகையை அமுக்கிவிட்டாராம்'' என்றார் அந்த அதிகாரி.

தரையில் சீனாக்காரனின் சீண்டல் என்றால், தென்கடல் பகுதியை ஆயுதங்கள் மற்றும் போதைக் கடத்தலின் ரூட்டாக்கி இடைஞ்சல் தருகிறது பாகிஸ்தான்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

_______________

கடத்தலுக்கு வசதியாகும் பூகோள அமைப்பு!

தென்குமரியிலிருந்து ராமநாதபுரம் வரையிலான கடற்கரைப் பகுதிகள் கணிசமான நாட்டிங்கல் மைல் தொலைவு ஆழமற்றவை. பைபர் போட் மற்றும் சிறிய விசைப்படகுகள் மட்டுமே சென்றுவரமுடியும் என்கிறார்கள். பெரிய கப்பல்கள் அந்தப் பக்கம் வந்தால் தரை தட்டிச் சிக்கிக் கொள்ளும். இதுபோன்ற கடல் பூகோள அமைப் பிருப்பதால் பெரிய கப்பல்கள் இந்தப் பகுதியை எட்டிப்பார்ப்பதில்லை. கண்காணிக்கும் கடலோரக் காவல்படைக் கப்பல்களும் வெகுதொலைவிலேயே நின்றுகொள்வதால், சட்டவிரோதமாக மாலத்தீவு, அந்தமான், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு செல்பவர்கள் இந்தக் கப்பல் ரூட்டில் பைபர் படகின் மூலம் ஒரு மணி நேரத்தில் போகவேண்டிய இலக்கை எட்டிவிடுகிறார்கள்.

_____________

இறுதிச் சுற்று!

ஆளுங்கட்சியின் சூப்பர் பூத் கமிட்டி!

சட்டமன்ற ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஏற்கனவே மாநகராட்சி முதல் கிராம ஊராட்சி வரை ஒவ்வொரு வார்டுகளிலும் வாக்குச்சாவடி பூத் வாரியாக 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்துள்ளது. சில ஊர்களில் 30 பேர் வரை இருக்கிறார்கள். தி.மு.க. பூத் கமிட்டியில் சராசரியாக 15 பேர்தான் உள்ளனர். வார்டில் உள்ள ஒவ்வொரு வாக்கையும் சகல டெக்னிக்குகளுடன் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் பூத் கமிட்டியினர்தான் என்பதால், அ.தி.மு.க. மற்றொரு டெக்னிக்கை கையில் எடுத்துள்ளது. கடந்த 28, 29 தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை நடத்தி, பெண்களை முழுமையாகக் கொண்ட 20 பேர் சூப்பர் பூத் கமிட்டி உருவாக்கப்பட் டுள்ளது. பெண்கள் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இந்த மகளிர் பூத் கமிட்டி பாடுபடுமாம். பணப்பட்டுவாடாவும் இவர்கள் பொறுப்புதானாம்.

அ.தி.மு.க.வில் உள்ள ஆண்கள் மற்றும் மகளிர் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி இந்த மூன்று மாதத்திற்கு மாத சம்பளமாக தலா 10 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம் மார்ச் மாதம் முதல் தேர்தல் வரை வார சம்பளமாம்!

- ஜீவாதங்கவேல்

nkn021220
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe