வள்ளலார் புகழ் பரப்ப, அரசு அமைக்க இருக்கும் சர்வதேச மையத்துக்கு, அவரது அன்பர்கள் மத்தியிலேயே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஏன் இப்படி?
வள்ளலார் தோன்றி இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னையில் நடந்த வள்ளலார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர்,
""வள்ளலாரின் 20 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையிலும், நாங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலும் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது’’ என்று உற்சாகமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த மையத்தை உருவாக்குவதற்கான டெண்டரை, இந்து சமய அறநிலையத்துறை வரும் 29ஆம் தேதி வெளியிடும் ஏற்பாடுகளில் இறங்கி யுள்ளது.
இந்த நிலையில்தான் இதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.
குறிஞ்சிப்பா

குறிஞ்சிப்பாடி சுப்பிரமணிய சிவா தலைமையிலான வள்ளலார் பணியகம் அமைப்பினர், கடந்த 8ஆம் தேதி கடலூரில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரனை சந்தித்து, ’"வள்ளலார் உருவாக்கிய சபை அமைந்துள்ள பெருவெளிப் பகுதியில், வள்ளலார் சர்வதேச மையத்தை அரசு அமைக்கக்கூடாது'’ என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்’ என்று மனுவைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல் வள்ளலார் அன்பர்கள் பலரும் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பலமான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வள்ளலார் பணியகத்தைச் சேர்ந்த முருகன் குடி முருகன் “ "தமிழக அரசு வள்ளலார் 200' என்ற பெயரில் முப்பெரும் விழாவை சிறப்பாக எடுத்திருக் கிறது. இதைப் வரவேற் கிறோம். அதேபோல் வள்ளலார் பிறந்த அக்டோபர் ஐந்தாம் நாளை, தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்ததையும் வரவேற்று நன்றி பாராட்டுகிறோம். அதே நேரத்தில் நூறு கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து, வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதை எங்களால் ஏற்கமுடியவில்லை. காரணம், வள்ளலார் பெருவெளியில் ஏற்கனவே தர்மச்சாலை, சத்ய ஞானசபை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவைகளை அமைப்பதற்காக வள்ளலார் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் நிலப்பரப்பை சாதாரண ஏழை எளிய மக்களிடம் இருந்து பெற்றுள்ளார். தைப்பூச நாளில் ஜோதி வழிபாட்டுக்காக அங்கே கூடும் பல லட்சம் மக்களுக்கு, அந்த இடம்தான் புழங்குவதற்கான பகுதியாக இருக்கிறது. இதேபோல் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், சித்தி வளாகத்திலும், திருவறைக் காட்சியின்போது பல லட்சம் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்களுக்கும் இந்த இடம் நிம்மதிதரும் வகையில் இருக்கிறது. இப்படி ஒரு ஆண்டில் நான்கு முக்கிய நாட்களில் பல லட்சம் அன்பர்களும் பொதுமக்களும் வந்துபோகிற இடத்தில், சர்வதேச மையத்தை அமைத்தால் அது எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும். அதோடு, வள்ளலார் என்ன நோக்கத்திற்காக பெருவெளியைப் பயன்படுத்தினாரோ அந்த நோக்கம் இதன்மூலம் தகர்ந்து போகும்''’ என்றதோடு...
“""வடலூரை ஒட்டி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டி எடுக்கப்பட்ட இடம், ஏக்கர் கணக்கில் காலியாக உள்ளன. அந்த இடத்தைச் சீர்படுத்தி, அங்கே கூட சர்வதேச மையத்தை அமைக்கலாம்''’என்றார் அழுத்தமாக.
இது குறித்து வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த வள்ளலாரின் தீவிர கொள்கையாளரான பார்த்திபன், ""வள்ளலாரின் கொள்கைகளை உலக அளவில் கொண்டு செல்ல தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளும், அதன் விளைவாக உருவாக உள்ள சர்வதேச மையமும் வரவேற்கத் தகுந்ததுதான். அதேநேரத்தில், பார்வதிபுரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு கொடுத்த சுமார் 100 ஏக்கரில்தான் பெருவெளி அமைந்திருக்கிறது. அதை பிறவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இந்தப் பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து, அதை மக்களிடம் திணிக்கக்கூடாது'' என்றார் உறுதியான குரலில்.
ஏரியாவாசிகளோ, “வள்ளலார் சபை அமைந்துள்ள பெருவெளிப் பகுதியில் இருக்கும் அன்னதானக் கூடத்தில், தினசரி ஆயிரக்கணக்கான முதியோர்களும் ஆதரவற்றோர்களும் உணவருந்தி, அப்பகுதியிலேயே தங்கி வாழ்ந்து வருகிறார்கள். சர்வதேச மையம் அங்கே அமைக்கப்பட்டால், இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக அங்கே நடமாட முடியாமல் போய்விடும். எனவே, இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்து, சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்''’என்கிறார்கள் ஒரே குரலில்.
மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை அரசுத்துறை உணரவேண்டும்.