ர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனை அதிரடியாக வளைத்திருக்கிறது க்யூ பிராஞ்ச் டீம். மடக்கப்பட்டவன், இங்கிலாந்து உளவுத்துறைக்கே கண்ணாமூச்சு காட்டியவன் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

க்யூ பிரிவு டி.எஸ்.பி.யான சந்திரகுமார் தனக்குக் கிடைத்த அந்த சீக்ரெட் தகவலை, தூத்துக்குடி பிராஞ்சுக்குப் பாஸ் செய்ய, உடனடியாக அந்தத் துறையின் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்.ஐ.க்கள் ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்ஜமின் உள்ளிட்டோர் அடங்கிய டீம், சீக்ரெட்டாக திரேஸ்புரத்தை முற்றுகையிட்டது. அங்குள்ள முத்தரையர் காலனிப் பக்கம் சுற்றித் திரிந்து, பின்தொடர்ந்து சென்று, அந்த வெள்ளைக்காரனை அதிரடி யாக மடக்கி கைது செய்தனர்.

ss

இதுகுறித்துப் பேசிய இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, "அவனிடம் விசாரித்தபோது, தான் இங்கிலாந்து நாட்டிலுள்ள லிட்டில் ஹாம்ப்டன் பகுதி யைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்று சொன் னான். அவன் வேறு எந்த விபரத்தையும் சொல்ல மறுத் தான். அடுத்து அதிரடி பாணி விசாரணையைத் தொடங் கியதும்... சர்வதேச அளவில், தான் ஒரு போதைக் கடத்தல் பேர்வழி என்று ஒப்புக் கொண்டான். இலங்கைக்கு செல்ல இருந்த அவன் சரியான நேரத்தில், எங்களால் மடக்கப் பட்டிருக்கிறான்''’என்றார் உற்சாகமாக.

இன்னொரு அதிகாரியோ, "அவன் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் எனத் தெரியவர அதிர்ந்துவிட்டோம். ஆரம்பத்தில் அவன் தமிழ்நாடு போலீசை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவனை சோதனையிட்டபோது இங்கிலாந்து மற்றும் இந்திய நாட்டின் இரண்டு பாஸ்போர்ட் டுகள், இரண்டு ஐபோன்கள், இரண்டு லட்சம் இந்தியப் பணம், இரண்டாயிரம் இலங்கை கரன்சிகள், மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் பணமான திர்ஹம் ஆகியவை கிடைத்தன. மேலும் இந்தியாவில் வசிப்பதற்காக "ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா' என்ற கார்டைப் பெறுவதற்காக, கோவாவில் ஓட் டல் நடத்தும் மணிப் பூரைச் சேர்ந்த யாங்கரேலா வாஷூம் என்ற பழங்குடிஇன பெண்ணை 2006-ல் திருமணம் செய்திருக்கிறான். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஐபோனைக் கேட்டபோது, அவன் தரமறுத்தான். பல மொழிகள் தெரிந்த அவன், ஆங்கிலத் தில் அசால்ட்டாகவே பேசினான். அவன் ஐபோனைப் பிடுங்கி சோதனையிட்டபோது, அவன் டெல்லி, மும்பை போன்ற பகுதிகளுக்குத் தொடர்புகொண்டு பேசியது தெரியவந்தது. "உன்னை கொரோனா நோயாளிகள் இருந்த அறையில் போட்டுவிடுவோம்' என்று மிரட்டிப் பார்த் தோம். அதற்கும் அசராத அவன், தான் ஏற்கனவே கோவா வில் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்டிச் சிரித்தான். பிறகு வேறு பாணியில் விசாரித்த போது, எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான்.

கடத்தல் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கி 21 முறை கைதாகி தண்டனை பெற்றிருக்கிறான் அவன். தூத்துக்குடியிலிருந்து இலங்கை வெறும் 120 நாட்டிங்கல் மைல் அளவே இருப்பதால் அங்கிருந்து இலங்கைக்கு செல்லத் திட்டமிட்டிருக்கிறான். இவன் கடல்வழியாக விரளி மஞ்சள், மதிப்புமிக்க ஒடிசா ரக பீடிஇலைகள் மற்றும் கஞ்சா ஆயில் ஆகியவற்றைக் கடத்தியிருக்கிறானா? என்றெல்லாம் விசாரணை நடக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ராஷியானி, பரோடா மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கேட்டமைன், ஓப்பியம், ஹஷீஸ் உள்ளிட்ட 306 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த விவகாரத்தில், இந்திய தொழில் அதிபர் ஒருவர் உட்பட 12 பேர்களை கைது செய்தனர். அதில் இவனும் ஒருவன். இவனோடு அப்போது தோர்ன், ஜான் பிரேஸ்கான், வியட்நாமின் நஜிமன் கோங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது கைதான ஜோனாதன் தோர்ன், 2019 ஆகஸ்ட்வரை மும்பை சிறையில்தான் இருந்திருக்கிறான். பின்னர் ஜாமீனில் வந்தவன், தன்னுடைய மனைவி இருக்கும் கோவாவிற்குத் திரும்பியுள்ளான். மறுபடியும் அங்கிருந்து வந்து, தூத்துக்குடி வழியாக இலங்கை சென்று, அங்கிருந்தபடியே போதைப்பொருள்களை வெளிநாடு களுக்கு கடத்தியிருக்கிறான். இப்போது வசமாக சிக்கிவிட்டான். இவனுக்கு உதவியாக இருந்த படகு உரிமையாளர்கள், ஏஜண்டுகள் என பலரையும் நாங்கள் வளைக்கவிருக்கிறோம். இங்கிலாந்து காவல்துறையினர் இவனை மடக்கப் பலமுறை திட்டமிட்டும், அவர்களுக்கே டேக்கா கொடுத்து இந்தியா வந்திருக்கிறான் இந்த கில்லாடி''’என்கிறார் புன்னகையோடு.

இங்கிலாந்து புலனாய்வு அமைப்புகளால் கோட்டை விடப்பட்ட சர்வதேச போதை கடத்தல் கும்பலின் ’டான்’ ஆன ஜோனாதன் தோர்ன், பிடிபட்டிருப்பது உலக அளவிலான புலனாய்வு அமைப்புகளின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.