உட்கட்சி தேர்தல் ஏடாகூடம்! -கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க.வினர்!

ss

ட்கட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் அதிருப்தி அலை பெரிதாக எழுந்திருக்கிறது.

பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் பெருந்தலைகள், ஏடாகூடங்களை நடத்திவரு வதால், அதுகுறித்த புகார்கள் கட்சியின் தேசியத் தலைமையிடம் குவிந்துவருகின்றன.

ssss

மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் தமிழக பா.ஜ.க.வில் நடந்த நிலையில், இன்னும் மாவட்ட தலைவர்கள் யார் யார் என்பதை அறி விக்காமல் இருக்கிறார்கள். அதையும் வருகின்ற 19ந் தேதி அறிவித்து, அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரையும் அறிவிக்க விருக்கிறார்களாம். இதற்காக 17ஆம் தேதி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கி யிருந்து, தேர்தலை நடத்திமுடிக்கவிருக்கிறா ராம். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வில் நடக் கும் உட்கட்சி தேர்தலைப் பற்றிய புகார்கள், தலைமைக்கு சென்ற வண்ணமிருக்கிறதாம்

ட்கட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் அதிருப்தி அலை பெரிதாக எழுந்திருக்கிறது.

பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் பெருந்தலைகள், ஏடாகூடங்களை நடத்திவரு வதால், அதுகுறித்த புகார்கள் கட்சியின் தேசியத் தலைமையிடம் குவிந்துவருகின்றன.

ssss

மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் தமிழக பா.ஜ.க.வில் நடந்த நிலையில், இன்னும் மாவட்ட தலைவர்கள் யார் யார் என்பதை அறி விக்காமல் இருக்கிறார்கள். அதையும் வருகின்ற 19ந் தேதி அறிவித்து, அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரையும் அறிவிக்க விருக்கிறார்களாம். இதற்காக 17ஆம் தேதி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கி யிருந்து, தேர்தலை நடத்திமுடிக்கவிருக்கிறா ராம். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வில் நடக் கும் உட்கட்சி தேர்தலைப் பற்றிய புகார்கள், தலைமைக்கு சென்ற வண்ணமிருக்கிறதாம்.

அந்த புகார்களில், தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள், கட்சியை வளர்ப்பதற்கான பணி களைச் செய்யவில்லை எனவும், அடுத்து யார் மாநில தலைவராக வருவது என்பதிலும், அதற்கு என்ன செய்யலாம் என்பதிலும் கவன மாக செயல்பட்டு வந்துள்ளனர் எனவும், இத னால் அப்படிப்பட்ட விசுவாசமான நபர் களுக்கே, மாவட்டம் வரையிலும் பொறுப்பு வழங்கியுள்ளார்கள் எனவும், இதனால் கட்சிக்கு உழைத்தவர்கள் கறிவேப்பிலை போன்று தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். மேலும் 25 உறுப்பினர்கள் சேர்த்தால் தேர்தல் நடத்தலாம் என்று கட்சி விதி இருப்பதால், இவர்களே போலி உறுப் பினர்களைச் சேர்த்து தேர்தலை நடத்திய தாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, தென் சென்னையில் மயிலாப் பூர், விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, போன்ற சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் 15 மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங் களுக்கு தேர்தல் பொறுப் பாளராக தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக மாநிலத் தலைவ ராக எப்படியாவது தான் வந்துவிட வேண்டும் என்பதற்காக, தென் சென்னை அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட் பாளர் ஜெயகுமார் மகனைப் பின்னுக்கு தள்ளி, பா.ஜ.க. முன்னுக்கு வருவதற்கு காரணமாக இருந்த பொறுப்பாளர் களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டி விட்டு, தனக்கு தோதானவர்களை மட் டும் தமிழிசை நியமித் துள்ளார் என்கிற குற்றச்சாட்டை அழுத்த மாக வைத்திருக்கிறார்கள்.

விருகம்பாக்கம் தொகுதியில் மொத்தம் 270 பூத்துகள் உள்ளன. அதில் குறிப்பாக தமிழிசை வசிக்கும் 109வது பூத்தில் மட்டும் 61 கட்சி உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவித் திருக்கிறார்களாம். ஆனால் உள்ளே துழாவிப் பார்த்தால், வெறுமனே தமிழிசை பெயரோடு சேர்த்து ஆறு பேர்தான் அவரது லோகையா காலனியை சேர்ந்தவர்களாம். மற்றவர்கள் அனைவரும் பூத்துக்கே சம்பந்தமற்றவர்களாக உள்ளனராம். ஒரே நபரின் இரண்டு செல் நம்பரை வைத்து உறுப்பினர்கள் சேர்த்ததைப் போலவே பொய்க் கணக்கையும் காட்டியிருக்கிறார்களாம். அப்படி கிழக்கு மண்டலத் தலைவராக தமிழிசையின் டிரைவ ரான பிரதாப்பையே நியமித்து இருக்கிறார் களாம்.

மேலும் கட்சி பைலாவின்படி பார்த்தால் 45 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால் பிரதாப்புக்கு 48 வயதாம். இதை மறைத்து பதவி வழங்கியுள்ளார்களாம்.

இதேபோல் தெற்கு மண்டலத்துக்கு திருமணியை நியமித்துள்ளார்கள். இவரது சொந்த பூத்தான 239-ல் கிளையைக்கூட அமைக்க முடியாத ஒருவரை பதவியில் அமர்த்தியுள்ளார்களாம். வடக்கு மண்டலத்தில் தேவி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படி நியமிப்பதற்கு அங்கு நடைபெற்ற தேர்தல் வாக்குகளைக்கூட எண்ணாமலே அறிவித்துள்ளதாகவும் புகார்கள் குவிந்துள்ளது. இப்படி பா.ஜ.க. மா.த., பொன்னார், வானதி, நயினார் நாகேந் திரன் என ஒட்டுமொத்தமாக இதே பாணியில், அவர்களுக்கு தோதான நபர்களுக்கு மட்டுமே பதவி வழங்கியும் மற்றவர்களை ஓரம்கட்டியும் ஏடாகூடத்தை அரங்கேற்றியுள்ளனராம்.

இதனால் பாதிக்கப்பட்ட கட்சி விசுவாசிகள் கொந்தளிப்பில் இருப்பதோடு, தேர்தல் வாக்குகளைக்கூட எண்ணாமல் இவர்களாகவே அறிவித்ததாகவும் ஆதாரத் துடன் புகார்களை அடுக்கியுள்ளனர். இதனால் அவர்கள் சொல்லும் 40 லட்சம் உறுப்பினர்களில் நிச்சயம் 20 சதம் கூட உண்மை இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளதாம்.

இப்படி, கட்சியை வலுப்படுத்த திட்டம் போட்டால், இவர்களை வலுப்படுத்தத் திட்டம் தீட்டி, கட்சியையே அழித்தொழிக்கப் பார்க்கிறார்கள் என்று தலைமையிடம் கட்சியினர் கொந்தளித்திருக்கிறார்கள். மேலும் அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பல பொறுப்புகளை வகித்துவரு பவருமான அனுராக்தாகூர் மற்றும் முன்னால் எம்.பி.யாக இருந்த என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என்ற நிலை இருக்கிறதாம்.

குறித்த காலத்தில் தேர்தல் தொடர்பான அனைத்தையும் முடிப்பதற்கு தமிழகம் போன்ற இடங்களில் நிலவும் பிரச்சனைகள் தடையாக உள்ளதாலும், தமிழகத்தில் டங்ஸ்டன் விவகாரம் போன்ற சிக்கலால் ஈரோடு இடைத்தேர்தலில் நிற்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதோடு, தற் போது யாரை மாநில தலைவராக நியமிக்கப்போகிறார்கள் என்கிற அச்சத்திலும் ஒட்டுமொத்தமாக புலம்பி நிற்கிறார்கள் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள்.

nkn180125
இதையும் படியுங்கள்
Subscribe