ட்டுக்காக உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆழ்ந்து யோசிக்காமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு அகழியில் மாட்டிக் கொண்டது அ.தி.மு.க.'' என்கிறார்கள் தென்மாவட்ட அரசியல் களத்தை அறிந்த சமூக ஆர்வலர்கள்.

1989-91 கலைஞர் ஆட்சிக்காலத்தில் கலைஞர் வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகத்தவர்களை இணைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மொத்த ஒதுக்கீடான 50 சதவிகிதத்திலிருந்து தனியாக 20 சதத்தைப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை உருவாக்கினார். இதனால் கல்வி அரசு வேலை வாய்ப்புகளில் பல சமூகத்தினர் பலனடைந்தனர்.

southdistrict

இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறி விப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக அவசர அவசர மாக சட்டசபையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித ஒதுக்கீட்டில், வன்னிய சமூக மக்களுக்கென்று 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து, அதே எம்.பி.சி. பட்டியலில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவிகிதமும், மற்றப் பிரிவினருக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எம்.பி.சி. பட்டியலில் உள்ள 93-க்கும் மேற்பட்ட பிற சமூகத்தவர் கள், மற்றும் சீர்மரபினருக்கான கல்வி, அரசு வேலை களுக்கான உரிமை பறிக்கப்பட்டதுடன் பிரதி நிதித்துவமும் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

அடிப்படை வாழ்வாதாரத்தின் அச்சாணி யான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதால் அது எம்.பி.சி. பிரிவினரைக் கடும் கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது. தென் மாவட்டத்தின் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சீர்மரபினர் என்று சொல்லப்படுகிற முக்குலத்தோர் சமூகம் வாக்கு வங்கியில் முன்னணியிலிருக்கின்றனர்.

இதனால் லட்சங்களைக் காலி செய்து கடனுக்கு ஆளாகிப் படித்த தங்களின் பிள்ளைகளுக் கான கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் குறைக்கப் பட்டிருப்பதால் அறிவிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை வாபஸ் பெற வேண்டி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் மூலக்கரைப் பட்டியை ஒட்டியுள்ள ஆனையப்பபுரத்தில் பிப். 28 அன்று பசும்பொன் தேசிய கழகம் சார்பில் சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தங்களின் வீடுகளில், தெருக்களில் கருப்புக்கொடிகளைக் கட்டினர். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலின் சமீபமுள்ள இருமன்குளம் கிராமத்தின் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் திரண்டு வந்து எடப்பாடியாரைக் கண்டித்தும், வரவிருக்கும் ssதேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தின் அமைச்சர் கடம்பூர்ராஜின் தொகுதியிலடங்கிய கழுகுமலை நகரின் செம்மநாட்டார் தேவர்நலச் சமுதாயமும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த தெருக்களில் கருப்புக் கொடிகளை ஏற்றினர். அவற்றை அகற்ற மறுத்த காரணத்திற்காக அங்குள்ள மகேஸ்வரன், சரவணன், சிவா, ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தங்களது விசுவாசத்தைக் காட்டியது போலீஸ். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, மறுகால்குறிச்சி மஞ்சங்குளம், சூரன்குடி கிராமத் தெருக்களில், திரும்புகிற இடமெல்லாம் கருப்புக்கொடிகள்தான்.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் ஏரியாவில் கால்வாய், காரசேரி, வெள்ளூர் போன்ற தென்மாவட்ட கிராமங்களில் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிரான மக்களின் கருப்புக் கொடிப் போராட்டம் காட்டுத் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது.

சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த தென்காசி மாவட்டத்தின் இருமன்குளம் பெரியசுந்தரையா, ""உள் ஒதுக்கீடு கெடைச்ச டாக்டர் ராமதாஸ், எங்க வீடுகள்ல பூ மணக்கும்னு சொல்றாரு. அப்ப உரிமை பறிக்கப்பட்ட எங்க மக்களோட வீட்ல என்ன மணக்கும். எங்க இடஒதுக்கீட்டு உரிமையப் பறிச்சி எங்க புள்ளைகளப் படுகுழியில் தள்ளிட்டீ களேய்யா. கடன்பட்டு பி.இ, எம்.எட்.னு படிச்ச எங்க புள்ளைக கொத்தடிமையாப் போவணும்னு நெனைச்சீகளா. எங்க சமுதாயம் மட்டுமல்ல, எங்கள ஒட்ன அனைத்து சமூக மக்கள் மேலயும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இது. தேர்தல்ல இதோட பலன அறுவடைபண்ணப் போறீக'' என்றார் கண்கள் சிவக்க.

புதூரின் ராதா படபடத்தார். ""அறுபது, எழுபது கிலோமீட்டர் தொலைவு போயி உச்சிவெயில்ல வெந்து இருநூறு ரூவா கூலி வேல பார்த்து படிக்க வைச்ச எங்க புள்ளைக, கண்ணீரும் கம்பலையுமா நிக்குதுக. ஒதுக்கீடு போனதால வேல கெடைக்குமான்னு பதறுதுக. எங்க புள்ளைக பாவம் சும்மாவிடாது'' என வெடித்தார்.

படித்துவிட்டு வேலை எதிர்பார்ப்பு ஏக்கத்தோடிருக்கும் மஞ்சுளாவும், வான்மதியும், ""லட்ச லட்சமாகக் கடன்பட்டு அரை வயிறு கால் வயிறு பசியோட எங்களப் படிக்க வைச்ச எங்கப்பா அம்மா படுற கஷ்டம் ஒங்களுக்குத் தெரியுமா? அவங்கள வயிறாரச் சாப்புட வைக்கணும்னு நாங்க நெனைச்சது தப்பா? ஓட்டுக் கணக்குக்காக எங்க உரிமையப் பறிச்சது நியாயமா. வாழ்வா சாவான்ற நெலைக்கி எங்களத் தள்ளிட்டீகளே'' என்றார்கள் கண்கள் கலங்க.

தென் மாவட்டங்களில் பரவும் இந்த கொந்தளிப்பு, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என சாதுர்ய வியூகங்களுக்குத் தயாராகிறது ஆளுந்தரப்பு...