தமிழ்த் தேசிய தளங்களில் வலிமையாக இயங்கும் தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன், தமிழர் களின் வாழ்வுரிமைகளுக்காக தொடர்ச்சியாகப் போராடி வருபவர். தமிழர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மத்திய-மாநில அரசுகளால் பறிபோவதை கண்டித்து சேலம் ஓமலூரில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பிரமாண்டமான வாழ்வுரிமை மாநாட்டை கடந்த வாரம் நடத்தினார். இந்த நிலையில் வேல்முருகனை சந்தித்தோம்.
பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளிடமிருக்கும் வேகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியிடம் இல்லையே ?
இனம்-மொழி சார்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்கள் போல் எந்த கட்சியும் நடத்தியதில்லை. இப்போது கூட ’தமிழகத்தின் வேலைவாய்ப்பு கள் தமிழர்களுக்கே’ என்கிற முழக்கத்துடன் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதமும், தமிழக அரசு பணிகளில் 100 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கும் வகையில் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2 லட்சம் மக்க
தமிழ்த் தேசிய தளங்களில் வலிமையாக இயங்கும் தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன், தமிழர் களின் வாழ்வுரிமைகளுக்காக தொடர்ச்சியாகப் போராடி வருபவர். தமிழர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மத்திய-மாநில அரசுகளால் பறிபோவதை கண்டித்து சேலம் ஓமலூரில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பிரமாண்டமான வாழ்வுரிமை மாநாட்டை கடந்த வாரம் நடத்தினார். இந்த நிலையில் வேல்முருகனை சந்தித்தோம்.
பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளிடமிருக்கும் வேகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியிடம் இல்லையே ?
இனம்-மொழி சார்ந்த தமிழர்களின் உரிமைகளுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்கள் போல் எந்த கட்சியும் நடத்தியதில்லை. இப்போது கூட ’தமிழகத்தின் வேலைவாய்ப்பு கள் தமிழர்களுக்கே’ என்கிற முழக்கத்துடன் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதமும், தமிழக அரசு பணிகளில் 100 சதவீதமும் தமிழர்களுக்கே வழங்கும் வகையில் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2 லட்சம் மக்கள் கூடிய பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரகடனம் செய்திருக்கிறோம். தமிழ்த்தேசிய அரசியலை வென்றெடுக்க அதிகார அரசியலும் தேவைப்படுவதால் தேர்தலை எதிர்கொள்ள வேகமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
சட்டமன்ற தேர்தலில் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
மத்தியிலுள்ள பாசிச பா.ஜ.க. அரசு, தமிழர் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்து நமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கிறது. பாசிச பா.ஜ.க. அரசுக்கு ஊதுகுழலாகவும் அடிவருடிகளாகவும் இருக்கிறது எடப்பாடி அரசு, இவைகள் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டிய தீய சக்திகள். அந்த வகையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட திமுக ஆட்சிக்கு வரவேண்டும். அதனால் தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் உங்களுக்கான இடங்கள் உறுதிசெய்யப்பட்டு விட்டனவா?
தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது. கட்சி யின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன. ஓரிரு நாளில் நல்லமுடிவு தெரியவரும்.
அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கான சீட் எண்ணிக்கையை இழுபறியில்லாமல் பா.ம.க. நிறைவேற்றிக்கொண்டிருப்பது அக்கட்சிக்கு வெற்றிதானே?
வாக்கு அரசியல், சீட் அரசியல், நோட்டு அரசியல் ஆகியவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தங்களுக்கான தேவைகளை முதலில் நிறைவேற்றிக்கொள்வார் டாக்டர் ராமதாஸ்! அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.
வன்னியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்திருப்பது வன்னியர் சமூகத்தின் நலன் சார்ந்ததுதானே?
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய-மாநில அரசு பணிகளில் முறையே 2 சதவீதமும், 20 சதவீதமும் வன்னியர் களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்பதுதான் தனது உயிர் மூச்சு என்றும், அதற்காக 40 ஆண்டுகாலமாக போராடிவருகிறேன் என்றும் சொல்லி வருகிற டாக்டர் அய்யா, அதனை பெற்றுத் தந்துள்ளாரா? அவரது மகன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போதும் எம்.பி.யாக இருக்கிறார். மத்திய-மாநில அரசுகளிடம் போராடி வாங்கித் தந்திருக்கலாமே? செய்தாரா? இல்லை. இப்போது எடப்பாடி அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்ட மசோதா கூட ராமதாசின் முயற்சியால் நடந்தது என்று முழுமையாக சொல்ல முடியாது. பல வன்னியர் சமூக அமைப்புகளும் நடத்திய போராட்டங்கள், வைத்த கோரிக்கைகள், தொடுத்த வழக்குகள் என நீண்ட நெடிய பின்னணி இருக்கிறது.
டாக்டர் ராமதாசை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்வதால் இப்படி பேசுகிறீர்கள். ஆனால், உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவால் வன்னியர்களுக்கு நன்மைதானே?
தமிழகத்தில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடி! அந்த வகையில், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்காக கலைஞர் தந்த 20 சதவீத இடஒதுக்கீட்டில் இப்போதுவரை 15 சதவீதம் அளவுக்கு நன்மை கிடைத்து வந்தது. ஆனால், ராமதாஸ்-எடப் பாடியின் கூட்டுச் சதியில் இந்த இடஒதுக்கீட்டின் பலன் தற்போது 10.5 சதவீதமாக குறைந்துவிட்டது. ராமதாஸ் கொண்டாடி மகிழ்கிற அளவுக்கு இந்த இட ஒதுக்கீடு நன்மை செய்யவில்லை; பின்னடை வை ஏற்படுத்தியிருப்பதுதான் நிஜம்.
எதன் அடிப்படையில் பின்னடைவு என்கிறீர்கள்?
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாநில அரசு பணிகளுக்கான தேர்வில் அந்தந்த மாவட்டத்தினர் தான் கலந்துகொள்கிறார்கள். அந்தவகையில், வட தமிழகத்தில், பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 80 சதவீத வேலைவாய்ப்பு இடங்களைப் பெற்று வந்தனர். காரணம், மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சாதியினரின் எண்ணிக்கை வட தமிழகத்தில் குறைவு. அதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பெரும்பான்மையான அரசு பணிகளில் வன்னியர் சமூகம் அதிக நன்மை அடைந்தது. தற்போதைய உள் இட ஒதுக்கீட்டால் சதவீதம் குறைந்து இதுவரை பெற்று வந்த அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து இருக்கிறது. ஓட்டு மற்றும் பிற அரசியலுக்காக வன்னியர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் ராமதாஸ். தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும் உண்மையான இட ஒதுக்கீட்டை இந்த வேல்முருகன் பெற்றுத் தருவான்.
-சந்திப்பு : இரா.இளையசெல்வன்