"ஹலோ தலைவரே, ராவோடு ராவாக ஆயிரக்கணக்கான கைதிகளை அரெஸ்ட் செய்திருக்குது தமிழக காவல்துறை.''”
"ஆமாப்பா.. கவர்னரை டி.ஜி.பி. சந்திச்ச பிறகு இந்த அதிரடின்னு ஒரு தரப்பும், ஆங்காங்கே கொலை-கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் முதல்வர் உத்தரவுப்படி இந்த அதிரடின்னு இன்னொரு தரப்பும் சொல்லுதே?''”
"தலைவரே.. தென்மாவட்டங்களில் பழிக்குப் பழி கொலைகள் தொடருது. இதை முன்கூட்டியே துப்பறியும் வகையில் உளவுத்துறை இல்லை. காரணம், தென்மாவட்டத்தில் செல்வாக்கான ஒரு சமூகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் காவல்துறையிலும் உளவுப்பிரிவிலும் வெயிட்டா இருக்காங்க. அவங்க கவனமா இல்லைங்கிற ரிப்போர்ட் முதல்வ ருக்கு கிடைச்சிருக்கு. அதனால, காவல் துறை யிலும் உளவுத் துறையிலும் எந்த நேரத்திலும் மாற்றங்கள் வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.''
"சென்னையில் 3 காவல் ஆணைய ரகம் அமைக்கும் முயற்சி தீவிரமெடுத்து இருக்குதே?''”
"சென்னை மாநகரில் இயங்கி வந்த கமிஷனர் அலுவலகத்தை சென்னை, தாம்பரம், ஆவடின்னு மூன்றாக உருமாற்றுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார் முதல்வர். சென்னை கமிஷனராக இருக்கும் சங்கர் ஜுவாலை, உளவுத்துறைக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இருக்கிறதாம். தாம்பரம் கமிஷனராக ஏ.டி.ஜி.பிக்களான சந்தீப்ராய் ரத்தோரும், ரவியும் ரேஸில் இருக்கிறார்களாம். ஆவடி கமிஷனராக தாமரைக்கண்ணன் வரலாம்னு சொல்லப்படுது. அதேபோல் சென்னை கமிஷனராக, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் வரலாம்னும் சொல்லப்படுது. இதற்கிடையே, சென்னையின் முன்று கமிஷனரகத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு சங்கர் ஜுவாலுக்குத் தரப்படலாம் என்றும் சொல்லப்படுது. அதேபோல் மூன்று கமிஷனர் அலுவலகத்துக்குமான எல் லைகள் விறுவிறுப்பா
"ஹலோ தலைவரே, ராவோடு ராவாக ஆயிரக்கணக்கான கைதிகளை அரெஸ்ட் செய்திருக்குது தமிழக காவல்துறை.''”
"ஆமாப்பா.. கவர்னரை டி.ஜி.பி. சந்திச்ச பிறகு இந்த அதிரடின்னு ஒரு தரப்பும், ஆங்காங்கே கொலை-கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் முதல்வர் உத்தரவுப்படி இந்த அதிரடின்னு இன்னொரு தரப்பும் சொல்லுதே?''”
"தலைவரே.. தென்மாவட்டங்களில் பழிக்குப் பழி கொலைகள் தொடருது. இதை முன்கூட்டியே துப்பறியும் வகையில் உளவுத்துறை இல்லை. காரணம், தென்மாவட்டத்தில் செல்வாக்கான ஒரு சமூகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் காவல்துறையிலும் உளவுப்பிரிவிலும் வெயிட்டா இருக்காங்க. அவங்க கவனமா இல்லைங்கிற ரிப்போர்ட் முதல்வ ருக்கு கிடைச்சிருக்கு. அதனால, காவல் துறை யிலும் உளவுத் துறையிலும் எந்த நேரத்திலும் மாற்றங்கள் வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.''
"சென்னையில் 3 காவல் ஆணைய ரகம் அமைக்கும் முயற்சி தீவிரமெடுத்து இருக்குதே?''”
"சென்னை மாநகரில் இயங்கி வந்த கமிஷனர் அலுவலகத்தை சென்னை, தாம்பரம், ஆவடின்னு மூன்றாக உருமாற்றுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார் முதல்வர். சென்னை கமிஷனராக இருக்கும் சங்கர் ஜுவாலை, உளவுத்துறைக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இருக்கிறதாம். தாம்பரம் கமிஷனராக ஏ.டி.ஜி.பிக்களான சந்தீப்ராய் ரத்தோரும், ரவியும் ரேஸில் இருக்கிறார்களாம். ஆவடி கமிஷனராக தாமரைக்கண்ணன் வரலாம்னு சொல்லப்படுது. அதேபோல் சென்னை கமிஷனராக, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் வரலாம்னும் சொல்லப்படுது. இதற்கிடையே, சென்னையின் முன்று கமிஷனரகத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு சங்கர் ஜுவாலுக்குத் தரப்படலாம் என்றும் சொல்லப்படுது. அதேபோல் மூன்று கமிஷனர் அலுவலகத்துக்குமான எல் லைகள் விறுவிறுப்பாக வரையறுக்கப்பட்டு வருகிறது.''”
"தலைமைச் செயலகமும் பரபரப்பா இருக்கு தேப்பா?''”
"உண்மை தாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில், அவற்றுக்கான அரசாணைகளைப் பிறப்பிக்கும் நடவடிக்கைகள் அனைத்துத் துறையிலும் வேகமெடுத் திருக்கு. இங்கே, வட இந்தியர்கள் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 80 சதவீதத்தை ஆக்கிரமித்து வந்தனர். அதனால், இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நிலை யை உருவாக்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயம் ஆக்கப்படும்னு அறிவித்தது. அதற்கான அரசாணையும் இப்போது போடப்பட்டிருக்கு.''”
"சபாஷ். இந்த அரசாணையை ஏற்றுக்கொண்டு டி.என். பி.எஸ்.சி. தனது விதிகளை முறைப்படித் திருத்தியாகணுமே?''”
"ஆமாங்க தலைவரே, நீங்க சொல்வது சரிதான். இதற்கான டி.என்.பி.எஸ்.சி.யின் விதிகளில் திருத்தம் செய்ய, தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என். பி.எஸ்.சி.) தலைவர் பாலச்சந்திரன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. அதில் புதிய நடைமுறையைக் கொண்டுவரலாம்னு தீர்மானிக்கப்பட்டிருக்கு. அதன்படி, அரசுப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முன்பாக, தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும் என்றும், இதில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும் என்றும், ஒரு புதிய விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். இது அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கு. இனியாவது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்கணும்.''”
"சபாநாயகர் அப்பாவு பதவிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வழக்குகள் பற்றியும் பரபரப்பா பேச்சு அடிபடுதேப்பா.''”
"சபாநாயகர் மீது ஏற்கனவே மறியல், போராட்டம், பஞ்சாயத்து, மணல் விவகாரம்னு 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்குதாம். அதில் சில வழக்குகளில் அவர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டால், அவரால் சபாநாயகர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்படுமாம். இதையறிந்த சபாநாயகர் தரப்பு, சட்டரீதியான ஆலோசனைகளில் தீவிரமா ஈடுபட்டி ருக்கு. அ.தி.மு.க. தரப்போ, சபாநாயகருக்கு செக் வைக்க, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட முனைகிறதாம். இது இப்ப கோட்டை வட்டாரத்தை விறுவிறுப்பாக்கிக்கிட்டு இருக்குது.''”
"தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் விவாதப் பொருளா மாறியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரசாரமான பேட்டிகள், டிவிட்டர் பதிவுகள் அனைத்தும் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கு. சமீபத்தில் அவர் பேசிய பேச்சுக்களால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த கட்சி மேலிடம், டி.கே.எஸ். இளங்கோவனை டீல்பண்ணச் சொல்லியிருக்கு. ஆனால், டி.கே.எஸ். இளங்கோவன் கருத்துக்கும் கடும் வார்த்தைகளால் ட்வீட் பண்ணியிருந்தார் தியாக ராஜன். இதுவும் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட, வெளியிலேயும் கட்சிக்குள்ளேயும் விவாதமாகியிருக்கு. மேலிடம் தன் னோட அதிருப்தியையும் வெளிப் படுத்தியிருக்கு. நிதியமைச்சர் பொறுப் பில் இருக்கும்போது, வார்த்தைகளில் கவனம் வேணும்னும், நிதானம் தேவைன்னும் அறிவுறுத்தப்பட்டிருக்கு. அதேநேரத்தில், எந்த ஜி.எஸ்.டி. கூட் டத்தில் நிதியமைச்சர் கலந்துக்க லைன்னு சர்ச்சை கிளம்பியதோ, அந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதியா பழனிவேல் தியாகராஜனை பரிந்துரைத்திருக்கிறார் முதல்வர்.''”
"ம்...''”
"தி.மு.க.வின் ஐ.டி.விங் மாநில துணைச்செயலாளர் மகேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அப்ப கட்சியின் ஐ.டி.விங் பற்றி பேச்சு வந்திருக்குது. அப்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைப் பற்றியும் சொல்லியிருக்கிறாராம் மகேந்திரன். ஐ.டி. விங்கில் பொறுப்புகள் மாறுமா என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் உள்ளது.”
"முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உரிமைக்குழுவின் முன் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், "ஒன்றிணைவோம் வா'’ என்ற தலைப்பில், பொதுமக்களிடமிருந்து அரசுக்கு எதிரான 1 லட்சம் புகார் மனுக்களை வாங்கியது தி.மு.க. இதை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பெற்றுக்கொள்ள மறுத்ததால், அவற்றை அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் ஒப்படைக்க, கட்சியின் மூத்த எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சென்றனர். அந்த சந்திப்பில், தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்ததாக, நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் மீது உரிமை மீறல் தீர்மானத்திற்கான புகார்க் கடிதத்தைக் கொடுத்தனர். இது தொடர்பாக சண்முகம் ஏற்கெனவே விளக்கம் அனுப்பியிருந்தார். இதை ஏற்காத நாடாளுமன்ற உரிமைக் குழு, அவரை நேரில் ஆஜராகணும்னு சொல்லி சம்மன் அனுப்பியது. எனவே, கடந்தவாரம் விசாரணையில் ஆஜரான சண்முகம், நான் தி.மு.க. எம்.பி.க்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லைன்னு விளக்கமளிச்சாராம்.''”
"ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை அ.தி.மு.க. தொடங்கிடுச்சே?''”
"ஆமாங்க தலைவரே, ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய அ.தி.மு.க. சைடில் எடப்பாடி புறப்பட்டுவிட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை ஆதரிக்காதீர்கள் என்பதுதான், அவர் களத்தில் வைக்கும் கோஷமாக இருக்கிறது. குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்பது போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறை வேற்றவில்லை என்பதை புகாராகச் சொல்லி, பெண்கள் தரப்பில், ஆளும்கட்சிக்கு எதிரான அலையை எழுப்ப நினைக்கிறார் எடப்பாடி. கட்சியினரையும் இதையே முக்கியமாக மக்களிடம் எடுத் துச் செல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறாராம்.''”
"தி.மு.க. சைடில் என்ன நடக்குது?''”
"எதிர்த் தரப்பான இலைத் தரப்பு, பிரச்சாரத்தை ஆரம் பித்து அதிரடி காட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், அந்த 9 மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளும், பிரச்சாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் வர வேண்டும் என்று எதிர்பார்த் துக் காத்திருக்கிறார்கள். ஒவ் வொரு மாவட்ட நிர்வாகி களும் தங்கள் மாவட்டத்தில் 2 நாட்களாவது ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். முதல்வர் தரப்போ, பிரச்சாரப் பயணம் குறித்து திங்கட் கிழமைவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.''”
"நானும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்களின் சட்டமன்ற உரையின் வீடியோ க்ளிப்பிங் ஸை, பேரவைச் செயலகத்தில் கேட்டிருக்கிறார்கள். பேர வைச் செயலகமும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதை அறிந்த அ.தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் க்ளிப் பிங்ஸைக் கேட்க, இவர்களுக் குத் தராமல் இழுத்தடித்தபடி இருக்கிறதாம் பேரவைச் செயலகம்''”