நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.

-என்பது வள்ளுவர் வாக்கு.

அறிவற்றவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, இதன்மூலம் விடை சொல்லும் வள்ளுவர், வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டிய பெருமையைத் தேடாமலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும். பாதுகாக்கவேண்டிய பெருமையைப் பாது காக்காமல் வாய் பொத்தி நிற்பவர்கள்தான் அறிவற்றவர்கள்’என்று அழுத்தமாகவே சொல்கிறார்.

Advertisment

இந்தக் குறளுக்கு இலக்காகி -அழுக்காகி -இழுக்கோடு நிற்பவர்கள், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையும் அவரைப் போலவே அவர் கட்சியில் இருக்கும் ஆட்களும்தான்

கர்நாடக மாநிலம் சிவமேகா நகருக்கு, கடந்த 27ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத் துக்காக பா.ஜ.க. கும்பல் சென்றது. அண்ணாமலை முன்னிலையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், அந்த மாநிலத்தின் முன்னாள் துணைமுதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அது கர்நாடகத் தமிழர்கள் நடுவே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால், கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைக்கேட்டு அங்கிருந்த தமிழ்மக்கள் உணர்வுமயமாக எழுந்து நின்ற நேரத்தில்...

திடீரென்று ஈஸ்வரப்பா கோபமாகி, "அந்தப் பாட்டை நிறுத்துங்கள்' என்று கூச்சலிட்டு, நிறுத்தச் செய்தார். இதன் மூலம் அவர் தமிழை அவமதித்திருக்கிறார். இதுதான், அவரைப் போன்ற கன்னடர்களின் மொழி வெறி... மொழி வன்மம். அவரைப் போன்ற வர்களின் மூளை அழுக்கை, எத்தனை சோப்புப் போட்டுக் கழுவினாலும் சுத்தப்படுத்த முடியாது.

Advertisment

ஏனென்றால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்'’என்று உலக ஒருமையை, அங்கே எந்த ஒரு பெருதன்மைப் புலவனும் பாடவில்லை. ’"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்று கூறி. அவர்களைப் பதப்படுத்த அங்கே ஒரு வள்ளுவன் பிறக்கவில்லை. அதனால், ஈஸ்வரப்பா என்கிற மொழிவெறி மனிதர், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்தச்சொல்லி, தன் பண்பாட்டைக் காட்டியிருக்கிறார். இப்படி தமிழ் மீது வன்மத்தைக் கொட்டினால்தான், அங்கே கன்னடர்களின் மொழிவெறியைத் தூண்டி, ஓட்டுவேட்டை நடத்த முடியும் என்பது அவருடைய ஈன புத்தி. எனவே அந்த ஆள் அப்படி நடந்துகொண்டதில் நமக்குப் பெரிய வியப்பு எதுவும் இல்லை.

ஆனால்- அங்கே அந்த விழாவில் குட்டிச்சுவர்போல் நின்றுகொண்டிருந்த தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர்தானே? கர்நாட கத்துக்குச் செல்லும் வரை, அவர் தமிழ்நாட் டின் விளைச்சலைத் தின்று, தமிழ்க் காற்றை சுவாசித்து வளர்ந்தவர்தானே? அப்படிப் பட்டவருக்கு ஏன் சுரணை வரவில்லை? அவர் ரத்தம் ஏன் துடிக்கவில்லை?.

’வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப் படாமலும்,, தேடவேண்டிய பெருமையைத் தேடாமலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும். பாதுகாக்க வேண்டிய பெரு மைகளைப் பாதுகாக்காமலும் வாய்பொத்தி நின்றிருக்கிறார். இதைத்தான் வள்ளுவர். நாம் முன்னமேயே குறிப்பிட்டபடி அறிவற்ற செயல் என்று கண்டிக்கிறார். நக்கீரனும் வன்மையாகக் கண்டிக்கிறது!

-ஆசிரியர்