கட்சிக்குள் உள்ளடி! சாதிக்குள் நெருக்கம்! -சேலம் மாநகராட்சி பரபர...

ss

sslb

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாங்கனிக்குப் பேர்போன சேலத்தில் கழக உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் கட்சிகளைக் கடந்து சாதி பாசத்தில் கட்டிப்பிடித்துக் கொள்வதும், ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வதுமாக களத் தைக் களேபரமாக்கி விளையாடி வருகிறார்கள். அதேநேரம், உள்ளடி வேலைகளும் சைலன்ட்டாக அரங்கேறி வருகின்றன.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பன்முனைப் போட்டி நிலவினாலும் ஆளும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே நேரடிப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

sa

மாஜி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மண் என்பதால், எப்பாடு பட்டாவது மேயர் பதவியைப் பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ர.ர.க்கள் வேலை செய்கின்றனர். எடப்பாடியோ, எப்போதும் சென்டிமென்டாக கருதும் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பரப்புரையைத் தொடங்கி விட்டார்.

தி.மு.க. தரப்பில் சேலம் மத்திய மா.செ. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொறுப்பு அமைச்சர் கே.என

sslb

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாங்கனிக்குப் பேர்போன சேலத்தில் கழக உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் கட்சிகளைக் கடந்து சாதி பாசத்தில் கட்டிப்பிடித்துக் கொள்வதும், ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வதுமாக களத் தைக் களேபரமாக்கி விளையாடி வருகிறார்கள். அதேநேரம், உள்ளடி வேலைகளும் சைலன்ட்டாக அரங்கேறி வருகின்றன.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பன்முனைப் போட்டி நிலவினாலும் ஆளும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே நேரடிப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

sa

மாஜி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மண் என்பதால், எப்பாடு பட்டாவது மேயர் பதவியைப் பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ர.ர.க்கள் வேலை செய்கின்றனர். எடப்பாடியோ, எப்போதும் சென்டிமென்டாக கருதும் பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பரப்புரையைத் தொடங்கி விட்டார்.

தி.மு.க. தரப்பில் சேலம் மத்திய மா.செ. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உடன்பிறப்புகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தி.மு.க. நேரடியாக 48 இடங்களில் அ.தி.மு.க. வுடன் மோதுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 12 கவுன்சிலர் சீட்டுகளை ஒதுக்கியுள் ளது தி.மு.க. அ.தி.மு.க. 60 வார்டுகளிலும் தனித்துக் களம் காண்கிறது.

தி.மு.க. மா.செ. ராஜேந் திரன் பரிந்துரைத்த பலரின் பெயர்கள் கண்டுகொள்ளப் படவில்லை என்பதும், அமைச்சர் நேருவின் கோட்டாவில் முன் னாள் மண்டலக்குழுத் தலைவர் குணசேகரன், முன்னாள் கவுன் சிலர் தெய்வலிங்கம், முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம் மற்றும் உமாராணி, ராஜ்குமார் ஆகியோர் சீட் பெற்றதும் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர்கள் ஐவரும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதர வாளர்கள் என்பதும், மா.செ. ராஜேந்திரனோடு ஒட்டுறவில் இல்லாதவர்கள் என்பதும் காரணம் என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

அ.தி.மு.க. தரப்பில் சீனியர்களுக்கே அதிகமாக சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் அதிருப்திகள் இருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

salem

இது ஒருபுறம் இருக்க, வேட்புமனு பரிசீலனையின்போது அ.தி.மு.க.வில் சில உள்ளடிகளும் நடந்தது. சேலம் மாநகராட்சி 14வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் நடேசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மெஜா ரிட்டி கிடைத்தால் மீண்டும் மண்டலக்குழுத் தலைவர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சொத்துவரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருப்பதாகக் கூறி அவருடைய மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்து விட்டார்.

நடேசன் போட்டியிடுவதை, அஸ்தம்பட்டி அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் சரவணன் விரும்பவில்லை என்றும், அதனால் அவர் தி.மு.க. பிரமுகர்களுடன் அண்டர் டீலிங் செய்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இது பற்றிப் புலம்பும் நடேசனோ ''என் பெயரில் எந்த வரி பாக்கியும் இல்லை. என் மனைவி பேரில் மட்டும்தான் வரி பாக்கி உள்ளது. கடைசி நேரத்தில் என் வேட்பு மனுவை நிராகரித்ததில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளது'' என்கிறார். இதையடுத்து, அந்த வார்டில் நடேசனுக்கு மாற்றாக அவருடைய அண்ணன் பழனிசாமி களமிறக்கப்பட்டு உள்ளார்.

salem

52-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளரான ஏ.இ.சுகுமார், மேயர் வேட்பாளராகவும் களமிறக்கப் பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். 1972-ல் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே உறுப்பினர். ஜெ., ஜா., அணிகள் பிரிந்தபோதும் கூட, ஜெ. அணியிலேயே நீடித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடியுடன் நல்ல நெருக்கத்தில் இருக் கிறார். பசையுள்ள பிரமுகரும் கூட. இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனையின் போது வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை என்றும், சொந்த ஊரான தாசநாயக்கன்பட்டி ஊராட்சிப் பட்டியலில் இருந்து மாநகராட்சி எல்லைக்குள் பெயரை மாற்றவில்லை என்றும் கூறி, நாமினேஷனுக்கு கடைசி நாளன்று அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

அதே 52-வது வார்டில் அதே பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த அசோகன் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு மேயர் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில், சுகுமாரின் மனு நிராகரிக்கப்பட்டதால், தற்போது அவர் தரப்பு சற்று ஆறுதல் அடைந்துள்ளது. எனினும், சுகுமார் தனது மகள் ரம்யாவை 52வது வார்டில் வேட்பாளராக இறுதிக்கட்டத்தில் களமிறக்கியுள்ளார். இப்படி கடைசி வரை பல ட்விஸ்ட்கள் இங்கே அரங்கேறியது. சுகுமார் விவகாரத்தில் அசட்டையாக இருந்துவிட்டீர்களே என்று எடப்பாடி, எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியத்திடம் தனது அதிருப்தியைக் காட்டியிருக்கிறார்.

தேர்தல் அதிகாரிகள் தரப்போ, "சுகுமார் தாக்கல் செய்த படிவத்தில் உள்ள முகவரியில் சென்று பார்த்தோம், வீடு பூட்டப்பட்டு இருந்தது'' என்றது புன்கையோடு.

நடேசன், சுகுமார் விவகாரங்களில் அடுத் தடுத்து டிவிஸ்ட்கள் சுழன்றடித்தது ஒருபுறம் இருக்க, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் மட்டுமே 13 பேர் சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.வின் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவரோ, "எந்த வேட் பாளரை யார் சந்தித்தாலும், "நாமெல்லாம் ஒரே சாதி. யாரு ஜெயித்தாலும் சந்தோஷம்தான்' என கட்டிப்பிடித்து -ஜாலியும் கேலியுமாக ஒருவரை ஒருவர் தமாஷ் செய்து வருவதை இரு கட்சியிலுமே பார்க்க முடிகிறது''’ என் கிறார்.

இதுபோன்ற கலாட்டக்களால் சுவாரஸ்யமாகக் களைகட்டிக் கொண் டிருக்கிறது சேலம்.

nkn120222
இதையும் படியுங்கள்
Subscribe