உள்ளடியில் தி.மு.க. ஜகா வாங்கும் அ.தி.மு.க. கும்பகோணம் முதல் மேயர் யார்?

ff

48 வார்டுகளை உள்ளடக்கிய கும்பகோணம் "மாநகராட்சி' முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க.வில் சொல்லிக்கொள் ளும்படியான வேட்பாளர்கள் களத்தில் இல்லை. மற்ற கட்சிகளுக்கும் போதுமான செல்வாக்கு இல்லை. பெரும்பான்மையான வார்டுகளை தி.மு.க.வே கைப்பற்றும் என்பதால் தி.மு.க.விற்குள் முதல் மேயர் யார் என்கிற போட்டா போட்டி நிலவுகிறது.

இதுவரை நான்கு தேர்தல்களைச் சந்தித்திருக்கும் கும்பகோணம் நக ராட்சியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா இரண்டு முறை கைப்பற்றியிருந்தன. தி.மு.க.வில் நகரச் செயலாளர் தமிழழகனும், அவரது அம்மா மதுரம் பத்மநாபனுமே சேர்மனாக இருந்துள்ளனர். மைனாரிட்டி சமூகத்தவர்களை அதிகம் கொண்ட கும்பகோணம் நகரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் தமிழழக னின் குடும்பம் நற்பெயரோடு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு உரிய எவ்வித பந்தாவும் இல்லாமல், அனை வரிடமும் சகஜமாக பழகுவது தமிழழகனை மேயராக்கி விடும் என்கிறார்கள் நகரவாசிகள்.

gg

துணைமேயர் கனவோடு குட்டி தெட்சிணாமூர்த்தியும் பிரச்சாரத்தில் இருக்கிறா

48 வார்டுகளை உள்ளடக்கிய கும்பகோணம் "மாநகராட்சி' முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க.வில் சொல்லிக்கொள் ளும்படியான வேட்பாளர்கள் களத்தில் இல்லை. மற்ற கட்சிகளுக்கும் போதுமான செல்வாக்கு இல்லை. பெரும்பான்மையான வார்டுகளை தி.மு.க.வே கைப்பற்றும் என்பதால் தி.மு.க.விற்குள் முதல் மேயர் யார் என்கிற போட்டா போட்டி நிலவுகிறது.

இதுவரை நான்கு தேர்தல்களைச் சந்தித்திருக்கும் கும்பகோணம் நக ராட்சியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா இரண்டு முறை கைப்பற்றியிருந்தன. தி.மு.க.வில் நகரச் செயலாளர் தமிழழகனும், அவரது அம்மா மதுரம் பத்மநாபனுமே சேர்மனாக இருந்துள்ளனர். மைனாரிட்டி சமூகத்தவர்களை அதிகம் கொண்ட கும்பகோணம் நகரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் தமிழழக னின் குடும்பம் நற்பெயரோடு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு உரிய எவ்வித பந்தாவும் இல்லாமல், அனை வரிடமும் சகஜமாக பழகுவது தமிழழகனை மேயராக்கி விடும் என்கிறார்கள் நகரவாசிகள்.

gg

துணைமேயர் கனவோடு குட்டி தெட்சிணாமூர்த்தியும் பிரச்சாரத்தில் இருக்கிறார். இவர்களுக்கு வேட்டுவைக்கும் விதமாக கும்பகோணம் ஒன்றிய சேர்மன் காயத்திரியின் கணவரும், தெற்கு ஒன்றியச் செயலாளருமான அசோக் குமார், மாநகர மேயர் கனவோடு போட்டியிடுவது கழகத்தில் முணுமுணுப்பை உண்டாக்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் முக்கிய தலைகள் போட்டியிடவில்லை. முன்னாள் நகரச் செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வும், சிட்டிங் நகரச் செய ளாளருமான ராம.ராமநாதன், பெருநகர அம்மா பேரவை யைச் சேர்ந்த அயூப்கான் என அனைவரும் மேயராக முடியாது என்பதாலேயே ஜகா வாங்கிக்கொண்டு சக கட்சிக்காரர்களை இறக்கி விட்டுள்ளனர். முன்னாள் கவுன்சிலராக இருந்த ரமேஷ் 21 வயதான தன் மகள் மோனிகாவை போட்டியிட வைத்துள்ளார்.

நம்மிடம் பேசிய மூத்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், "ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க.வை வளர்த்த தலைவர்களில் கோ.சி.மணியும் ஒருவர். கும்பகோணம் நகரத்தை தி.மு.க. கோட்டையாக மாற்றிவைத்தவர். அவர் முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாதிப் பாசத்திற்கு முக்கியத்துவம் அளித்திடாமலும், தி.மு.க.வை கட்டுடை யாமலும் வைத்திருந்தார். தற்போது மா.செ.வாக இருக்கும், எஸ்.கல்யாணசுந்தரமும், அவரது ஆதரவாளர்களும் குட்டி ராஜ்ஜியமே நடத்துகின்றனர். கும்பகோணம் மாநகராட்சி யானதும், அதைக் கைப்பற்றிட குறுக்குவழியில் உள்ளேவந்து குளறுபடிகளை உண்டாக்கு கின்றனர்''’என்றார்.

கும்பகோணம் நகர தி.மு.க.வினர் சிலரிடம் விசாரித்தோம். ”"2001 உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மைக்கு ஒருவர் தேவைப்பட்டதால், லட்சக்கணக்கில் பணம்கொடுத்து தி.மு.க.விற்கு கொண்டுவந்த அ.தி.மு.க. கவுன்சிலர்தான் அசோக்குமார். அசோக்குமாரை தி.மு.க.விற்கு கொண்டுவந்த வர்களில் ஒருவரான கும்ப கோணம் ஒன்றியச் செயலாளர் உள்ளூர் கணேசன்தான் தற்போது கும்பகோணம் யூனியன் வைஸ் சேர்மனாக இருக்கிறார். அவர் மைனாரிட்டி சமூகத்தவர் என்பதனாலேயே, அ.தி.மு.க. கவுன்சிலர்களையும், மா.செ. கல்யாணசுந்தரத்தையும் கையில் போட்டுக்கொண்டு முடக்கிவிட்டார் அசோக்குமார்.

ff

ஒற்றுமையாக இருந்த தி.மு.க.வை சாதிச் சங்கம்போல மாற்றியதும், எல்லோரிடமும் சகஜமாக இருந்த மா.செ.வை சாதியரீதியாக மாற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல குளறுபடிகளை உண்டாக்குவதே கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரான அசோக்குமார்தான். அவரது மனைவி காயத்திரி அசோக்குமார்தான் கும்பகோணம் யூனியன் சேர்மனா இருக்காங்க. தாராசுரம் பேரூராட்சியில் அவங்க வீடு இருக்கு, கும்பகோணம் ஒன்றியத்தைக் கைப்பற்ற பேரூரில் இருந்த ஓட்டை ஒன்றியத்திற்கு மாற்றி மனைவியை சேர்ம னாக்கினார். நகராட்சி மாநகராட்சியானதும், மேயர் பதவியைக் குறிவைத்து மாநகருக்குள் வாக்குகளை மாற்றி சீட் வாங்கி போட்டியிடுகிறார்'' என்றார்கள்.

இன்னும் சிலர், அ.தி.மு.க.வில் இருந்து வந்ததுமே, அசோக்குமாரின் விருப்பத்திற்கு ஒன்றியத்தைப் பிரித்து ஒ.செ. ஆக்கினார் மா.செ. சேர்மன் ஆனதுமே ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர் சேர்மனாக இருந்தார் என்பதால் யாகம் நடத்தியதோடு, அந்த அறையையே பயன்படுத்தாமல் இன்றுவரை வேறு அறையைப் பயன்படுத்திவருகிறார் காயத்ரி அசோக்குமார். கொரோனா முதல் அலையின்போது காயத்ரி டுமாங்கோ என்கிற பெயரில் இல்லாத ஒரு புதிய கம்பெனி பெயரைப் பயன்படுத்தி கொரோ னா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் 90 லட்சத்தை ஊழல் செய்தார். இதனைக் கேட்டு மாநகரமே சிரித்தது,

அசோக்குமார் தற்போது மாநகராட்சியைக் குறிவைத்து 31-வது வார்டுக்கு வந்து போட்டியிடுகிறார். நாங்க என்ன அ.தி.மு.க.விலா இருக்கோம் திடீர் எம்.எல்.ஏ. ஆவதற்கு? தி.மு.க.வில் இருபது ஆண்டுகள் கடினமா உழைச்சாதான் வார்டு கவுன்சிலருக்கே வரமுடியும். இதுல இதையும் பறிச்சிட்டா நாங்க என்ன செய்ய முடியும்?''’என்கிறார்கள் ஆதங்கமாக.

கும்பகோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அசோக்குமாரிடம் இதுபற்றி கேட்டபோது, “"நானா மாநகருக்குள்ள போக லைங்க. எனக்கு தாராசுரம் பேரூராட்சியில ஓட்டு இருக்கு, மாநகரத்துல வர்றதால போட்டியிடுறேன், என்னை கண்டு ஏன் பயப்படுறாங்க. யார்தான் சாதி அரசியல், குடும்ப அரசியல் செய்யல?''’என்கிறார் கூலாக.

மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரத்திடமே இதுகுறித்து கேட்டோம். "ஒன்றியச் செயலாளர் மாநகர மேயருக்குப் போட்டியிடக்கூடாதா? அவரது வீடு மாநகரத்துல இப்ப வந்துவிட்டது''’என்கிறார்.

nkn050222
இதையும் படியுங்கள்
Subscribe