தூர்வாராத குளத்துக்கு தூர் வாரியதாகக்கூறி ஊராட்சி தலைவரும், அதிகாரிகளும் பல லட்சங்களைச் சுருட்டியதாக ஆதாரத்துடன் மக்கள் குற்றஞ்சாட்ட, விசாரணையில் இறங்கினோம்.
குமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட குதிரைபந்திவிளையில் உள்ளது ஊத்துக்குழி குளம். வானம் பார்த்த பூமியாகக் காய்ந்த நிலையில் காணப்படும் இந்த குளம் தான் ரூ.11,58,000 நிதியில் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட குளம் என்று ஊராட்சி நிர்வாகத்தால் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அருள்மோகன், "மன்னர் காலத்தில் தோண் டப்பட்ட இந்த குளத்தை குளிப்பதற்கும், சலவைத் தொழிலாளர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் வண்ணார்குளமென்று அழைக்கப்பட்ட குளம் தான் நாளடைவில் ஊத்துக்குழி குளமாக மாறியது. 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த குளம் தற்போது 2 ஏக்கருக்குள் சுருங்கிக்கிடக்கிறது. இந்த குளத்தை மாடத்தட்டிவிளை, குதிரைபந்தி விளை, மணக்கரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்திவருகிறார்கள்.
தூர்வாராத குளத்துக்கு தூர் வாரியதாகக்கூறி ஊராட்சி தலைவரும், அதிகாரிகளும் பல லட்சங்களைச் சுருட்டியதாக ஆதாரத்துடன் மக்கள் குற்றஞ்சாட்ட, விசாரணையில் இறங்கினோம்.
குமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட குதிரைபந்திவிளையில் உள்ளது ஊத்துக்குழி குளம். வானம் பார்த்த பூமியாகக் காய்ந்த நிலையில் காணப்படும் இந்த குளம் தான் ரூ.11,58,000 நிதியில் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட குளம் என்று ஊராட்சி நிர்வாகத்தால் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அருள்மோகன், "மன்னர் காலத்தில் தோண் டப்பட்ட இந்த குளத்தை குளிப்பதற்கும், சலவைத் தொழிலாளர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் வண்ணார்குளமென்று அழைக்கப்பட்ட குளம் தான் நாளடைவில் ஊத்துக்குழி குளமாக மாறியது. 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த குளம் தற்போது 2 ஏக்கருக்குள் சுருங்கிக்கிடக்கிறது. இந்த குளத்தை மாடத்தட்டிவிளை, குதிரைபந்தி விளை, மணக்கரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்திவருகிறார்கள். 1959-ல் காமராஜர் காலத்தில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினார்கள். குளத்தின் கரையில் குடிநீர் கிணறு ஒன்றையும் தோண்டினார்கள். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1996-ல் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தூர்வாரப்பட்டது. அப்போது, குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு வசதியாக படித்துறையும் கட்டப்பட்டது. அதன்பிறகு தற்போதுவரை தூர்வாரப் படாத குளத்தைத்தான் 2023-24 ல் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் மரியபால்ராஜும், து.தலைவர் ராஜனும் கூறி வந்தனர்'' என்றார்.
அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், "கடந்த சில மாதங்களுக்குமுன் குளத்தில் நீர் நிரம்பியிருந்த நிலையில், நூறு நாள் வேலைவாய்ப்புத் தொழிலாளர்களைக் கொண்டு குளக்கரையிலிருந்த புற்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். நாங்களும், புற்களை சுத்தம் செய்வதாக நினைத்தோம். இந்நிலையில் தான், கடந்த ஏப்ரல் மாதத்தில் இரவோடு இரவாக, தூர்வாரப்பட்ட குளமென்றும், அதற்காக ஒதுக்கிய நிதி, வேலை நாட்களையெல்லாம் குறிப்பிட்டு கல்வெட்டே வைத்துவிட்டார்கள். குளத்துக்கு குளிக்கவந்தபோது அதைப் பார்த்த மக்கள் குழப்பமாகி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டபோது, 'குளத்தை தூர்வாரியபோது நீங்க யாரும் ஊரிலில்லையா? வேலை முடிஞ்சபிறகு கேட்கறீங்களே? கலெக்டர்கிட்ட கேளுங்க' என்று அதிர்ச்சியளித்தார்.
இக்குளத்தில் தூர்வாரப்பட்டதா? என்பதை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வியெழுப்பிய வழக் கறிஞர் கிரினிவாச பிரசாத் நம்மிடம், "குளத்தை தூர்வார அனுமதித்த அதிகாரி யாரென்றும், வேலை முடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கை, ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட 12 விவரங் களை நான் கேட்ட அடுத்த ஐந்தாவது நாளில் சம்பந்தப்பட்ட தக்கலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர், ஜே.சி.பி. மூலமாக குளக்கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு அவசர கோலத்தில் தூர்வாரும் பணியைத் தொடங்கினார்கள். இதைப் பார்த்து, "ஏற்கெனவே தூர் வாரியாச்சுன்னு கல்வெட்டு வச்சுட்டு திரும்ப எதற்கு தூர் வாரணும்?' எனக்கேட்டு தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து கல்வெட்டில் குறிப்பிட்ட வேலை முடிந்த தேதியை அழித்துவிட்டனர். இப்படி மக்களையெல்லாம் முட்டாளாக்க நினைத் தார்கள்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகேட்டதால் ஆடிப்போன ஊராட்சி நிர்வாகம், ஊத்துக்குழி குளத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில், கடப்பாண்டி குளத்தில் தூர்வாரியதாக இன்னொரு பொய்யைச் சொன்னார்கள். அதெப்படி ஒன்றுக்கு ஒதுக்கிய நிதியை இன்னொன்றுக்குப் பயன்படுத்துவது? அப்படியானால் கடப்பாண்டி குளத்துக்கான நிதியிலும் கையாடல் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
ஆக, தூர்வாரும் பணியைச் செய்யாமல், போலி ஆவணங்களின் மூலமாக 11,58,000 ரூபாயை மோசடி செய்திருப்பது தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து நுள்ளிவிளை ஊராட்சி மன்றத் தலைவர் மரிய பால்ராஜிடம் கேட்டபோது, "என்னுடைய ஊராட்சியில் திட்டத்துக்கான மதிப்பீடு பதாகையை முன்கூட்டியே வைத்தபிறகே பணிகளைத் தொடங்குவேன். ஊத்துக்குழி குளத்தை தூர்வாருமுன்பே கல்வெட்டை வைத்துவிட்டேன். அப்படித் தான் இந்த குளத்தையும் 100 நாள் வேலையாட்களை கொண்டு தூர்வாரினோம். வேலையாட்களுக்கான சம்பளத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் அரசே செலுத்துகிறது. யாரும் ஏமாற்றி சம்பளம் வாங்க முடியாது. அதற்கான ஆப் மூலமாக அதிகாரிகள் கண்காணித்த படிதான் இருக்கிறார்கள். ஊத்துக்குழி குளத்துக்கான பணி முழுமையாக முடிவடைந்து அதற்கான அறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். குளத்தை மேலும் ஆழப்படுத்த மாடத்தட்டுவிளை மக்கள் முயன்றபோது, குதிரைபந்திவிளை மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அவர் களுக்கிடைப்பட்ட பிரச்சனையில் ஊராட்சி நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் பொய்யாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல் அரசு நிதியை கையாடலெல்லாம் செய்ய முடியாது, செய்யவும் இல்லை'' என்று அடித்துக் கூறுகிறார்.
ஊராட்சிமன்றத் தலைவர் சொல்வதில் எந்தளவு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை. தற்போது இந்த குளம் தொடர்பான புகாரில், நுள்ளிவிளை ஊராட்சியும், தக்கலை ஊராட்சி ஒன்றியமும் விஜிலென்ஸ் வளையத்தில் உள்ளது.