செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது அனகாபுத்தூர். 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2015 சென்னை வெள்ளத்தின்போது அடையாறு ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் கரைபுரண்டோடி யது. இந்நிலையில், அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றோர மக்களைக் காலிசெய்யுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

cc

"நாங்க 45 வருஷத்திற்கு மேலாக, மூன்று தலைமுறைகளாக இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமல் இந்த 2015க்கு பிறகு தான் வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது அரசு. எங்கள் குடியிருப்புகள் ஆற்றில்கூட இல்லை. ஆனால், எங்களை இங்கிருந்து வெளி யேறுமாறு அரசு சொல்கிறது. கடந்த எட்டு வருடமாக பொதுப்பணித் துறை அதிகாரி கள், திடீர் திடீரென ஜே.சி.பி. யுடன் வந்து, "ஒரு வாரத்தில் வீட்டைக் காலி செய்யாவிட் டால் வீட்டை இடித்துவிடு வோம். நீங்கள்தான் நஷ்டஈடு தர வேண்டும்' என மிரட்டு கிறார்கள். இதற்கெதிராகப் பல்வேறு வகையில் போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை களை எந்தக் கட்சியும் கண்டு கொள்ளவில்லை. பத்திரிகை யாவது இதனை முன்னெடுத்து எங்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும். தற்போது நீதிமன்றத்தில், நாங்கள் ஆற்றங்கரையில் இல்லை என நிரூபித்துள்ளோம். எங்கள் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு எங்களால் அலைய முடியாது. எங்களின் 686 குடியிருப்புகளை காலி செய்துவிட்டு இங்கு பூங்கா அமைக்கப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. எங்களை வெளியேற்றிவிட்டு இங்கு ஏன் அரசுப் பூங்கா?''’என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சந்தியா எனும் பள்ளி மாணவி, "நான் பிறந்ததிலிருந்தே இங்குதான் இருக்கேன். என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாரும் இங்கதான் இருக்காங்க. 2015ல் வெள்ளம் வந்த பிறகு இங்கிருந்த வீடுகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள். நாங்க இங்குள்ள பள்ளியில்தான் படித்துவருகிறோம். இங்கிருந்து வெளியே சென்றுவிட்டால் பள்ளிக்கு செல்வது சிரமம். முதலமைச்சர் எங்களை வாழவைக்க வேண்டும்'' என்றார்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் பா.மோ. சுபாஷை சந்தித்து பேசியபோது, "அனகா புத்தூர் பகுதியில் அடை யாறு ஆற்றுக்கு அருகே சுமார் 110 குடும்பத்தினர் குடிசைகளில் வசித்துவரு கின்றனர். தற்போது மாவட்ட நிர்வாகம், அடையாறு ஆற்றை விரிவுபடுத்த வேண்டும் என சர்வே செய்துள்ளனர். அந்தச் சர்வேயில் இந்த குடிசைவாசிகளை ஆக்கிரமிப்பாளர்களென்று தவறாகக் காட்டியுள்ளனர். இங்குள்ள வீடுகளில், ஒரு வீடு குடிசையாகவும், ஒரு வீடு பட்டாவாகவும் இருக்கிறது. அரசோ, குடிசை வீட்டை அகற்றவும், பட்டா வீட்டை காக்கவும் முயற்சியெடுக்கிறது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தப் பகுதியில் ஆற்றை மீண்டும் சர்வே செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

cc

கடந்த முறை நடந்த சர்வேயில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. ஏ.இ.சத்தீஷ்குமார் என்பவர், இந்த குடிசைகளை அகற்றியாக வேண்டும் என சர்வே செய்துள்ளார். இதனைத் தடுக்கும் வகையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இந்த மக்களை வெளியேற்றுவதற்காகவே இந்த நடவடிக்கைகள்'' என்றார்.

Advertisment

cc

அப்பகுதி மக்கள், “"பல ஏக்கர்களை ஆக்கிரமித்து தனியார் கம்பனிகள், அடுக்குமாடிக் குடி யிருப்புகள் கட்டப்பட் டுள்ளன. ஆனால், அரசின் கண்களுக்கு இந்த ஏழை மக்கள் மட்டுமே தெரிகிறார்கள். 1998-ல் இறையன்பு சார் போட்ட அளவைக்கல்லிலிருந்து ஆற்றை அளந்து, எங்களுக்கு பலமான தடுப்புச் சுவரை போட்டுக் கொடுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை. சர்வே தொடர்பாக எங்களை விசாரிக்க தாசில்தார் அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். எட்டு வருஷமாக அளந்துகொண்டே இருக்கிறார் கள். கடைசியாக இப்போது அளந்துவிட்டு, ஏழு நாட்களில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றிருக் கிறார்கள். ஆற்றை அளக்கச் சொன்னால் குடியிருப்பு களை அளந்து ஆக்கிர மிப்பு என்கிறார்கள். சதீஷ்குமார் எனும் அதிகாரி சர்வே கல் நட வரும்போது, "இதெல்லாம் இடிக்கப்போகிற இடம். இங்கு வந்து 20 பேரைக் கொண்டு மிரட்டுகிறீர்களா?'’ என சர்வாதிகாரி போல் பேசுகிறார். இந்த ஆற்றின் மறு கரை யிலுள்ள கம்பெனிக்கு அரசு போட்டுக்கொடுத்த மதில் சுவர் இருக்கிறது. 5000 வாக்குகள் உள்ள இப்பகுதியில் தேர்தலின்போது வாக்குகளை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். வேறெதுவும் நடப்பதில்லை. அதனால், நக்கீரன் பத்திரிகையின் மூலமாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையைக் கொண்டுசெல்ல வேண்டும்'' என்றனர்.

ஒரு மூதாட்டி, “"என் சக்திக்கு உழைத்து வீடெல்லாம் கட்டிவிட்டேன். இப்போ திடீரென வந்து காலிசெய்யச் சொன்னால் எங்கே செல்வது? புல்டோசர் கொண்டுவந்து இரவோடு இரவாக எங்களை அள்ளிச் சென்றுவிடுங்கள். முதலமைச்சரிடம், எங்கள் இடத்தை எங்களுக்கு மீண்டும் கொடுக்கவேண்டும்’ எனத் தாழ்மையுடன் கேட்கிறேன்''’எனக் கண்ணீர் விட்டார். ஆக்கிரமிப்பு எனக்கூறி ஏழை மக்களைக் குறிவைத்து வெளி யேற்றுவதா?