அம்பாசமுத்திரத்தில், பற்களைப் பிடுங்கி விசாரித்ததாக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த விவகாரத்தில் பல்வீர் சிங், நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன், ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி, அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், 'ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு, கடந்த 4ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவரும், டி.ஜி.பி.க்களில் ஒருவருமான ஆபாஷ் குமார்.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், “அத்தனைக்கும் காரணம் தமிழ்நாடு உளவுத்துறையில் கூடுதல் தலைமை இயக்குனராக இருக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் தானென்றும், அண்ணாமலை கிளப்பிய பாஸ்போர்ட் சரிபார்ப்பு விவகாரம், கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு
அம்பாசமுத்திரத்தில், பற்களைப் பிடுங்கி விசாரித்ததாக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த விவகாரத்தில் பல்வீர் சிங், நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணன், ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி, அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், 'ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு, கடந்த 4ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவரும், டி.ஜி.பி.க்களில் ஒருவருமான ஆபாஷ் குமார்.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், “அத்தனைக்கும் காரணம் தமிழ்நாடு உளவுத்துறையில் கூடுதல் தலைமை இயக்குனராக இருக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் தானென்றும், அண்ணாமலை கிளப்பிய பாஸ்போர்ட் சரிபார்ப்பு விவகாரம், கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு போன்ற வற்றில் கோட்டைவிட்டது போலவே இப்போதும் நடந்திருக்கிறது என்றும் சில குரல்கள் காவல்துறை வட்டாரத்திலிருந்தே கிளம்பின. அதனைத் தொடர்ந்து, அம்பை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பாசமுத்திரம் ஸ்பெசல் டீம் எஸ்.ஐ. சக்தி மற்றும் காவலர்கள் மணிகண் டன், சந்தானகுமார் ஆகியோ ரும் ஒரே நாளில் காத்திருப் போர் பட்டியலுக்கு தூக்கி யடிக்கப்பட்டனர். இந்த விவகாரமும் காவல்துறை வட்டாரங்களில் புகைச்சலைக் கிளப்ப, ‘மத்திய மண்டலத் துக்கு ஒரு நீதி, தென் மண்டலத்துக்கு ஒரு நீதியா?’ என வாட்ஸ்அப் மெசேஜை சுற்றவிடுகிறார்கள் காவல்துறையினர்.
“என்னதான் நடக்கிறது?’ என்று மத்திய மண்டல உளவுப் பிரிவு சீனியர் ஒருவரிடம் விசாரித்ததில், "அவங்க கேக்குறதுல தப்பு ஒண்ணும் இல்லை யே?'' என எடுத்த எடுப்பிலேயே கொக்கி போட்டவர், "மனிதன் வாழ்வதற்கு நரம்புகளின் பணி முக்கியமானது. ஒவ் வொரு தகவலும் நரம்பின் மூலமாகவே மூளைக்கு கடத்தப்பட்டு, அந்த மூளையின் உத்தரவுப்படிதான் நம் செயல்பாடு அமைகிறது. அது போல, அது நாடாக இருந்தாலும் சரி, மாநிலமாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக ஊடுருவி தகவல்களை சேகரித்து தலை மைக்கு அனுப்புவதுதான் உளவுப்பிரிவின் தலையாய பணி. கண்ணில் பார்ப்பதை மட்டுமே நம்பாமல், ரகசிய விசாரணை மேற்கொண்டு உண்மையான தகவல்களை மட்டுமே அவர்கள் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனால்தான் அந்தப் பிரிவானது ‘நுண்ணறி வுப் பிரிவு’ என அழைக்கப்படுகிறது. தவிர, தங்களின் விருப்பு வெறுப்புகளை யெல்லாம் கடந்து தங்களுடைய தலைமைக் கும், ஆட்சியாளர்களுக்கும் விசுவாச மாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. ஆனால், ‘உண்மையில் அப்படி இருக் கிறதா?’ என்ற கேள்வி இப்போது எழுகிறது.
திருச்சி சிவா -அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் பிரச்சினையை எடுத் துக்கொள்ளுங்கள். திருச்சி சிவாவின் வீட்டருகே அமைந்துள்ள நவீன இறகுப் பந்து அரங்கத்தின் கல்வெட்டு மற்றும் பதாகைகளில் சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்ற சர்ச்சை முதல்நாளே எழுகிறது. அது உளவுத்துறைக்கு தெரியாது என்றால் அவர்கள் பணியை சரியாகச் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். ஒருவேளை, ரகசிய விசாரணை மூலம் ‘இன்புட்’ வாங்கியிருந்தால், அதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருப்பார்கள். அவ்வாறு அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால், கருப்புக்கொடி சம்பவத்தையும், சிவா வீடு தாக்கப்பட்டதையும் தடுத்திருக்க முடியும்.
கருப்புக் கொடி காட் டியவர்களை செசன்ஸ் நீதி மன்றக் காவல் நிலையத்தில் வைத்திருப்பதை அறிந்து, நேரு ஆதரவாளர் கள் அங்கு செல்லவிருக்கும் விசயத்தைக் கூடவா தெரிந்துகொள்ள முடியவில்லை? சரி, அதையும் விடுங்கள். அந்த காவல் நிலையத் திற்குள் நேருவின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த தள்ளு முள்ளுவின் சி.சி.டி.வி. காட்சிகள் எப்படி வெளியில் வந்தது? இதெல்லாம் உளவுத்துறை கோளாறுகள் என்று விசயம் தெரிந்த அனைவரும் கூறுவார்கள்.
மேலும், அந்த சி.சி.டி.வி. ‘ஃபுட்டேஜ் வெளியானதற்கு முதல்வரின் ஊரைச் சேர்ந்த ஜெயமான ஒரு உளவுத்துறை ஏட்டும், ஆய்வாளரும்தான் காரணம் என காவல்துறைக்கே தகவல் தெரிந்த பின்னும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அப்படியென்றால், நுண்ணறிவுப் பிரிவின் உயரதிகாரிக்கும் அவர்களுக்குமான தொடர்பு என்ன? இதுகுறித்து அந்த நுண்ணறிவுப்பிரிவு ஏ.சி. தங்கள் தலைமையகத்துக்கு உண்மையான தகவல்களை அனுப்பியிருப்பாரென எப்படி நம்புவது? அதேபோல, கடந்த மாதம் 18ஆம் தேதியன்று திருச்சி சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு விரிவான அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், உள்ள விசயங்கள்தான் உண்மையாக இருக்கும் என எப்படி நம்பலாம்?
எனவேதான், ‘"தென் மண்டலத்திற்கு ஒரு நீதி, மத்திய மண்டலத்திற்கு ஒரு நீதியா?' எனக் கேள்வி கேட்கிறார்கள். நிர்வாகத்தின் அஸ்தி வாரமாக இருக்கும் உளவுத்துறையில் முதல்வர் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால் கட்டடமே ஆடினாலும் ஆச்சரியமில்லை''’என்றார் அவர்.
ஏற்கெனவே, அரசியலிலும் அதிகாரத்திலும் உள்ள சில முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளோடு சேர்ந்து அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் சதித்திட்டம் தீட்டுவதாக கிசுகிசுப்புகள் எழும் நிலையில், உளவுத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். செய்வாரா முதல்வர்?