Advertisment

அறநிலையத்துறையின் ஆரம்ப அதிரடி! அடுத்து... அடுத்து... தொடருமா?

hindukovils

மிழ்நாட்டில் தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்தி காலூன்றுவதற்கு, தி.மு.க.வை இந்துக் களுக்கு விரோதமான கட்சி என்ற முத்திரையைக் குத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது பா.ஜ.க. அதற்கான செயல் திட்டத்தில் ஒன்றாக, இந்து அறநிலையத்துறை மீது தொடர் தாக்கு தல்களை நடத்தி, இத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி, கோவில்களைக் கைப்பற்ற வேண்டுமென்ற அஜென்டாவுடன், கார்ப்பரேட் சாமியார் ஜக்கியுடன் கைகோர்த்துக்கொண்டு பா.ஜ.க. அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

Advertisment

இந்நிலையில், தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், தொடக்கம் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துத் துறைகளிலும் அமைச்சர்கள் முழுமுனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். அதேபோல அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எடுத்த எடுப்பிலேயே, இந்து கோயில்களின் சொத்துக்கள் அனைத்தும், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அடுத்தகட்டமாக, இந்து கோவில் களுக்குச் சொந்தமான நி

மிழ்நாட்டில் தங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்தி காலூன்றுவதற்கு, தி.மு.க.வை இந்துக் களுக்கு விரோதமான கட்சி என்ற முத்திரையைக் குத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது பா.ஜ.க. அதற்கான செயல் திட்டத்தில் ஒன்றாக, இந்து அறநிலையத்துறை மீது தொடர் தாக்கு தல்களை நடத்தி, இத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி, கோவில்களைக் கைப்பற்ற வேண்டுமென்ற அஜென்டாவுடன், கார்ப்பரேட் சாமியார் ஜக்கியுடன் கைகோர்த்துக்கொண்டு பா.ஜ.க. அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

Advertisment

இந்நிலையில், தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், தொடக்கம் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துத் துறைகளிலும் அமைச்சர்கள் முழுமுனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். அதேபோல அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எடுத்த எடுப்பிலேயே, இந்து கோயில்களின் சொத்துக்கள் அனைத்தும், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அடுத்தகட்டமாக, இந்து கோவில் களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் செயலில் அதிரடியாக இறங்கினார். முதற் கட்டமாக, சென்னையில், வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்துள்ளார்.

d

வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமாக மொத்தம் 31 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் 2008 ஆம் ஆண்டிலிருந்து 5.5 ஏக்கர் நிலம், குத்தகைக்காக சமூக நலத்துறைக்கு விடப்பட்டிருந்தது. இந்த இடத்தை மகளிர் மேம்பாட்டுத் துறை கழகம், மகளிர் விடுதியாக பயன்படுத்தியது. இதற்காக, 3,450 ச.அடி இடத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த விடுதியில் ஒருவர் இறந்த சம்பவத்திலிருந்து விடுதி இயங்குவதில்லை. இதனால் அந்த இடமே குப்பையாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள காலியிடத்தை, முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆக்கிரமித்து, அதனை தென்னிந்திய திரைப்படக் குழுவுக்கு வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி, 10 ஆண்டுகளாக வருமானம் ஈட்டியுள்ளார். அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்து வதற்கு எவ்வித ஆவணங்களுமில்லாத நிலையில், உடனடியாக இடத்தைக் காலிசெய்ய வைத்துள்ளார் அற நிலைத்துறை அமைச்சர். அதேபோல, மஜித் நகரிலுள்ள வடபழனி கோவிலுக்குச் சொந்தமான பார்க்கிங்காக இருந்த 2 ஏக்கர் நிலத்தையும் மீட்டெடுத்துள்ளார்.

Advertisment

மேலும், வடபழனி கோவிலின் பக்கவாட்டிலுள்ள இடத்தையும் தி.நகர் சத்யா ஆக்கிரமித்துள்ளதை நக்கீரன் தொடர்ச்சியாக ஆதாரத்துடன் வெளியிட்டுவந்தது. வடபழனி கோவிலின் பக்கவாட்டில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட வெங்கீஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயிலைச் சுற்றி ஆயிரம் ஆண்டு பழமையான தெப்பக் குளம் ஒன்று இருந்துள்ளது. அந்த கோயிலில் பரம்பரை அறங்காவலராக பிரேம் ஆனந்த் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அவர் தனது சுயலாபத்திற்காக, தர்மகர்த்தா, இந்து அறநிலைத்துறை அதிகாரி உதவியுடன், 40.000 ச.அடி. நிலத்திலுள்ள தெப்பக்குளத்தில் மட்டும், 2.69 ஹெக்டேர் அளவுக்கு ஆக்கிரமித்து கோடிக்கணக்கில் விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக பல குற்றச் சாட்டுகள், போராட்டங்கள் வெடித்தநிலையில், 12.10.15 அன்று, அறநிலையத்துறை பிரேம் ஆனந்தை நிரந்தர பதவி நீக்கம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இக்கோவிலைப் பராமரிக்க எந்த ஆணையும் இல்லாமல், 17.10.15 அன்றிலிருந்து அவரது மனைவி சாமுண்டேஸ்வரி, பராமரித்ததோடு, தவறுகளை வெளியில் தெரியாமல் பாதுகாத்தும் வந்துள்ளார்.

வடபழனி கோயில் குழுவில் இந்த கோயிலையும் இணைத்து இந்து அற நிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சாமுண்டேஸ்வரியுடன், இந்த வடபழனி கோயில் குழுவும் இணைந்து அந்த பிரச்சனையை நீர்த்துபோகச் செய் துள்ளனர். பல கோடி மதிப்புடைய இந்த கோயில் சொத்துக்கள், பல கட்சிப் பிரமுகர் களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. வின் முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் ழ்ள் 19, ற்ள் 33/4 4,800 ச.அடி நிலத் தைத் தனது பெயரிலும், மற்ற இடங்களைத் தனது பினாமி பெயரிலும் ஆக்கிரமித்துள் ளார். அதில் ஆர்.எம்.பி. விடுதி தொடங்கி. கோவில் வரையிலும் குளமாக இருந்துள் ளது. அந்த குளத்தையே மூடி, சுற்றிலும் கடை கள், காம்ப்ளக்ஸ் எனக் கட்டப்படுள்ளது.

dd

கோவில் குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு, மின்சாரம், குடிநீர் இணைப்பு என அனைத் தும் எப்படி கொடுக்கப்பட்டது என விசா ரித்தால், அனைவருமே கொடுத்த தொகை யைப் பெற்றுக்கொண்டு கேட்குமிடத்தில் கையெழுத்திட்டு முடித்துக்கொடுத்து உடந் தையாக இருந்தது தெரியவருகிறது. அங் குள்ள பூக்கடை, கோவிலில் பணிபுரிபவர் கள், அப்பகுதி பெரியவர்கள் என அனைவ ரிடமும் இதுகுறித்து விசாரிக்கையில், இந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பது உண்மை தான் என்று கூறுகிறார்கள். வடிவேலு நகைச்சுவையில் கிணற்றைக் காணவில்லை என்பதுபோல, 30 ஆண்டுகளாக இந்த குளத் தைக் காணவில்லை. இந்த குளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை கொட்டி, குளம் இருந்த இடமே தெரியாத படி மூடி, அப்பகுதியில் தற்போது கடை களும் காம்ப்ளக்ஸ் கட்டிடமும் உயர்ந்து நிற்கிறது. பண பலம் படைத்த அரசியல்வாதி கள், தர்மகர்த்தா என அனைவரும் கூட்டுச் சேர்ந்து இதை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த ஆக்கிரமிப்புப் பிரச்சனையை கையிலெடுக்குமா இந்து அறநிலையத்துறை?

-அ.அருண்பாண்டியன்

படம்: அசோக்

nkn130621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe