மிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 603 நூலகங் களில் தமிழகத்தின் பழைய வரலாறு மற்றும் இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்களை கணக் கெடுக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கி யிருக்கிறது. இதையடுத்து, தமிழ் இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு தொடர்பான நூல்களில் இந்துத்துவா கருத்துகளை இடைச்செருகல் செய்ய வாய்ப்பு இருப்பதாக ஒரு அச்சம் பரவியுள்ளது.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் மனு அளித் திருப்பதாக தெரிவித்தார். திரா விடர் கழகம் சார்பில் கொடுக்கப் பட்டுள்ள மனு தொடர்பாக நம்மிடம் பவுன்ராஜ் பேசினார்:…

tt

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, ஜூன் மாதம் 23-ஆம் தேதி 1 லட்சத்து 50 ஆயி ரம் வரலாற்றுக் கோப்புகள் எரிக்கப் பட்டன. காந்தி படுகொலை சம் பந்தமான ஆவணங்கள் இவற்றில் முக்கியமானவை ஆகும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கோப்பு களில் அதிகமாக தூசு படிந்திருந்த தால் எரித்ததாக பா.ஜ.க.வினர் பதில் கூறினார்கள்.

Advertisment

tt

"இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது வரலாறும், இலக்கியங்களும்தான். இதை மாற்றினால்தான், நாம் நினைத்த இந்துத்துத்துவாவை நடைமுறைப் படுத்த முடியும்' என்று ஆர்.எஸ். எஸ். அமைப்பின் துணை அமைப்பு களில் ஒன்றான "அபிஸி' கூறியிருப் பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆரியர்கள் மத்திய ஆசியா வில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஆதாரத்துடன் கூடிய உண்மை. பல வரலாற்றுக் குறிப்பு களும் இதை மெய்ப் படுத்துகின்றன. இன்னும் “அறிவியல் ரீதியாக கி.மு. 2000- கி.மு. 1,500க்கு இடைப்பட்ட காலத்தில் ஆரியர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர் என்பதை ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தை சேர்ந்த மரபியல் ஆராய்ச்சியாளரான பீட்டர் அண்டர்ஹில் என்பவர் நிரூபித்திருக்கிறார். யுரேசியாவைச் சேர்ந்த 16 ஆயிரத்து 244 ஆண் மரபணு மாதிரி களைக் கொண்டு ஆய்வுசெய்து இதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த ஆய்வை சிதைக் கும் வகையில், ஆரியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியவர்கள் என்றும், அவர்களே தங்கள் அறிவாற்றலையும், கலாசாரத்தையும் பிறருக்கு கற்றுக்கொடுத்தனர் என்றும் அறிவியலையும், வரலாற்றையும் திருத்துவது இந்த திட்டத்தின் நோக்கம். அப்படி இந்திய வரலாறு திருத்தப்பட் டால், இங்குள்ள ஆயிரக்கணக்கான பண்பாடுகளும், மதம், மொழி சார்ந்த பழக்க வழக்கங்களும் புதிதாக மாறும் சூழல் ஏற்படும். இதன் விளைவாக மொழி மற்றும் இனம் சார்ந்த கொண்டாட்டங்கள் இந்துத்துவா சாயலுக்கு மாற்றப்படும். இப்போது இல்லை என்றாலும் அடுத்த தலைமுறை இவர்கள் எழுதிய இந்துத்துவா வரலாற்றைத்தான் படிக்க நேரிடும்.

Advertisment

இந்துத்துவ கொள்கையை எதிர்த்த அண்ணா, பெரியார் என அனைத்து வரலாற்று நாயகர்களும் அவர்களுடைய வரலாற்றுப் பக்கங்களில் இருந்து வேரோடு அகற்றப்படுவார்கள். காகிதத்தில் இருந்து அழிப்பது போல வரலாற்றை அழிக்கும் முயற்சி சர்வசாதாரணமாக நமக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. “கீழடியே இதன் வெளிப்பாடு தான். ஆய்வு அறிக்கையை முழுவதும் வெளியிடா மல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கும் இது தான் காரணம். இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர் கள் என்பது வெளியே தெரிந்துவிடக்கூடாது என் பதுதான் அவர்கள் கீழடி ஆய்வுகளை முழுமையாக வெளியிட மறுப்பதற்கு காரணம்'' என்றார்.

இதுகுறித்து மாவட்ட முன்னாள் தலைமை நூலகர் பாண்டுரங்கனிடம் பேசினோம்...… ""ஒரு குறிப் பிட்ட கால இடைவெளியில் பழைய புத்தகங்களை புதுப்பிப்பது காலங்காலமாக உள்ள நடைமுறை தான். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் என்ன வேண்டு மானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. பழைய இலக் கியங்களில் முழுவதுமாக கை வைக்க முடியாது. ஆனால், விளக்கவுரையில் தங்கள் தேவைக்கு தகுந் தாற்போல இந்துத்துவா கருத்துக்களை இடைச் செருகல் செய்ய வாய்ப்பிருக்கிறது'' என்றார் அவர்.

ஏதோ காகிதத்தில் தவறாக எழுதியதை அழிப்பது போல இடைச்செருகல் செய்து வரலாற்றைத் திருத்தும் காரியம் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

-அண்ணல்