கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி பக்கமுள்ள புதுக்கோட்டையை அடுத்த கூட்டாம்புளி கிராமத்தின் நவஜீவன் என்பவரது தோட்டப் பண்ணையில், அதிரடியாக நுழைந்திருக்கிறது தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான, சிவமணி தர்மராஜ் உள்ளிட்ட எஸ்.ஐ.க்களைக் கொண்ட போலீஸ்படை. அவர்களின் ரெய்டில், பிளாஸ்டிக் பைகளிலிருந்து டப்பாக்களில் மாற்றி ரீபேக் செய்யப்பட்ட, கெட்டியான ஆயில் போன்ற சரக்கு பிடிபட்டிருக்கிறது.

உடைக்கப்பட்ட ஆயில் பேக்கிங்கை சோதனை செய்த போலீஸ் படைக்கு, அது கமகமக்கிற மணத்தையும், இனிப்புத் தன்மை யையும் கொண்டதாக இருந்ததால் சந்தேகம் ஏற் பட்டது. உடனே க்யூ பிரிவு, விழி பிதுங்கிக் கொண்டிருந்த நாங்கு நேரி பிரிட்டோ, பண்ணைவிளையின் விக்டர், இரண்டு பேரையும் ரெண்டு தட்டு தட்டியிருக் கிறார்கள். அடுத்தகட்ட அடிப்பிரயோகத்திற்கு வாய்ப்புத் தராதவர்கள், பிடிபட்ட பொருளின் தயாரிப்பையும் குணத்தையும் பற்றிக் கடகடவென்று ஒப்பித்திருக்கிறார்கள். தாங்கள் கை வைத்திருப்பது இது வரையிலும், பார்த்திராத, கேள்விப் படாத சரக்கு எனத் தெரியவந்ததும், ஆடிப்போனது க்யூ பிரிவுப் படை.

drugs

போதைப்பொருளான கஞ்சாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஹசீத் எனப்படும் கஞ்சா ஆயில். ஒரு டீஸ்பூன் உட் கொண்டாலே உயரப் பறக்க வைக்கிற, நாள் முழுவதும் கிறக்கத்தில் வைத்திருக்கிற சரக்கு என்று வெளிப்படுத்திய வர்களையும், 3 கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயிலையும், முறைப்படி போதைத் தடுப்புப் பிரிவான என்.ஐ.பி. (சஆதஈஞபஒஈ இமதஊஆம ஞஎ ஒசயஊநபஒஏஆபஒஞச) யூனிட் வசம் ஒப்படைத்திருக்கிறார் க்யூ பிரிவின் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா.

Advertisment

""யாரும் சந்தேகப் படாதபடி, பார்ப்பதற்கு எண்ணெய்போல் தெரிகிற... இந்த ஹசீத் என்கிற கஞ்சா ஆயிலின் இந்திய மதிப்பு 45 லட்சம் ரூபாய். இதனை மாலத்தீவிற்கு ரெகுலராகக் கடத்தியிருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக விவகாரம் ஏற்பட்டதால், தகவல் எங்களுக்கு வந்துவிட்டது. ஏனெனில், இதுபோன்ற கஞ்சா ஆயில் புழக்கம் இதுவரை தெரியாமலிருந்து, இப்ப வெளிவந்திருக்கு''’என்கிறார் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா.

போதைத் தடுப்புப் பிரிவின் உயர் விசாரணை அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, மலைக்க வைக்கிறது அவர்களிடமிருந்து வரும் தகவல்கள்.

“""எள்ளளவு சந்தேகத்திற்கும் இடமளிக்காத, இந்த உச்சபட்ச போதை ஹசீத் கஞ்சா ஆயில், சமையல் எண்ணெய் போன்று தெரிவதால், இந்தப் பேக்கிங்குகளை மிகச்சுலபமாகக் கடல் மார்க்கமாகக் கடத்திவிடுகிறார்கள். தேனியிலிருந்து ஏஜெண்ட் மூலம் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதாகச் சொல்கிற இவர்கள், பாலிதீன் பேக்கிங்குகளில் வரும் கஞ்சா ஆயிலை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு வசதியாக, சமையல் எண்ணெய் என்ற அடையாளத்துடன் டப்பாக்களில் அடைத்து அனுப்புவதற்கு, இவர்களுக்குத் தரப்படும் கூலி தலைக்குப் பத்தாயிரம்.

Advertisment

இந்தக் கடத்தல் செயினின் முக்கியப் புள்ளி கிடைத்தால்தான் இதற்கு எங்கெல்லாம் மார்க்கெட், அனுப்பப்படுகிற நாடுகள் போன்றவை தெரியவரும். எங்களின் விசாரணையில் இதுகுறித்த பல விஷயங்கள் கிடைத் துள்ளன.

dryhs

இந்தச் சரக்கை, தமிழகத்தில் விளைகிற கஞ்சாக்களைக் கொண்டு தயாரிக்க மார்க்கமில்லை. ஆந்திராவிலுள்ள கம்மம், பெல்லாரி, நெல்லூர் உள் ளிட்ட மாவட்டங்களின் ஏரியா நக்சல்கள் நட மாட்டப் பகுதிகளாகும். அந்தப் பகுதியில் கஞ்சா பயிரிடுவது தொழிலாகவே செய்யப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கிற விதைகளைக் கொண்டே ஆந்திராவில் கஞ்சா ஆயில் தயார் செய்கிறார்கள்.

இந்த ஹசீத் கஞ்சா ஆயிலுக்கு சர்வதேசச் சந்தையில் நல்ல விலையும் கிடைக்கிறதாம். குறிப்பாக இப்போது பிடிபட்ட மூன்று கிலோ எடைகொண்ட ஹசீத் கஞ்சா ஆயிலின் மதிப்பு 45 லட்சம் என்றால், வெளிநாட்டுச் சந்தையில் இதன் விலை ஒன்றரைக் கோடியாம். இப்படிக் கொழுத்த லாபம் கிடைப்பதால், ஆந்திரக் கடத்தல் மாஃபியாக்கள், கஞ்சா ஆயில் தயாரிப்பில் ஈடுபட்டு, அதனை ஏஜெண்டுகள் மூலமாக தூத்துக்குடிக் கடல் மார்க்கமாகச் சுளுவாகக் கடத்திவிடுகிறார்கள்.

மாலத்தீவு பிற துறைமுகங்களிலிருந்து அதிக கடல் நாட்டிகல் மைல் தொலைவு என்பதால், மிகக் குறுகிய 280 நாட்டிகல் மைல் தொலைவு கொண்ட தூத்துக்குடி கடல் மார்க்கத்தையே குறிவைக்கிறார்கள் கடத்தல் மாஃபியாக்கள். காற்றும் நீரோட்டமும் சாதகமாக இருந்தால் தூத்துக்குடியிலிருந்து 5 மணி நேரத்திலும், சாதகமில்லை என்றால் ஒரு நாளிலும் மாலத்தீவை எட்டிவிடலாம். அதனால்தான் தூத்துக்குடி அவர்களின் டார்கெட்டாக இருக்கிறது''’’ என்கிறார் அந்த அதிகாரி.

""இதுவரையிலும் வெளியே தெரியாமல் கடத்தப்பட்ட இந்த ஹசீத் என்கிற கஞ்சா ஆயில், கடத்தல் புள்ளிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்விரோதப் போட்டியினால் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது''’’ என்கிறார் என்.ஐ.பி.யின் டி.எஸ்.பி.யான ஜாகீர்உசேன்.