கடந்த ஒரு வார மாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்திய விமான நிலையங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் விரக்தி யோடு அலைந்து திரிவதும், கோபத்தில் குமுறி, விமான நிலைய ஊழியர்களோடு வாக்குவாதம் செய்வதும், கண்ணீர் சிந்திக் கதறுவதுமாகக் காட்சியளித்தன. தீவிர சிகிச்சைக்காக மூக்கில் ட்யூப் பொருத்தப்பட்ட நோயாளிகளும் உறவினர்களும், தங்கள் குழந்தைகளின் பசிக்கு உணவளிக்க ஹோட்டல்களைத் தேடியபடி பரிதவிக்கும் பெற்றோர், சுற்றுலாவுக்கு வந்துவிட்டு திரும்ப வழி தெரியாத வெளிநாட்டினருமாக... கிட்டத்தட்ட பண மதிப்பிழப்பு நாட்களின் அவல நிலையில் அத்தனை பயணிகளும் பதட்டத்தோடு அங்குமிங் கும் அலைந்தபடியிருந்தனர். இண்டிகோ என்ற ஒற்றை விமான நிறுவனத்தின் சண்டியர்த்தனத்தால் தான் அத்தனையும்! இவையனைத்தையும் வேடிக் கை பார்த்தபடி கைபிசைந்து நின்றது மோடி அரசு.
இந்தியாவில் அனைத்து விமான சேவையும் தனியார்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ, ஏர் இண்டியா, ஸ்பைஸ்ஜெட் போன்ற தனியார் விமான சேவை நிறுவனங்களை நம்பித்தான் மக்கள் பயணித்துவருகிறார்கள். இந் நிலையில், விமான விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வும், விமானப் பயணிகளுக்கு நிறைவான சேவை யை அளிப்பதற்காகவும், எப்.டி.டி.எல் எனப்படும் விமான பணிநேரக் கட்டுப்பாடு விதிகளில், வார விடுப்பு, ஓய்வு நேரம், பறக்கும் நேரம் போன்றவற் றில் மாறுதல்களை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (உ.ஏ.ஈ.ஆ.) டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தியிருக்கிறது.
இதன்படி, விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு, வாரத்தில் 36 மணி நேர ஓய்வு, 48 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு விமானி, இரவில் ஆறு முறை விமானத்தை தரையிறக்க அனுமதிக்கப்பட்டதை, தற்போது, இரண்டு முறையாகக் குறைத்துள்ளனர். மேலும், விமானிகள் பணி நேரத்தை ஒரு நாளில் 8 மணி நேரம், வாரத்தில் 35 மணி நேரம் என்றெல் லாம் வரையறுத்துள்ளது. இதுபோன்ற ஒழுங்கு முறையை கொண்டுவருவது குறித்து 2024ஆம் ஆண்டிலேயே விமான சேவை நிறுவனங் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை இண்டிகோ நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவில் இண்டிகோ நிறுவனமானது, தினசரி 2200 உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயணச் சேவையை வழங்கி வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்ட புதிய விதியால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1ஆம் தேதியிலிருந்து தனது விமான சேவையை குறைத்து, ஒரே நாளில் 1000 விமான சேவைகளை ரத்துசெய்து விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/indigo1-2025-12-08-16-05-43.jpg)
இதனால், முக்கியமான அலுவலக மீட்டிங்குகளில் கலந்து கொள்ளவேண்டியவர்கள், உற வினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விமானத்தை எதிர்பார்த்து வந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தங்க ளது பயணம் தடைபட்டதால் செய்வதறியாது திகைத்தனர். அப்பாவின் அஸ்தியை கரைக்கச் செல்லமுடியாமல், அஸ்திக்கலசத்தோடு விமான நிலையத்தில் தவித் துக்கொண்டிருந்தார் ஒரு பெண். கர்நாடகாவின் ஹூப்ளியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒடிசாவிலிருந்து செல்லவிருந்த மண மக்களின் பயணம் தடைபட்டதால், மண்டபத்தில் கூடியிருந்தவர்களின் முன், வீடியோகாலில் தோன்றி, மணமக்கள் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். இவ்வளவு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டபோதும், ஒன்றிய அரசால் இண்டி கோ நிறுவனத்தை கண்டிக்கவோ, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவோ இயலவில்லை. மோடி அரசு முற்றிலும் செயலிழந்து, இண்டிகோவின் மிரட்டலை வேடிக்கை மட்டுமே பார்த்த சூழலில்தான், தனியார்மயமாக்கலின் கொடூர முகம் வெளிப்பட்டது.
புதிய விதிகள் குறித்து முன்கூட்டியே தெரியவந்தும், இண்டிகோ நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய விமானிகளை வேலைக்கு தேர்ந்தெடுக்கவேயில்லை. விடுப்பு எடுத்துச்செல்லும் விமானிகளுக்கு மாற்று விமானி களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமான போக்குவரத்துத் துறை வட்டாரங் கள், இந்நிறுவனம் மீது குற்றம் சுமத்துகின்றன.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி, பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். அதில், 10ஆம் தேதிக்குள் நிலவரம் சரியாகுமென்று தெரிவித்தார். இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, "புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதில் இண்டிகோதான் தவறு செய்கிற தென்றும், விரைவில் நிலவரம் சரியாகுமென்றும்' பொத்தாம்பொதுவாகத் தெரிவித்தார்.
இண்டிகோ விமானங்களின் ரத்தால், விமானக் கட்டணங்கள் தாறுமாறாக ஏற்றப்பட்டு, சென்னையிலிருந்து -பெங்களூர் செல்வதற்கே 70,000 ரூபாய் வரையும், சென்னையிலிருந்து கோவைக்கு 60,000 ரூபாய் வரையும் வசூலித்து கொள்ளை லாபமீட்டிய நிலையில், திடீரென்று, மத்திய அரசு ஒரு கட்டண விவரத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 500 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.7,500 என்றும், 500 -1000 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.12,500 என்றும், 1,000 -1,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.15,000 என்றும், 1,500 கிலோமீட்டருக்கு மேலான பயணத்துக்கு ரூ.18,000 என்றும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண வரம்பு சாதாரண வகுப்புக்கு மட்டுமே பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை சரியாகும்வரை இந்த கட்டணம் அமலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பின் பின்னணியில், விமானக் கட்டணங்களை உயர்த்துவதற்கான மறைமுக அரசியல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/indigo-2025-12-08-16-05-33.jpg)