கோவில் நகரமான திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவரும் பக்தர்கள் சாப்பிடுவதற்காக, கிரிவலப்பாதை மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் விலை அதிகமாகவும், தரமற்றதாகவும் உணவுகள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ளது பிரபலமான நளா ஹோட்டல். இங்கு கடந்த வாரம் ஒரு வாடிக்கையாளருக்கு வைக்கப் பட்ட ரசத்தில் கரப்பான் பூச்சி செத்து மிதந்திருக் கிறது. ரசத்துல கரப்பான் பூச்சி மிதக்குதேயெனக் கேட்டபோது, அந்த ஹ
கோவில் நகரமான திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவரும் பக்தர்கள் சாப்பிடுவதற்காக, கிரிவலப்பாதை மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் விலை அதிகமாகவும், தரமற்றதாகவும் உணவுகள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ளது பிரபலமான நளா ஹோட்டல். இங்கு கடந்த வாரம் ஒரு வாடிக்கையாளருக்கு வைக்கப் பட்ட ரசத்தில் கரப்பான் பூச்சி செத்து மிதந்திருக் கிறது. ரசத்துல கரப்பான் பூச்சி மிதக்குதேயெனக் கேட்டபோது, அந்த ஹோட்டலில் பணியாற்றுபவர்கள், "இதை வெளியில சொன்னீங்கன்னா ஒழிச்சிடுவோம்'' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான வாடிக்கையாளர், அந்த கரப்பான் பூச்சி ரசத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுவிட்டார்! வீடியோ வைரலாகியும்கூட, இந்த ஓட்டல் ஆளுங்கட்சி பிரமுகர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பதால் இதுவரை திரு வண்ணாமலை உணவு பாதுகாப்புத் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ்கிருஸ்டி நம்மிடம், "திருவண்ணாமலை நகரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில பக்தர்கள் வருகிறார்கள். இங்கு சிறியதும், பெரியதுமாக குறைந்தது 150 ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில் சில ஹோட்டல்களில் மட்டுமே தரமான உணவு வழங்கப்படுகிறது. பணத்தை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு சரியான அளவில், தரமான உணவு வழங்காத ஹோட்டல்களில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவதே யில்லை. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நியாயமான முறையில் ஆய்வு நடத்தினாலே பல தவறுகளைத் தடுக்கலாம், ஆனால் அதனை அதிகாரிகள் செய்வதில்லை. வெளிமாநில பக்தர் கள் தரமற்ற உணவை, கொள்ளை விலை கொடுத்து சாப்பிட்டுச் செல்கின்றனர். பாட்டி ஹோட்டல், தாத்தா ஹோட்டல், அத்தை ஹோட்டல், பாரம்பரிய ஹோட்டல்னு பெயர் வைத்து கொள்ளை விலை வைத்து விற்கிறார்கள். இப்படியான சூழலில், அரசுத்துறைகள் தான் தரமற்ற உணவு வழங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டம், செய்யார் அடுத்த கனிஇலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் 5 வயது மகள் காவ்யாஸ்ரீ, ஒரு பெட்டிக்கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கிக் குடித்த சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி இறந்துள்ளாள். தரமற்ற கூல்டிரிங்ஸ் விவகாரமாக, இதுகுறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி குளிர்பான மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். ஆரோக்கியமில்லாத உணவு ஆபத்து என்பதை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.