லிம்பிக், காமன்வெல்த், உலக மல்யுத்தப்போட்டிகளில் கூட இவ்வளவு கடுமை யான சூழலை எதிர் கொண்டிருக்க மாட் டார்கள் நம்முடைய மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும்! அந்த அளவுக்கு நம்மு டைய ஒன்றிய அரசின் அதிகார பலத்தோடு மோதி மோதி தங்கள் சக்தியெல்லாம் வீணாகிப்போன, பெருந்துயர மான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

Advertisment

wr

ஆளும் பா.ஜ.க.வில் மிகவும் பலம்பொருந் திய எம்.பி.யாகவும், இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஒரு வழியாக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 552 பக்கங் களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில், முழுக்க முழுக்க பிரிஜ் பூஷண் சரண்சிங் தரப்புக்கு சாதக மானதாகவே அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. இது, கடந்த ஐந்து மாதங்களாக போராடிவந்த மல்யுத்த வீரர், வீராங்கனை களுக்கு, குறிப்பாக... பிரிஜ்பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய வீராங்கனைகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிரிஜ் பூஷண் மீதான வழக்கு விசாரணை யில், மிகவும் பலவீனமான குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியொரு குற்றப்பத்திரிகை தயாரிக்கப் பட்டதற்கு, ஒன்றிய அரசின் அழுத்தமே காரணமென்றும் குற்றம்சாட்டுகிறர்கள்.

அதிலும் குறிப்பாக, பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த 7 மல்யுத்த வீராங் கனைகளில், 18 வயதுக்கும் குறைவான ஒரு சிறுமி யின் குற்றச்சாட்டு மிகமுக்கியமானது. போக்சோ வழக்கில் பிரிஜ் பூஷணை சிறைக்குள் தள்ளக்கூடிய தன்மைகொண்டது. இதைப் புரிந்துகொண்ட ஒன்றிய அரசோ, அந்த வீராங்கனைக்கும், வீராங் கனையின் குடும்பத்தாருக்கும், தங்கள் புகாரை வாபஸ் பெறும்படி பல்வேறு வழிகளில் அழுத்தத் தைக் கொடுத்தது. அதன் எதிரொலியாக, அந்த வீராங்கனையின் தந்தை, கடந்த ஜூன் 5ஆம் தேதி, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புதிய தொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், பிரிஜ் பூஷண் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்திருந்தார். இது, பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுக்களில் ஓர் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இதையடுத்து தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், சிறுமியின் தந்தை அளித்த மனுவின் அடிப்படையில், பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு, குழந்தைகளைப் பாதுகாக்கக்கூடிய போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லையென்றும் குற்றப்பத்திரிகையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், மல்யுத்த வீராங் கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத் துமே போலியானவை என்பதைப்போல், ஒட்டு மொத்தமாக, அவர்களின் சட்டரீதியான, ஜன நாயக வழியிலான போராட்டங்கள் அனைத்தை யும் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. இதன்மூலம், இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறது ஒன்றிய அரசு?